
* ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது நல்லது.
* கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
* நாகர்கோவிலில் உள்ள நாகர் தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு, பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.
* அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழும் பாக்கியத்தை பெறுகிறார்கள். அதோடு மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள்.
* கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.
* கேது காயத்ரி......
ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய
தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத்.
* கேது ஸ்லோகம்......
பலாச புஷ்ப சங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம்கேதும் ப்ரணமாம்யஹம்.
இந்த மந்திரங்களை காலை, மாலை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதை அலையவிடாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து 108 முறை சொல்வது விசேஷ பலனைத்தரும்.
* கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.
* கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது அல்லது விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும்.
* மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறுதோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.
* கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, ஆஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்.