குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, யாம் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றோம். எம்மை எத்தனையோ நிலைகள் கொண்டு, பல பேர் சந்திக்க வருகின்றார்கள். அப்படி வருகின்றவர்களில்,
நோய் உள்ளவர்களுக்கு யாம் ஆசீர்வதித்து,
“உங்களுக்கு இப்பொழுது நோய் இல்லை,
நீங்கள் போங்கள்” என்று சொன்னால்,
“நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்” என்கிறார்கள்.
“இனி நோயெல்லாம் நீங்கிப் போகும்” என்று
யாம் அவர்களிடம் சொன்னால்,
“இல்லைங்க, என் தொல்லை
என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது”
என்று சொல்கின்றார்கள்.
தபோவனத்தில் ஒரு சமயம், ஒரு அம்மா எம்மிடம் இதைப் போன்று கேட்டுக் கொண்டிருந்தது. பின், எம்மிடம் “நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. என் வீட்டிற்குப் போனால், பழையபடித் தொல்லையாக இருக்கின்றது” என்றார்கள்.
யாம் அவரிடம், நீங்கள் வீட்டுக்குப் போனாலும், இதே போன்றே ஆத்ம சுத்தி செய்து, “நோய் இல்லை” என்று நல்லதாக எண்ணுங்கள் என்று சொல்லுகிறோம்.
ஆனால், என் வீட்டுக்குப் போனால், “என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது”, என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு விடுகின்றார்கள்.
“நோய் இல்லை, நீங்கள் போங்கள்” என்ற நல்ல வாக்கினைக் கொடுத்து, “தியானத்தைப் பின்பற்றுங்கள்” என்று சொன்னால், அதைக் கேட்பார் யாரும் இல்லை.
“சாமிக்கென்ன தெரியும்?
நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்” என்கிறார்கள்.
ஆனால், இவர்களைத் திட்டுபவர்களை மட்டும் மனதில் எண்ணி, “இரு உன்னைப் பார்க்கிறேன், உன் குடும்பத்தைத் தொலைத்துக் கட்டுகிறேன்” என்று அதை இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்.
ஆக, அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால், இவர்கள் எண்ணிய உணர்வுகள் உடலுக்குள் புகுந்து, இவர்கள் உடலையே தொலைத்துக் கட்டுகிறது என்பதை, மறந்து விடுகின்றார்கள்.
சில வீடுகளில் பாருங்கள். கொஞ்சம் “சுருக்” என்று சொன்னால், “இவனை விட்டுவிடுவதா?, இவன் எப்படிப் பேசுகிறான் பார்” என்று வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள். “நீ இப்படிப் போய்விடுவாய், அந்த மாதிரிப் போய்விடுவாய்” என்று பேசுவார்கள்.
அப்படிப் பேசுபவர்களிடத்தில் பார்த்தோம் என்றால், உடல் வலி, கை கால் குடைச்சல், கண் எரிச்சல், தலை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, கால் வலி, எல்லா வலியும் இருக்கும். ஆக, இது பேசிவர்களுக்கு.
இதையெல்லாம் பேசாமல், வேடிக்கையாக பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவுடனே, “இப்படிப் பேசுகின்றார்களே பாவி’, என்று சண்டை போடுபவர்களைப் பார்த்து, பொல்லாதவர்களை எண்ணுவது.
அதே சமயத்தில், நல்லவர்களைப் பார்த்து, “இப்படி இருக்கின்றதே”, இங்கே இரக்கமும், அங்கே ஆத்திரமும், இரண்டும் எடுத்துவிடுகின்றோம். இது வந்தவுடன் “அம்மம்மா.. வயிறு எல்லாம் எரியுதே”, என்பார்கள். அவர்களுக்கு இந்த நோய் வரும்.
நாம் நல்லவர்கள்தான், ஆனால் இந்த மாதிரி, என்ன செய்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது, “என் குடலை முட்டுதே, எப்படியோ ஆகின்றதே? நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே, என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே? நான் வணங்கும் தெய்வமும், இப்படிச் செய்கின்றதே”, என்று இதைத்தான் எடுத்து, நமக்குள் கூட்டிக் கொள்கின்றோமே தவிர, தெய்வம் எங்கு இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது என்பதனை, மகா ஞானிகள் காட்டியதை, உணரும் பக்குவம் இல்லை.
இதனை, வியாசக பகவான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அந்த எண்ணத்தை உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது. “ஓ” என்று எண்ணிய உணர்வின் சத்து “ம்” என உடலாக சிவனாக ஆக்குகின்றது.
இதுவே, ஓம் நமச் சிவாய, நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ, அந்த உணர்வின் சத்து இறையாகி, அந்த உணர்வின் சத்து இறையாகி, இறைவனாகுகின்றது. அந்த இறையின் சக்தி, நமது உடலுக்குல் இணையப்படும் பொழுது, இறையாகி இறைவன் ஆகி, நமக்குள் செயலாக்கும் பொழுது, தெய்வமாகின்றது.
நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அந்தக் குணங்களே தெய்வமாக நின்று, நம்மைச் செயல்படுத்துகின்றது. கோப குணம் என்பது “காளி”. கோப உணர்வுகள் நாம் எண்ணியதைக் காத்திடும் நிலையும், நமக்குள் ஆத்திரத்தையும், “அவனைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்” என்ற உணர்வையும் எடுக்கின்றது.
நாம் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது, அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள், நமது நல்ல குணத்தை நமக்குள்ளே தொலைத்துக் கட்டி, அந்தக் காளியின் ரூபமாக நமக்குள் கொதிப்படைந்து, இரத்தக் கொதிப்பாக மாற்றி, என்னால் முடியவில்லையே, தலை சுற்றுகிறதே என்ற நிலை வருகிறது.
கீதையிலே “நீ எதை நினைக்கின்றாயோ,
அதுவாகின்றாய்” என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது.
ஆகவே, நாம் எதுவாக ஆக வேண்டும்?
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நம் குரு காட்டிய அருள் வழியில் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி, அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி, நம் உயிரான ஈசனை மதித்து, எல்லோருடைய உயிரையும் ஈசனாக மதித்து, அருள் வழியில் வாழ்வோம். என்றும் உயிரோடு ஒன்றி, அவனுடன் இணைந்து, அவனாக மாறி, பிறவியில்லா நிலை என்ற நிலையை எல்லோரும் அடைவோம். எமது அருளாசிகள்.
4. கஷ்டத்திலிருந்து விடுபட, குரு வழியில் நாம் என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கவேண்டும் என்றால், அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும், என்று எண்ணி, அந்த மூச்சலைகளை எடுக்க வேண்டும்
ஆனால், எம்மிடம் (குருவிடம்) கேட்கும்பொழுது, “என் வீட்டில், கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேங்கிறது” என்றுதான் கேட்பார்கள். ஏனென்றால், இந்த உணர்வின் தன்மை அதைப் பேசவைக்கும்.
யாம் இதை நீக்குவதற்குத்தான், அதாவது இந்த உணர்வின் எண்ணத்தை, உங்கள் உடலில் இருந்து, “கஷ்டம்” என்ற சொல்லை நீக்குவதற்குத்தான், “இத்தனை உபதேசங்களையும்” கொடுக்கின்றோம்.
விஷத்தின் தன்மையைச் சுவாசிக்கும், இந்த உணர்வை நீக்குவதற்குத்தான் இத்தகைய உபதேசமும், இந்த நிலையும் கொடுக்கின்றோம். நாம் இனி என்ன செய்ய வேண்டும்?
மெய் ஒளியின் தன்மை, துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எடுக்கும் போது, இந்த உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கும்போது, உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்ப உணர்வினுடைய நிலைகளை நீக்குகின்றது.
உங்களுக்குள், அருள் உணர்வின் தன்மையைச் சுவாசிக்கச் செய்து, இருண்ட நிலைகளில் இருந்து, அந்த உணர்வின் தன்மையை மாய்த்து, நஞ்சை மாய்த்து, நாம் எப்படி கருணைக்கிழங்கை வேகவைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்கி, நமக்குள் போசாக்கான நிலைகள், சத்தாக நமக்குள் உட்கொள்ளுகிறோமோ, அதைப்போன்று, ஒவ்வொரு நிலைகளிலும் நன்மை பெறும் சத்தாக, நமக்குள் உருவாக்குவதற்கே இந்த நிலைகளைச் செய்கின்றோம்.
ஏனென்றால், நீங்கள் தியானமிருப்பதைக் காட்டிலும், இந்த உபதேசத்திற்குள், உங்களுக்குள் உணர்வின் வித்துக்கள், நல்ல வித்துக்களை ஊன்றியிருக்கின்றேன்.
இதை மறவாது, அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து, அடுத்து நீங்கள் வாரத்தில் ஒரு நாள், கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து, கணவன் மனைவி இம்முறைப்படி செய்தால், இந்த வாழ்க்கையிலே மனிதனுடைய கடமையை, பூரணமாக நீங்கள் ஏற்றுக் கொண்டவர்கள் ஆகிறீர்கள்.
இந்த வாழ்க்கையிலே, இந்த விஞ்ஞான உலகத்தில் வரக்கூடிய எத்தகைய நச்சுத்தன்மை இருந்தாலும், அதை மாய்த்துவிட்டு, உங்களுக்குள் இந்த ஒளியின் சுடராக நீங்கள் பெறமுடியும்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும், உங்களுக்குள் இருக்கக்கூடிய உயிரை, ஈசனாக மதிக்க வேண்டும். எதை எண்ணி நீங்கள் வலுக்கொண்டு கொடுக்கின்றீர்களோ, அதை நிச்சயம் அவன் (நமது உயிர்) சமைத்துவிடுவான்.
5. நம் உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை, குரு அருளால் நாம் நீக்க முடியும்
ஒரு நாள் இரவு, மழையுடன் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பெண் குழந்தை ஒன்றை இளம்பிள்ளை வாதத்துடன், (இரண்டு காலும் ஆடிக்கொண்டிருக்கிறது) தபோவனத்திற்கு, எடுத்துக் கொண்டு வந்தார்கள். காலை 05.30 முதல் 6 மணிக்குள் இருக்கும்.
அழுது கொண்டு வருகிறார்கள். இந்த இளம் பிள்ளை வாதம் வந்து, இரண்டு வருடம் ஆகிவிட்டது. பெண் குழந்தையாக இருக்கிறது. ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று, பொலபொலவென்று அழுது கொண்டே இருந்தார்கள்.
ஆரம்பக் காலங்களில் இது நடந்தது. அப்பொழுது, கொஞ்சம் ரூம்கள்தான் இருந்தது. குழந்தைக்குச் சரி செய்துவிட்டோம். எழுந்து நடந்தது. அதன்பின், சாமி எப்படி இருக்கிறார்? என்று எட்டிக்கூட பார்க்கவில்லை. வைத்தியம் பார்த்தது, அவளுக்கு சௌகரியமாக போய்விட்டது.
நாளைக்கு நீங்கள் கஷ்டப்படாதபடி, இந்த மூச்சை எடுத்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று இதையும் கொடுத்துள்ளோம். உடம்பு நல்லதாக ஆகவேண்டும் என்று எண்ணும்போது, இந்தத் தியானம் செய்வதாலே, உடம்பு நல்லதாக ஆகி விடும். வரக்கூடிய கெடுதலும், உங்களாலேயே காப்பாற்றப்படும்.
சாமியாரைத் தேடிப் போகவேண்டும், ஜோசியம் பார்க்கவேண்டும்,
என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர,
தனக்குள், அந்த உணர்வை வராமல் தடுத்துக் கொள்ள,
இப்படிச் செய்யுங்கள் என்கிறோம்.
இதைக் கவனிக்கமாட்டேன் என்கிறார்கள்.
உடம்புக்கே சௌகரியம் இல்லாமல் போவிட்டாலும் கூட, அப்பொழுது எண்ணலாம் என்றாலும் கூட, நேரமில்லை என்றுதான் சொல்கிறார்கள். காசைக் கொடுத்துவிட்டு, உடம்பை நிவர்த்தியாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
ஆனால், மனிதனாகப் பிறப்பது ரொம்ப அபூர்வம். நாம் எடுக்கக்கூடிய துன்பத்தை சுவாசித்தவுடன், நம் உடலில் புண் வருகிறது, சிரங்கு வருகிறது, அது வருகிறது, இது வருகிறது என்றால், இந்த உணர்வின் அணுக்களாகச் சேர்த்து, உயிராத்மாவில் சேர்ந்துவிடுகின்றது.
ஆகவே, ஒவ்வொருத்தரும் உங்களை முழுமையாக நம்புங்கள். உங்கள் அம்மா அப்பாவை, தெய்வமாக எண்ணுங்கள்.
யாம் சொன்ன மாதிரி, துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள். உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலை, அவன் அமைத்துக் கொண்ட கோயில் என்று நினையுங்கள்.
உங்களிடம் உள்ள நல்ல குணத்திற்கு, அதை வளர்ப்பதற்கு, துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள். ஞானிகளின் உடலில் விளைந்த, நல்ல சக்தியை எடுப்பதற்கு, இந்நேரம் வரையிலும் உபதேசித்து அந்தச் சக்தியை கொடுத்திருக்கிறோம். இதைப் பெறுவதற்கு, ஆத்மசுத்தி என்ற வாக்கையும் கொடுக்கிறோம்.
இதைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை, நிவர்த்தி பண்ணுங்கள். இவ்வளவு சுலபமாகக் கொடுக்கிறோம். உங்களால் நிச்சயம் தீமைகளை நீக்க முடியும்.
6. முந்தைய தீய வினைகள் நம்மை இயக்கும் நிலைகள்
நமது அன்பர் ஒருவர், ஆட்டோவை வேகமாக ஓட்டி வருகிறார். அப்பொழுது, அது அவருக்குக் குஷியாகத் தெரிகிறது. ஆனால், தபோவனத்தின் கேட்டின் பக்கம் வரும்போது, பிரேக் போட்டவுடன், சரியான நேரத்தில் திருப்பாமல் விட்டதால், கவிழ்ந்து விட்டது. அவர் தப்பி விட்டார். வண்டியில் இருந்தவர் சிக்கிக் கொண்டார்.
இதற்கெல்லாம் காரணம், நமது உணர்வுகளில் வேகம் எதுவோ, அதில் மகிழ்ச்சியைத் தூண்டும். அதனின் வேகச் செயலாக வேலை செய்யும். இதன் விளைவு நமக்குள் எப்படி ஊட்டும்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.
இதேமாதிரிதான், நாம் ஆர்வமாகத் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி ஆர்வமாக இருக்கும்போது, முந்தைய நிலைகள் நமக்குள் இயக்கும்போது, “என்னத்தை எடுத்தோம், இப்படி வருகிறதே” “நாம் ஜெயிக்கவில்லை, நம்மால் முடியவில்லை போலும்” என்று விரக்தி அடைந்துவிடுவார்கள்.
யாம் நீங்கள் அனைவரும் பெறவேண்டும், என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றோம். இந்த உணர்வின் தன்மை, மனக்கட்டுப்பாடு இல்லாதபடி இயக்கி வருகிறது.
ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள்
குறுக்கே குறுக்கே வருகிறது.
“நாம் செய்யும் தியானம், சரியாக இல்லையோ”
என்று எண்ணத் தூண்டும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், முந்தைய நிலைகளில் பதிவு செய்த நிலைகள் நமக்குள் உண்டு. அதை நாம் அடக்க வேண்டும். இந்த ஆறாவது அறிவிற்குள், அந்த மெய்ஞானிகளின் உணர்வைக் கவரும் திறமையாக வரவேண்டும். இதைப் படைக்க வேண்டும்.
இதுதான், பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். இந்த ஆறாவது அறிவால், நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும், அதை ஞானமாக்க வேண்டும்.
இதைத்தான் உங்களுக்குள் அடிக்கடி பதிவு செய்கிறோம். நம்மையறியாது வரும் தீங்குகளை, எப்படி நீக்கிப் பழக வேண்டும் என்று, இப்பொழுது பல வழிகளிலும் உபதேசிக்கின்றோம்.
7. நாளைக்கு வரக்கூடிய அணுகுண்டின் விஷத்தையும், குரு அருளால் நாம் மாய்க்க முடியும்
யாம் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும், அந்த மெய்ஞானிகளின் உணர்வை, உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான். இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றோம். நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தால் போதும். தெரிந்து ஒன்றும் எடுக்கப் போவதில்லை.
இந்த வித்து, உங்களுக்குள் வளர்ந்துவிட்டால், ஓம் ஈஸ்வரா என்று அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறுவதினாலே, அந்தச் சக்தி உங்களுக்குள்ளே வளரத் தொடங்கும். உங்களைக் காக்க, இந்த உணர்வினுடைய நிலைகள் வளரும். அதற்குத்தான், இப்பொழுது யாம் உபதேசிப்பது.
நீங்கள் என்னைப் போல் காட்டுக்குள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும், மிருகங்களுக்குள்ளேயும், சேற்றுக்குள்ளேயும், கடும் மழையிலேயும், அட்டைக்குள்ளேயும், போய் என்றைக்குப் போய் இதை நீங்கள் கற்றுக் கொள்வது? என்றைக்கு நீங்கள் தெரிந்து கொள்வது? இந்தச் சத்தை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்வது?
அதற்கு நேரமும் இல்லை, காலமும் இல்லை, நீங்கள் சாப்பாட்டிற்குப் பார்ப்பீர்களா? சக்தி வளர்ப்பீர்களா? குருநாதர், எம்மை ஒருவரை உருவாக்கினார். குருநாதர் சொன்னதைச் செய்தோம். எமக்குக் குருநாதர் எப்படிச் சொன்னாரோ, அதே மாதிரி, உங்களை நீங்கள் காத்துக் கொள்வதற்காக, இதைச் சொல்கின்றோம்.
ஆகையினாலே, இதை அலட்சியப்படுத்தி விடாதபடி, என்னமோ சாமி, விஞ்ஞானத்தைப் பற்றி, சொல்கிறார், இதைப் பற்றி சொல்கிறார் என்று எண்ணிவிட்டு, சாமியிடம் கொஞ்சம் விபூதி வாங்கிச் சென்றால், தலைவலி போனால் போதும், உடல் வலி போனால் போதும், என்ற நினைப்பிலே சில் பேர் இருப்பார்கள்.
யாம் சொல்லும் இந்நிலைகளை எடுத்தால்,
உங்களுக்குள் அந்த தலைவலியை
நீங்கள், உங்கள் மூச்சினாலே
உங்களுக்குள் வராமலே தடுக்க முடியும்.
இதை வராமல் தடுத்து விட்டீர்களென்றால், நாளைக்கு வரக்கூடிய, எத்தகைய அணுகுண்டின் விஷத் தன்மையையும், உங்களாலே தடுக்க முடியும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல ஒருவர் உங்களுக்கு, கெடுதல் செய்து கொண்டே இருக்கிறார் என்றால், நீங்கள் ஒவ்வொரு எண்ணத்தையும், யாம் சொல்கின்ற மாதிரி, ஆத்ம சுத்தி செய்துவிட்டு, உங்கள் எண்ணத்தைப் பாய்ச்சி, நாளை அவர், எனக்கு நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணினால், அந்த எண்ணங்கள் மாறிவரும். நாளைக்கு, அணுகுண்டு போன்ற எதிர்ப்பான நிலைகள் வரும் பொழுது, உங்களாலே தடுக்க முடியும், என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதே மாதிரி, உங்களுக்குள் எனக்குக் குழந்தை இல்லை, அது இல்லை, இது இல்லை, நீங்கள் நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். அதையெல்லாம் நீங்கள் அறவே விட்டுவிடுங்கள்.
யாம் சொல்கின்றபடி, ஆத்ம சுத்தி, தியானம் செய்து, “எனக்குக் குழந்தை உண்டு” என்று யாரொருவர் எண்ணினாலும், கண்டிப்பாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்.
நாளைக்கு வரப்படும் பொழுது, அது ஞானக் குழந்தையாக வரும். அது எடுக்கும் மூச்சு, உங்களைக் காக்க உதவும். அதே சமயத்தில், அந்தக் குழந்தை வளரும் நிலைகள் கொண்டு, நீங்கள் எடுத்துக் கொண்டது, நாளைக்கு விஞ்ஞானத்தில் வரக்கூடிய தீய அலைகளை, நம்மை மயக்கும் நிலையை, அந்தத் துடிப்பின் நிலையைத் தடுக்கவும் முடியும். இது உங்களுக்குப் பரிட்சை.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்கள் அனைவருக்கும், இந்த ஆற்றலைக் கொடுக்கிறோம்.
எப்பொழுதும் யாம் தியானமிருக்கின்றோம்.
உங்களைக் காக்க வேண்டுமென்ற நிலையிலே, உங்களை எண்ணி,
பேரண்டத்தின் நிலைகளின் சில சத்துகளை எடுத்து, யாம் தியானிக்கின்றோம். இப்பொழுது நீங்கள், உங்கள் கஷ்டத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும், மூச்சலைகளை எல்லாம் மாற்ற வேண்டும்.
உங்களுக்கு, கஷ்டத்தை மாற்றியமைக்கக் கூடிய சத்து கிடைக்க வேண்டும் என்று, இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம்.
வீட்டிலிருந்து கொண்டே,
உங்கள் கஷ்டத்தையெல்லாம் போக்க,
இதைப் போன்று யாம் சொல்லும் நிலையை,
எண்ணுவதற்குச் சிரமமா?
சாமியிடம், விபூதி வாங்கிச் சென்றால் போதும். “உட்கார்ந்து தியானிக்க நேரமில்லை”, எனறு விட்டுவிடாதீர்கள். சமையல் பண்ணும் பொழுது, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, உயிரை எண்ணிக் கொண்டு, நாங்கள் சமைப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை, எல்லொரும் பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
கஷ்டங்களை எல்லாம், நீங்கள் மாற்றி அமைப்பதற்காகத்தான், யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் முறை.