ஒளிச்சரீரம் பெற ஈஸ்வராய குருதேவர் காட்டும் உறுதியான வழி
யாம் ஒரு முறை, இமயமலைக்குப் போகும் பொழுது, ரிஷிகேசத்தில் இருந்து, கொஞ்ச தூரம் போகச் சொன்னார் குருநாதர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஒருவர் காயகல்ப சித்தி என்ற கற்றுணர்ந்த உணர்வின் பாடம் கொண்டு, தவமிருந்து பெறவேண்டும் என்ற நிலையில், சிவத்தை வணங்கினால் அவனின் நிலையை நாம் பெறுவோம் என்று, “ஓம் நம சிவாய” என்ற உணர்வையே ஜெபித்து, கல்லறைக்குள் இறக்கச் செய்து, உணர்வின் ஒலி அலைகளை வெளிப்படுத்தி, தன் உடலுக்குள் சிறைப்பட்டிருந்தார்.
இப்படி ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது, யாம் இதைப் பார்த்தறிய வேண்டும் என்பதற்காக வேண்டி, பேரிச்சம்பழமும், பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டு சென்றோம்.
குருநாதர் சொன்ன குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன். அங்கு ஒரு சிறிய கோயில் இருந்தது, “அங்கே உட்கார்” என்றார். உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்தோம்.
தியானம் செய்து கொண்டிருந்த பொழுது, எங்கேயோ பெய்த மழை, தண்ணீர், வெள்ளமாக வந்தது. ஒரே அடியில், எம்மைக் கோயில் சுவரோடு சேர்த்து மோதச் செய்தது. தண்ணீர் மட்டம், வெகு வேகமாக உயர்ந்தது. தண்ணீரால் குளிர் அதிகமானது. யாம், இடுப்பில் ஒரு வேஷ்டி மட்டும் கட்டியிருந்தோம், அதுவும் நனைந்துவிட்டது.
பையில் வத்திருத பேரிச்சம்பழமும் தண்ணீரோடு போனது, பிஸ்கட்டும் கரைந்து போனது. இதனால் எமது அடுத்தவேளை சாப்பாடும் போனது. தண்ணீர் மட்டம் 7 அல்லது 8 அடி உயரம் இருந்தது. தண்ணீரோடு சேர்ந்து, கோயில் சுவற்றின் மேலே ஏறி, நின்று கொண்டோம். அதற்கு மேலும் ஒரு அடி தண்ணீர்.
“சரி, இன்று நம்மை குருநாதர் தண்ணீரிலேயே போ, நீர் சமாதி என்று சொல்லுவார்களே, அது போன்று, நமக்கு இன்று நீர் சமாதிதான், இந்த உடலில் திரிந்தது போதும், நீர் சமாதி ஆகிவிடு” என்று குருநாதர் சொல்லிவிட்டார் என்று இந்த உணர்வுகளில் இருந்தோம்.
பிறகு, குருநாதர் எமக்கு நினைவுபடுத்தினார், “உன்னை எதை எடுக்கச் சொன்னால், நீ எதை எடுத்துக் கொண்டிருக்கின்றாய்? தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு, தண்ணீர் உன்னை இழுக்காத வண்ணம் உன் உணர்வைக் கொண்டுவரச் சொன்னால், சுவற்றின் மேல் ஏறி உன்னை எதை எண்ணச் சொன்னது?
வானுலக உணர்வை உனக்குள் எடுத்து, அந்த உணர்வை வலு சேர்த்து, நீ எதிர்த்து நில்” என்று கூறியபின் குருநாதர் உபதேசித்த உணர்வை எடுத்தோம். அதன்பின் தண்ணீர் மேலும் 1.5 அடி உயரம் வந்தது, பிறகு, சிறிது நேரத்தில் சர சர என தண்ணீர் மட்டம் குறைந்தது.
இது எப்பொழுது நடந்தது? அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் இருக்கும். அந்த நேரத்தில், வியாசகரைப் போன்று விண்ணின் உணர்வுகளை எடுக்கச் சொல்லுகின்றார். குருநாதர் சொன்ன உணர்வை வலிமை ஆக்கியபின், யாம் நின்றிருந்த கோயில் சுவற்றிலிருந்து, இறங்குவதற்குப் படிகள் இல்லை. ஆகவே கீழே குதித்தோம்.
குதித்து, கீழே வந்து பார்த்தால், கோயிலுக்கு முன் பெரிய விருட்சம், பெரிய விழுதுகளுடன் இருந்தது. விழுதுகளுக்குள் சென்று பார்த்தால், கல் கட்டிடம் தெரிந்தது. அதற்குள்ளிருந்து, “ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய” என்று சப்தம் வந்தது. அந்தச் சப்தத்துடன் நல்ல மணங்களும் வந்தன.
அப்பொழுது குருநாதர் சொன்னார்., “பிறவியில்லாத நிலை அடைதல், காயகல்ப சக்தி பெறுதல் என்று சொல்கின்றார்களே” அந்த நிலையில், தான் மற்ற எந்த உடலுக்குள்ளும் செல்லாது, தன்னுடைய உடலுக்குள்ளே சிறைப் பிடித்து வைத்தது போன்ற நிலையில் கடும் தவம் இருக்கின்றார்.
ஆனால், அவரால் தன் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளியைத் தெரிய முடியவில்லை?. இங்கே சமாதியாகி, 1000 வருடங்கள் ஆகிவிட்டது. 1000 வருடத்தில் அவருடைய உடலின் நிலையைப் பார். உணர்வை ஒளியாக்கி. அதிலேதான் இருக்கின்றது. ஆனால், பலன் ஏதும் இல்லை.
அவர் அழியா ஒளிச் சரீரம் என்ற பாடநிலையைக் கற்றுக் கொள்ளவில்லை. திருமணம் அவருக்கு ஆகவில்லை. சிவனை அடையவேண்டும் என்று நினைத்தார், ஆக, இந்த உடலான சிவனுக்குள்தான் அடைப்பட்டிருக்கின்றார். இதை நீ எப்படி மாற்றப் போகின்றாய்? என்றார்.
அதன் பிறகு, குருநாதர் சொன்னார். “இவர்கள் கடுமையான தவம் பெற்றவர்கள். இந்த உணர்வுகள் உனக்குள் பட்டதனால், ஓதி அவர்களுடைய உணர்வை எடுக்க முடியாது.
அவருடைய ஆன்மா, சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நினைவலைகளை உனக்குள் பரப்பு. அவர், தாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, ஒளியின் சரீரம் பெற வேண்டும், பேரின்பப் பெருநிலை பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொள்” என்று கூறினார்.
குருநாதர் உரைத்த வண்ணம், உணர்வின் ஒலி அலைகளை யாம் எடுத்துக் கொண்டபின், தவமிருந்த உடலிலிருந்த ஆன்மா வெளியில் வந்தது. அப்பொழுது, யாம் எண்ணியபடி விண் சென்றடைந்தது. ஒளியின் சரீரம் பெற்றது. அப்பொழுதுதான், அவ்வளவு தவமிருந்தவர்களுடைய உணர்வையும், அருளையும் யாம் பெறமுடிந்தது.
சாதாரண நிலையில், இன்று நாம் ஒன்றுமே செய்திருக்க முடியாது. இப்பொழுது, உடலை விட்டு பிரிந்தவர்களைப் பார்த்தவுடனே விண் செலுத்துகின்றோம் என்றால், என்ன காரணம்?
விண் சென்ற உணர்வின் வலுவை எடுத்து, இவர்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கின்றோம். அப்படி இணைக்க வேண்டும் என்றால், முதலில், விண்ணில் அங்கே பெரியவர்கள் இருக்கவேண்டும். அவர்களின் உணர்வின் தன்மையினைப் பெற்றுத்தான், இங்கே எடுக்க வேண்டும். குருநாதர் காண்பித்த அருள் வழியில், இவைகளை யாம் தெரிந்து கொண்டோம். ஏனென்றால் அவர்கள் சக்திவாய்ந்தவர்கள்.
இதைப் போன்று, உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களை நினைவு கூர்ந்து பதிவாக்கி, விண் செலுத்தினால், அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் கரைகின்றன. ஒளியின் சரீரமாகின்றது.
பௌர்ணமி நாட்களன்று இரவு 7,00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் சப்தரிஷி மண்டலம் அருகில் வருகின்றது. அது சமயம், நாம் கூட்டமைப்பாக இருந்து, உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தும் உணர்வை எடுக்கும் பொழுது, துரித நிலை கொண்டு விண் செலுத்தலாம். அவர்கள் உடலில் பெற்ற நஞ்சினைக் கரைக்கலாம்.
மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில், அருள்ஞான வித்தை உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம். அதை தியானித்து, உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உரமாக்குங்கள். உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் பெறச் செய்யுங்கள். மெய்வழி செல்லும் பாதையை அது வகுத்துக் கொடுக்கும். மெய்வழி வாழ்வோம். அருள்வழி வாழ்வோம்.