(பக்கம் 161-169)
ஒரு சமயம், பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின்
கரும்புத் தோட்டத்தில், யாமும் நமது குருநாதர், நாங்கள் இரண்டுபேரும்
இருந்து கொண்டிருக்கின்றோம்.
“நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டா,
வித்தையைக் காண்பிக்கிறேன்டா”
என்று சொல்லி விட்டு, குருநாதர் என்ன செய்தார்?
கரும்புச் சக்கை சுற்றி கிடக்கின்றது. கரும்பு ஆலை இயங்கி
கொண்டிருக்கின்றது. கரும்பு ஆலையில் சக்கை சரியாக வரவில்லை என்றவுடன்
இருவரும் சென்றோம். கரும்பு ஆலைக்குள் போனவுடன்,
சாறை எடுத்து குடிடா, என்றார்.
குடித்தேன், அந்த பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி, எம்மை அழைத்து சென்றார்கள்.
குருநாதர் நானும் வருகிறேன் என்றார். கூட்டிக் கொண்டு சென்றோம்.
உள்ளே சென்றவுடன், அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.
குருநாதர், இரண்டு பேரும் போகலாம், என்றார். போனோம்.
போனவுடன், என்னிடம் மிஷினை ஓட்டுடா என்றார்.
ஆயிலும் இல்லை, ஒன்றும் இல்லை, மிஷினை ஓட்டச் சொன்னால், எப்படி ஓட்ட முடியும் என்றேன்?.
ஓட்டுடா என்கிறேன், சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான், திருட்டுபய
ஓட்டுடா, என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக்
கொண்டிருக்கிறாய். சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய், உதை என்கிறார்.
எனக்கு ஒன்றும் தெரியாது சாமி, என்கிறேன்.
இவன் என்னென்னமோ சொல்கிறான், இவன் என்னமோ பண்ணிவைத்துவிட்டான். இவன்தான்
செய்து வைத்திருக்கிறான் என்று திட்டிவிட்டு, என்னென்னமோ பண்ணினார்.
கரும்புச் சாறும் வந்தது. கரும்புச் சாறு வந்தபின், முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது. அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார்.
இராமசாமி நாயுடுவுக்கு, எல்லாம் தெரியும். இராத்திரி பனிரெண்டு மணிக்கு,
நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம், குருநாதர் ஒரு பையில் எடுத்து
வைத்துவிட்டார். இராத்திரி கை கால் வராமல் முடங்கிக் கொண்டு, அவர் சில
வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.
எங்களைச் சுற்றிக்
கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார். இரண்டு
பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள். சுற்றி
தீ எரிந்தால், கரும்புக் காடு எல்லம் எரிந்துவிடும்.
“ஐய்யயோ,
இவன் தீயை வைத்துவிட்டான், தீயை வைத்துவிட்டான்” என்று என் பெயரைச் சொல்லி
சத்தம் போடுகிறார். இப்படி சத்தம் போடுகிறார். “என்னைக் காப்பாற்றுங்கள்,.
என்னைக் காப்பாற்றுங்கள், என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான்,
பாவிப்பயல்” என்று சத்தம் போடுகிறார், கை கால்களை இழுத்துக் கொண்டே, சத்தம்
போடுகிறார்.
மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போகமுடியவில்லை. வேஷ்டியிலும் தீ
பிடித்துவிட்டது. அணைப்பதற்கு தண்ணீர்கூட, அந்த இடத்தில் இல்லை.
சாமி, வேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றால்,
ஏன்டா, தீயை நீ வைத்துவிட்டு, என்னை ஏன்டா சொல்கிறாய்? என்கிறார் குருநாதர்.
இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார். தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும்
ஒரு நிமிடம் தான் இருக்கிறது, அந்த அளவில் இருக்கப்படும்போது,
இந்த தீ எப்படி பரவுகிறது?
இந்தத் “தீயிற்கு” உண்டான ஆற்றல் என்ன?
அவனுடைய ஆசை, எப்படி இந்த கரும்புச் சாறுக்காக வேண்டி, எந்த ஆசையில்
கொண்டு வந்து, இங்கே ஆலையை வைத்தான்? என்று, இத்தனை உணர்வை அங்கே
காட்டுகின்றார்.
அவன் பணத்திற்காக வேண்டி, ஆசைப்பட்டு
வைத்தான். நீ, சக்தி பெறவேண்டுமென்ற நிலைகளில், இங்கே வந்து
கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றது, நீ எங்கே
தப்பப் போகின்றாய்?
நீ, ஆசையின் நிலைகளில் இருந்து
கொண்டிருக்கின்றாய். அவன், ஆசையில் அங்கே இருக்கிறான். ஆனால், அவன் வெளியே
இருக்கிறான். நீ இங்கே இருக்கின்றாய்.
அந்த இடத்தில்,
உபதேசம் எப்படி கொடுக்கிறார் பாருங்கள். எல்லாவற்றையும் போட்டு, நசுக்கி,
தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும், சுற்றி அனல் தாங்க
முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில்,
இருந்து கொண்டிருக்கிறேன்.
அவன் ஆசையில் வந்தான். சொன்னான்,
கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான். உன்னைப் போற்றினான், நீயும்
எல்லாம் பண்ணினாய். இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது. இப்பொழுது என்னை
யாரடா காப்பாற்றப் போகிறார்கள். சக்தி என்ன ஆனது? என்று கேட்கிறார்.
தீ பிடிக்கிறது, எல்லாம் பண்ணிவிட்டு, என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான்.
என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான், என்னைக் காப்பாற்றுங்கள், என்றார்
குருநாதர்.
அவர்கள், அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. என்
கரும்புக் காடெல்லாம் போகிறதே, இங்கே தண்ணீர் ஊற்று, அங்கே தண்ணீர் ஊற்று,
மோட்டாரைப் போடு என்றாலும்கூட, அங்கே கரண்ட் சுவிட்ச், தண்ணீராகி
விட்டதால், மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது. இந்த அளவுக்கு
ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு, நம்மைப் பார்க்கிறார்.
அப்படியெல்லாம் சிக்க வைத்து, நமக்கு உணர்த்தினார்.
அவ்வாறு
உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கஷ்டத்தைப் போக்குவதற்கு,
கஷ்டம் வரும்போது, அதை நிவர்த்தி செய்யச் சொன்னால், “நேரம் இல்லை”
என்கிறீர்கள்.
இப்படி, அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப்
புகுத்தி, எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்துவிட்டது. அப்படி
மரணமடையும் நிலைகளில்தான்,
அவருடைய ஆசை என்ன செய்தது?
அந்த ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும்,
அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது.
அவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், நீ எல்லா சக்திகளை பெற்றாலும்,
புகழுக்காக வேண்டி இதை செய்தாய். நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும்போது,
உன் புகழ் எங்கே போகப்போகிறது? இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு, நீ
என்ன பண்ணப்போகின்றாய்? என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய்.
நான் என்னடா பண்ணட்டும்? என்கிறார் குருநாதர்.
கொஞ்ச நேரம்
கழித்து, ஹா.. ஹா. என்று சிரித்துவிட்டு, இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே
மனிதனாகப் போகும்போது என்னவாகும்? என்பதை உணர்த்தினார்.
என்
வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. மரணமாகக் கூடிய தருணம், வேஷ்டி தீ பிடித்து
எரிகிறது. வேறு வழியே இல்லை. அப்பொழுது நெருப்புக்குள் இருந்து, அந்த
உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.
ஆனால், நீ மரணமடையப்
போகும்பொழுது எந்த நிலை? உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள்
என்னென்ன செய்கிறது? என்று சொல்லி, அந்த உணர்வைக் காட்டினார்.
என் உடலில் தீ பிடிக்க வைத்து, அந்த மாதிரிச் செய்தார். அணுக்களின்
செயலும், உன் ஆசையின் நிலைகளும், உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின்
நிலை எப்படி? என்று உணரச் செய்தார்.
இதையெல்லாம் முதல்
புத்தகத்தில் கொடுக்கவில்லை. கொடுத்தால், பயந்துவிடுவீர்கள். இப்படியும்
இருக்கிறதா? என்று கொடுக்கவில்லை. இப்படியெல்லாம் உணர்ந்து இதை
வெளிப்படுத்தியபின், அப்பொழுதுதான் அணுவின், ஆற்றலின் தன்மையைக்
காட்டுகின்றார்.
இப்படிக் கண்டுணர்ந்த நிலை போல, இன்று
உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு இப்படி வந்துவிட்டது. அவனுடைய ஆசையில்,
தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே இன்று, அவன் அதற்குள்ளேயே
போய் சிக்கிக்கொண்டான். இது, இன்றைய விஞ்ஞான அறிவு..
ஏனென்றால், இன்று விஞ்ஞானிகள் மனிதனுக்குள் இயற்கையின் நிலைகளில், இதனுடைய
அலைகளை வைத்து, ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.
மனிதன், அந்த சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான்.
இதையெல்லாம், பின்னாட்களில் இந்த விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு
நிமிடத்திலும், யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.
ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும், உயிரையும் ஈசனாக மதித்து, அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து,
அந்த அணுவின் இயக்கங்களுக்குள்,
உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு,
உடலின் நிலைகளில் பதிவு செய்கின்றோம்.
இந்த உணர்வின் அலைகளை, நீங்கள் பெறவேண்டுமென்று, நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால், எவ்வளவு சிரமப்பட்டு உங்கள் நிலைகளையும், நீங்கள் விஞ்ஞான
அழிவிலிருந்து மீளுவவதற்கு, இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து, உங்களுக்குள்
ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும், இதை சிந்திப்பார் யாரும் இல்லை.
ஆனால், நமக்குள் எடுத்துக் கொண்ட, இவ்வளவு பெரிய ஆற்றல்களையும், நமது குருநாதர், எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால், இந்த உடலிலிருந்து எவ்வளவு காலம் யாம் இயங்கமுடியும்? அதற்குள்,
இதை பெருக்கிக் கொண்ட நிலைகள் கொண்டு, நாளை வரக்கூடிய விஞ்ஞான உலகத்திலே,
நாளைய எதிர்காலத்தை சிந்தித்து, ஒவ்வொருவரும் இந்த நிலைகளைச்
செயல்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காகத்தான் இவ்வளவு பாடுபடுகின்றேன்.
என் குருநாதர் இட்ட கட்டளைப்படி, ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு
செய்திருக்கின்றோம். ஆகவே, தவறான நிலைகள் கொண்டு, இன்று விஞ்ஞான நிலைகள்
கொண்ட அலைகள், உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது, அதை மாற்றும்
நிலைவேண்டும்.
அதற்குத்தான், துருவ நட்சத்திரத்தின் பேரருளை,
ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள். அதே துருவ நட்சத்திரத்தின்
பேரருளை தனக்குள் கூட்டியபின், மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள். அந்த
அத்திரி மாமகரிஷியின் அருள்சக்தி, நீங்கள் பெறுவதற்கு, எமது அருளாசிகள்.