Pages

3. பொதுநலத்தில் சுயநலம்

எனக்குச் சுயநலம் அதிகம். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அது எனக்குள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
நீங்கள் எல்லாம், மகிழ்ச்சியாகச் சொல்லும் பொழுது,
மகிழ்ச்சி எனக்குள் விளைகின்றது.
இந்த சுயநலத்தைக் கருதித்தான்,
உங்களுக்குள் இந்தப் பொது நலத்தின் சக்தியைப் பரப்புகின்றது.


நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று, சுயநலமாக எண்ணும் பொழுது, அதுபோல் நீங்களும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்த சுயநலம் - பொது நலமானாலும், சுயநலம்தான். ஆயிரம் பேர் சேர்ந்து, ஒன்றாக இருக்கும் பொழுதுதான் மகிழ்ச்சி.


பல இலட்சக்கணக்கான உணர்வை, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்கள்தான் மகரிஷிகள். பல கோள்களுடைய உணர்வுகளை மாற்றும் பொழுதுதான், சூரியனுடைய ஒளி.


ஆகவே, நமக்குள் இந்த உணர்வின் இயக்கத்தில் வந்தால், “உயிரின் ஒளி” இதைப் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையில்,
நமது ஆறாவது அறிவு கொண்டு,
எப்பொருளையும் அறிந்து,
எப்பொருளையும் கண்டுணர்ந்து,
படைத்திடும் உணர்வு கொண்டு செயல்படுவோம்.


இந்த ஆறாவது அறிவுதான் சரவணபவா, குகா, தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய உடலான குகைக்குள் நின்று, கந்தா – வருவதை அறிந்து, கடம்பா – உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா. எதனையும் அறிந்து உருவாக்கத் தெரிந்து கொண்டவன். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.


இவ்வளவு எளிதில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கியபின், நாம் ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்? முன்னோக்கியே போவோம். அருள் ஞானிகளின் உணர்வோடு செல்வோம். எமது அருளாசிகள்.