Pages

குரு நாதர் பிருகு முனி நாடியில் இருந்து எடுக்கப்பட தகவல்கள்

1  திருக்கள்ளில் (திருக்கண்டலம்)


கீழ் வரும் பாடல் பிருகு மகரிஷி வாழுந்து வழி பட்ட திருக்கள்ளில் என்ற இடத்தில இருந்து எடுக்கப்பட்டது. இந்த கோவில் மூலவர் சிவா நந்தீஸ்வரர். இந்த இடம் சென்னை - பெரியபாளையம் வழியில் இடையே கன்னிகைபேர் என்ற ஊரிலிருந்து இருந்து திருக்கண்டலம் செல்லும் வழி. இந்த இடத்தில கள்ளி பூவை வைத்து பிருகு மகரிஷி லிங்கத்தை வணங்கியதால் திருக்கள்ளில் என்ற பெயர் பெற்றது.

"ஆதி பரிபூரணத்தின் பதத்தை போற்றி
அடியார்க்கு நல் வரங்கள் அளிக்க வல்ல
சோதியே சூட்சாதி சூட்சமெலாம் சுகமாக
அளிக்கவல்ல தேவ தேவே

தேவாதி தேவர்களும் பணிந்து ஏற்றும்
தற்பரமே கமலமதை பிருகு போற்றி
மூவாதி முதல்வனும் தேவர் மூவர்
முறை உணர்ந்த கோடி கண சித்தமுனிகள்

சித்தமுனிகள் சீவமாய் தரணி தன்னில்
முடிவில்லா வழிபட்ட தலத்தில் நின்று
முனி வாக்காய் அருள் பாலித்த குருசாட்சியாய்
மகனுக்கு உரைப்பேன் சீவசாட்சி ஆசி உண்மை

.............

ஞானம்எல்லாம் யாம் பெற்ற தலத்தில் இன்று
ஞான வாக்கு உனக்கு ஈந்தோம் காலம் இப்போ
ஊனம் என்ற நிலை அகற்றும் தலத்து ஈசனும்
உபய நந்தி ஈசனின் ஆசி காக்கும் "

பொருள் : எல்லா தேவர்களும் தொழுது ஏற்றும் தற்பரமே (தான் பரமாய் ஈஸ்வர நிலையில் உள்ள கதியை), மூவாதி முதலவன் ஆணை முகத்தனையும், முக்கடுவுளையும் முறைகள் ஆகிய சூத்திரங்களை
அறிந்த சித்த முனிகளே. அப்படி பட்ட சித்தர்கள் முனிகள் சீவமாய் வழிபட்ட மாபெரும் ஸ்தலம் இது. முனி வாக்கு அருள் கொடுத்த குருவாய் (தென்முக கடவுள்-குரு தட்சிணாமூர்த்தியால் இந்த இடத்தில தான் பிருகு முனிக்கு சோதிடம் என்னும்ஆருடம் கைவல்யம் ஆனது - என்று கோவிலில் உள்ள குறிப்பை உறுதி செய்கிறார் ). அதை தொடர்ந்து பிருகு ஆகிய தானும் ஒரு சில ஞானங்கள் பெற்ற தலம் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) என்று குறிபிடுகிறார். இங்கு இருக்கும் ஈசனுக்கு ஊனம் (குறைபாடு) என்ற நிலையை
கற்றும் வல்லமை உள்ளதாக சொல்கிறார். துணையாய் நந்தியும் ஊனம் அகற்றும் ஆசியை ஈசன் உடன் சேர்ந்து ஈந்து பக்தர்களை காத்து வருகிறார்.

2. பஞ்சட்டி அகத்தீஸ்வரர் 

பஞ்சட்டி அகத்தீஸ்வரர் கோவில் சென்னை - கல்கத்தா நெடும் சாலையில் வழியில் உள்ளது. காரனோடை மற்றும் பெரியபாளையம் ஜங்ஷன் தாண்டி நேராக செல்ல வேண்டும். தொடர்ந்து கல்கத்தா தேசிய நெடும் சாலையில் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும். உல் சாலையில் ஒரு முந்நூறு அடி சென்று இடது பக்கம் திரும்பினால் கோவில் உள்ளது.

ஹனுமத்தாசன் குறிப்பு சில வருடம் முன்பு சொன்னது அகத்தியர் சீவ நாடியிலிருந்து: "அகத்தியர் உட்பட பதினெண் சித்தர்களும் யக்னம் செய்த இடம் பஞ்சட்டி. அகத்தியர் ஐந்து முறை பெரிய யக்னம் செய்ததால் பஞ்சடி என்ற பெயர் பெற்றது. "

சித்தர்கள் செய்யும் யக்னம் அகமகவும் (சூட்சமாகவோ) அல்லது புறமாகவும் (சதூலமாகவோ) இருக்கலாம். அவர்களுக்கே உண்மை தெரியும்.

நாங்கள் பஞ்செட்டி சென்று எடுத்தது குரு பிருகுவின் நாடி தான் சில வாரங்கள் முன்பு. அதில்

"சோதியே சுடர் ஒளியே வணங்கி உன்னை
சொல்லிடுவேன் பிருகு யான் சீவ சாட்சி
ஆதி குரு சித்தரிஷி கும்பனுமே
அனுகிரகம் தவ ஞான வேள்வி கொண்ட 

கொண்டதொரு குருமுனியின் பூரணத்தில்..."

பொருள்: சோதியை வணங்கி பிருகு முனி, ஆதியான குரு-முதல் சித்தர் ரிஷி கும்பன் என்னும் அகத்திய முனி அனுகிரஹமாய், தவம் - யக்னம் கொண்ட இடத்தில். அந்த இடத்திலிருந்து குருமுனியின் பூரம் என்ற முழுமையான நிலையிலிருந்து உரைக்க ஆரம்பித்தார்.

"இந்த பாடலை கூறி நிறுத்தி விட்டார். அங்கே கோவில் அர்ச்சகர்களும் வந்து உட்கார்ந்து பிருகு முனியிடம் கோவிலை பற்றி கேட்டனர். அதற்கு அய்யன் இங்கு சதய நட்சத்ரத்தில் அகத்திய முனிவரை வழிபடுதல் சிறப்பு என்றார். அதை போல சதய நக்சதிர அன்பர்களுக்கு இந்த இடம் வழிபாடு நல்ல மேன்மை கிடைக்க செய்யும் என்றார். இனி வரும் காலங்களில் இந்த பூஜை எடுக்க கோவிலும் பக்தர்களும் நல் நிலை அடைவார்கள் என்று அருளினார்"

3 மயிலாண்டவர் கோவில் - திருவொற்றியூர்
மயிலாண்டவர் கோவில் - திருவொற்றியூர் சாலையில் தேரடி பஸ் நிறத்தும் முன்பே, எல்லை அம்மன் கோவில் உள்ளது. அந்த தெருவை ஒட்டி உள்ளே சென்றால் சுமார் நூறு அடியில் மயிலாண்டவர் சந்நிதி என்று ஒரு போர்டு வலப்பக்கத்தில் தெரியும். உள்ளே ஒரு இருபது அடி சென்றால் இந்த சின்ன இடத்தை காணலாம் . மக்கள் நிலங்களை ஆக்கிரமித்து இப்பொது அங்கு மீந்து இருபது ஆயிரம் சதுர அடி மட்டுமே இங்கே ஒரு லிங்கமும், வலுதுபக்கம் தனி சந்நிதியில் ஒரு யோகியின் சிலையும் உள்ளது. அந்த யோகின் சில்லை மிக அருமையாக இருக்கும். அவருக்கு ஜடா முடி உள்ளது, அதை கொண்டை போட்ட நிலையில் வடிவடைக்க பட்டுள்ளது. சிரசில் உற்று நோக்கினால் அழகிய ஒரு சிறு லிங்கமும் தெரியும். காது துளை இட்டு தொங்கட்டம் அல்லது குதம்பை அணிவித்தது போல உள்ளது. தாடி வளர்ந்து அதையும் முடிச்சி போட்டு செதுக்கப்பட்ட நேர்த்தியான முனிவரின் சிலை.


இங்கே சென்று வணங்கி விட்டு நாடியில் குரு பிருகு முனியின் உயர் வாக்கை பதிவு செய்ய ஆரம்பித்தோம். இந்த இடம் மிகவும் அதிருவு உள்ளதாக நான் மும்பு கண்டுளேன் ஆகையால் ஆவலாக பதிவு செய்ய ஆரம்பித்தோம் கீழ் தொடுரும் இந்த பாடல்களை.

" ஆதியாம் பராபரத்தின் பாதம் போற்றி
அறிவிபேன் பிருகுயான் சீவ சாட்சி
ஒதிடுவேன் குருநாளில் முனிகள் சூழ்ந்த
ஒப்பில்லா சீவதலம் அறிந்து கொண்டு

பொருள்: பராபரத்தின் பாதத்தை வணங்கி பிருகு முனி நான் சீவ சாட்சி சொலுகிறேன். குரு நாளாகிய வியாழ கிழமை முனிகள் சூழந்த ஒப்பிலாத சீவமான தலம் என்று தெரிந்து கொண்டு கூறிகிறேன்"

கொண்டதொரு ஈசனார்க்கு பரிவாரங்கள்
குருமுனிக்கு சீடனாய் நின்ற சித்து
கொண்டதொரு சீவ மூர்த்தம் லிங்கமாக
குறிப்பான ஆகமங்கள் கடந்து ஞானம்

பொருள்: திருவொற்றியூர் ஈசனுக்கு பரிவாரமாய், குருமுனி என்னும் அகத்தியர்க்கு சிஷ்யனாய் நின்ற சித்து இங்கே சீவ நிலையில் லிங்கத்திற்கு கிழே உள்ளார். பல ஆகம நிலையும் கடந்து ஞான நிலையில் உள்ளார்.

ஞானமுடன் வாசிக்கு உகந்த தடமே
ஞாலமதில் குருமுனிக்கு உகந்த சீடர்
ஊனமிலா மூலன் அம்சம் புசண்டன் அம்சம்
உயர்வான மூலம் சதயம் பூசை நன்மை

பொருள்: ஞானமுடன் வாசிக்கு உகந்த (பயிற்சி செய்ய) தடம் இது. உயர்ந்த கும்பமுனிக்கு உகந்த சீடர். பிழையில்லா திருமூலர் அம்சமும் , காக்கைபுசுண்டர் அமசமும் உடையவர். மேலான மூலம் மற்றும் சதயம் ஆகிய நட்சதிரங்கள் பூசை செய்ய நன்மை.

நன்மை பட அகத்தீசன் வழியும் வந்த
நல்லதொரு மார்கங்கள் கொண்டோர் யாவும்
உன்னதமாய் தலம் தேடி ஞானம் கொண்டு
உயர்வடைய செய்வாரே தன் விழிப்பு

பொருள்: அகத்திய வழி வந்த நல்ல சித்தமார்க்கம் தொடர்பு உடையவர்கள் இந்த தலம் தேடி வந்து ஞானம் கொண்டு உயர்நிலைக்கு எடுத்து செல்வார் விழிப்பு நிலையில் இருக்கும் இந்த சித்தன் (பெயரை கூறாமல் புடகமகவே பாடல் வந்தது)

விழிப்பு நிலை சகசர யோகம் சித்து இப்போ
வாக்குரைபோம் மாந்தர்க்கும் அறியும் வண்ணம்
வழக்கில்லா நிலை ஜெயமும் உந்தனுக்கு
வழி அளிக்க வல்ல சித்து சீவம் முற்றே"

பொருள்: விழிப்பு நிலையில் சகசர (௧௦௦௮ - கமலம் ) யோக சித்து நிலையில் இப்போ. சொல்லுங்கின்றோம் மனிதர்களுக்கு தெரியும் வண்ணம். வழக்கு என்னும் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க வல்ல சித்தன், சீவன் முடிந்தது.

4 பிரமஸ்ரீ கோபால்சுவாமி - சதானந்தபுரம் 

"தந்தையும் மகனும் ஒன்றாய் இருந்து, வேறுவேறாக இல்லாமல் நமக்கு ஆசி அருளி...."

கோபால்சுவாமி அய்யா சிவானந்தரிடம் அயக்கியமாகி, இருவரும் வேறு வேறு என்ற நிலையை தாண்டி ஒன்றாக இருப்பதாய் குரு பிருகு மகரிஷி அருள்கிறார்.

5 நெமிலி - கரியாகுடல் அருணாச்சல அய்யா

அரக்கோணம் - வேலூர் வழியில் அம்மைந்துளது கரியாகுடல்.

" திண்ணமாய் கதிர் அரிமா பெண் துலாத்துள்
தீர்க்கமாய் சிதாகாச முக்தி கொண்டோர்
எண்ணத்தில் சிவமாக வாழந்த சீவம்
எற்றிட்ட தலம் நோக்க யோகம் உண்டு

உண்டான சிவாசார தீட்சை ஓத்தும்
ஓதுகின்றோம் தீப திங்கள் வளர்பிறையில்
அண்டத்தில் முக்தி பெற்று விண்ணில் வாழும்
அரூபரூபர் சீவசித்தர் ரிஷி விளங்கும்

விளக்கமது மெய்விடுத்து முக்தி சித்தி
வெட்டவெளி உணர்ந்திட்ட சித்தர் தாமும்
அளவறிய ஆசி அதை ஈந்து நின்றே
அறிவித்த சீவமதும் நுற்றும் முற்றே"

பொருள்: இந்த நாடி பதிவு எடுத்த காலம் 2007 ஆண்டு. ஒரு காலத்தையும், நேரத்தையும் கூறி சித்தகாச முக்தி கொண்டோர் ஸ்தலம் கானும் யோகம் உண்டு என்று கூறுகிறார். அண்டத்தில் முக்தி அடைந்து அரூபமாய் வாழும் சீவ சித்தரை காணும் பாக்கியம் என்றும் அருளினார். இதை பதிவு செய்து மறந்தும் ஆகிவிட்டது. ஒரு சமயம் எனக்கு நல்ல இடம் விலைக்கு வாங்கி தருவதாக நண்பரும் அவருக்கு தெரிந்தவரும் என் வீட்டுக்கு வந்தார்கள். நானோ விருப்பம் இல்லாமல் வற்புறுத்தலால் கிளம்பி சென்றேன். அருகே இருபதாக நினைத்த என்னை நெமிலி (அரக்கோணம் - வேலூர் ) வரை கூட்டி கொண்டு வந்துவிட்டனர். பார்க்க வந்த இடம் சரியாக இல்லை. சரி இவ்வளவு தொலைவு வந்து விட்டோமே, வந்தவர்களுக்கு எதாவது உணவு வாங்கி கொடுக்கலாம் என்று சற்று தூரம் சென்று நிறுத்தினோம். எனுக்கு உண்ண மனம் இல்லாததால் காலார கொஞ்சம் அங்கும் இங்கும் நடந்தேன். ஒரு சிறிய குடில் எதிர்த்தார் போல் தோன்றியது. அங்கு சென்று பார்த்தவுடன் சீவ ஐக்ய தலம் என்று புரிந்து கொண்டேன். சாவியை எதிர்த்த கடையில் வாங்கி உள்ள சென்று வேண்டினேன். அங்கே அவருடைய (அருணாசல அய்யா) தியானம் செய்யும் படம் இருந்தது. அதில் சிதாகாச நிலை தெரிந்தது உடனே முன்பு செய்த இந்த பதிவு ஞாபகம் வந்தது. வீடு வந்தவுடன் கட கட வென்று குறிப்பை பார்த்து பெருத்த ஆச்சரியம் அடைந்தேன். குரு பிருகு அருளியது போல நிர்ணயித்த காலத்தில் அருணாசல அய்யா சீவ ஸ்தலம் காணும் பேர் கிடைத்தது .

பி.கு.: இந்தத் தகவல்கள் மிகவும் மதிப்புடையது. தகுந்தவர்களுக்கு மட்டும் சொல்லுங்கள். குருவே சரணம்.