1. விநாயக சதுர்த்தி
நமக்குள் கெட்டது
சேராது, கெட்டதைத் தடுக்கச் செய்வதுதான் தியானம். ஆக, நாம் இருக்கும்
இந்தத் தியானம் சிறிது நேரம்தான். இந்த தியானம், ஆலயங்களில் விநாயகன் என்ற
நிலைகளில் காட்டப்படுகின்றது.
விநாயகரை எடுத்துக்
கொண்டால், புல்லைப் போடுகின்றோம். அடுத்து, இலைளையும், செடிகளையும்
போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கடை செய்து
சாப்பிடுகின்றோம்.
சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு, நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள், சதுர்த்தி.
விநாயக சதுர்த்தி
அன்று என்ன செய்கின்றோம்? களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம்
எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.
வருடத்திற்கு ஒரு
தரம், களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான
கரும்பும், மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.
நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளை எல்லாம் கரைப்பதற்காக வேண்டி,
விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி,
கெட்டதை நீக்கி, அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான்
இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.
விநாயகர்
சதுர்த்தியை ஏன் வைத்தார்கள் என்று தெரியாது? கொழுக்கட்டை அவருக்குப்
பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால், எனக்கு வரம் கொடுப்பார்
என்றுதான், புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.
கல்யாணம் ஆகவேண்டும்
என்றால், எருக்கன் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும்,
அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால், கொடுப்பார் என்பார்கள்.
அரசையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? என்ற நிலையையாவது நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
அதாவது
ஸ்தலவிருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு, அரசும்,
வேம்பும், விநாயகனுக்கு வைத்தார்கள். இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.
இந்த மனித வாழ்க்கையில், நல்லதை நாம் கேட்கிறோம்.
கஷ்டமான நிலைகளில் அவர்கள் சொல்லப்படும் பொழுது,
காது கொடுத்துக் கேட்கின்றோம்.
அந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன், என்ன செய்கின்றது? மாரி, அவர்கள் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி, அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது. மாரியம்மன். இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்து, சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.
அங்கே ஸ்தல விருட்சம் என்ன? கசப்பு.
மாரியம்மன் கோவிலில் என்ன இருக்கிறது? அக்கினிச் சட்டி.
அக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்?
நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்?
அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை நீக்கும்.
ஆக, அந்த மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தலவிருட்சம் கசப்பு.“நெருப்பிலே போட்டு கசப்பை நீக்கு” என்று பொருள்.
2. அரச மரத்தையும், வேப்ப மரத்தையும், விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்?
அதே சமயத்தில், இந்த
விநாயகருக்கு என்ன வைத்துள்ளார்கள்? அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள்.
கசப்பு இல்லையென்றால் வேலை நடக்காது. கசப்பைச் சிறுத்து,
அந்த அரசின் நிலைகளில்
நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு
என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.
ஆகவே, நாம் இந்த
மனித வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்? உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில்
குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன், நேராக வந்து விநாயகனைப்
பார்க்கப்படும் பொழுது, நாம் எதை எண்ண வேண்டும்?
நாம் புல்லைத்
தின்றோம், இலை செடிகளைத் தின்றோம், இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து,
நமக்கு வேண்டியதைப் படைத்து, இந்தச் சரீரத்தைப் பெற்றோம்.
ஆக, இந்த உண்மையை
உணர்த்திய, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
என்று ஏங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும்
படரவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கிச் செலுத்த வேண்டும்.
கசப்பின் நிலைகளை,
நாம் எப்படி அக்கினியில் போட்டுப் பொசுக்கினோமோ, அதைப் போல மெய்ஞானிகள்,
இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கித்தான் விண் சென்றார்கள்.
அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தி,
இந்தக் கசப்பைச் சிறுக்கச் செய்து, “அரசு”
அந்த உயர்ந்த எண்ணங்களை மெய்ஞானி எப்படி வளர்த்தானோ,
அதை ஆட்சி புரிந்த நிலைகளில்,
தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த “அரசாக”
நமக்குள் ஆட்சி புரியும் என்றுதான்
இந்த ஸ்தலவிருட்சத்தை வைத்தார்கள்.
அரச மரத்தையும்
வேப்ப மரத்தையும் விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்? என்பதை,
நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.
நல்லதை எண்ணினோம்.
அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா. யார் துடைக்கிறார்கள்? நினைக்கவில்லையே.
கோவிலில் நமக்குப் புனித நிலைகளைக் கொடுப்பதற்காக, ஞானிகள் அரசனுக்கும்
டிமிக்கி கொடுத்து, சாஸ்திரங்களை எழுதி வைத்து, நீ இப்படியெல்லாம்
எடுத்துக் கொள்ளடா என்றான். அரசனையும் ஏமாற்றினான். நமக்கு நல்லதைப் பெறச் செய்தான் ஞானி. நாம் அதை விட்டுவிட்டோம்.
அதை விட்டுவிட்டு,
“உனக்கு அபிஷேகம் செய்தேன்” என்று அழுது புலம்பினால், நமக்குக் கொடுப்பான்
என்று அழுதால், நம் உயிரான ஈசன் நமக்குள் அதைத்தான் படைப்பான்.
3. தீபாராதனை
கோவிலுக்குள்
போனவுடன், தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது.
நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம், அதைப் பார்க்கப்படும்
பொழுது, தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று, வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.
சாமி மேலே அந்த மலர்களைப் போட்டிருப்பார்கள்
எனக்குள் நல்ல குணத்தை தெய்வமாக உருவாக்கி,
இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெறவேண்டும்
என்ற எண்ணத்திற்காக, மலரைப் போட்டிருக்கிறார்கள்.
மலரின் மணம்
பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும்,
மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.
ஒருவன் தவறிக் கீழே
விழுகின்றான். கண்ணுற்றுப் பார்த்தவுடன், “ஐயோ, இப்படி ஆகிவிட்டதே” என்று
வேதனைப்படுகிறீர்கள். அவ்வாறு, அடிபட்டு, வேதனையான உணர்வுகள் துடித்தபின்,
அந்த வேதனையான உணர்வுகளின் தன்மைகள் உங்கள் உடலில் சேர்ந்தால், எந்த மணம்
வரும்?
அவனைப்
பார்த்துவிட்டு, வீட்டிற்குச் சென்றால், “ஏன் ஒரு மாதிரியாக
இருக்கிறீர்கள், உங்கள் முகமே மாறி இருக்கின்றது” என்று கேட்பார்கள். ஆக,
பார்க்கும் பொழுது என்ன ஆகிறது? நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம், அவர்களை நுகரச் செய்து, கேட்க வைக்கின்றது.
அதைப் போல, இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகளில்
இந்தத் துன்பத்தைத் துடைத்துவிட்டு,
அந்த நல்ல குணங்களுக்கு, இந்த மலரை அணியுங்கள்.
நல்ல குணத்தைக் கொண்டுதான் பையனைக் காப்பாற்றினோம். துடித்தான், அவனைக் காப்பாற்றி விட்டோம். அவன் அடிபட்டான். காப்பாற்றிவிட்டோம். அவன் எண்ணத்தை நுகர்ந்துதான் காப்பாற்றினோம். அவனின் வேதனையான உணர்வுகள் எனக்குள் இருந்தது.
விநாயகரைப்
பார்த்துவிட்டு, கோவிலுக்குள் போனவுடன், அந்த தெய்வ குணத்தை நாங்கள்
பெறவேண்டும். அந்த மலரின் மணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று, அந்த நல்ல குணத்திற்கு முலாம் பூச வேண்டும். முலாம் பூசியபின், அந்த உடலில் நல்ல மணம் வருகிறது.
அங்கே கனியை
வைத்திருக்கும் பொழுது, கனியைப் போன்று, சுவையான சொல்லும், செயலும்,
நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று, நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும். நாம்
கொடுப்பது அங்குதான் பெறுகின்றது. அதனால் அவனிடம் வேண்டி, அதை நாம் எடுக்க
வேண்டும்.
ஆக. இந்த உணர்வைத்
தூண்டும் பொழுது, உயிரின் இயக்கம் அங்கு அதிகமாகின்றது. ஆக, அதைப்
பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி, இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள்
செலுத்தி, இந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும், செயலும், நான்
பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு, இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியை நான் பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.
எங்கள்
வாடிக்கையாளர் அனைவரும், அவர்கள் குடும்பத்தில், நலமும் வளமும்
பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியை எங்கள் குழந்தைகள் பெறவேண்டும்.
எங்கள் குழந்தைகள், ஞானத்தின் வழியில் தொடர வேண்டும். அவர்கள் பேச்சும்,
மூச்சும், உலக மக்களுக்கு நன்மை பெறச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல
ஞாபக சக்தி பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை, நம் உயிரிடம் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அவ்வாறு அர்ச்சனை செய்தால்தான்,
இந்த உணர்வின் சக்தியை இந்த ஈசன் நமக்குள் எடுத்து,
நமக்குள் விளைய வைத்து, மணமாகி,
நம்மைப் பார்க்கும் பொழுது,
நம் சொல்லின் தன்மை அங்கே விளையும்.
“நம் உடல் ஒரு கோவில்” என்கிற நிலைகளில், இதைப் பரிசுத்தப்படுவத்துவதற்கு, எங்கள்
வாடிக்கையாளர் நலமாக இருக்க வேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோரெல்லாம்.
நலமாக இருக்க வேண்டும். இங்கு வருவோரெல்லாம், மகரிஷிகளின் அருள் ஒளி
பெறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில், இருள் நீங்க வேண்டும். அவர்கள்
வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும். எமது
அருளாசிகள்.
4. ஞானிகள் அமைத்த ஆலயத்தின் சிறப்பு
இன்றைய
வாழ்க்கையில், ஒருவர் கஷ்டமாக இருப்பார், ஒருவர் நஷ்டமாக இருப்பார்,
வேதனைப்பட்டு இருப்பார், துன்பப்பட்டு இருப்பார், துயரப்பட்டு இருப்பார்,
எல்லாம் பட்டிருப்பார்.
ஆனாலும், இங்கே
கோவிலுக்குள் போனவுடன், இந்த எண்ணம், அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து,
ஒருங்கிணைக்கும் பொழுது, எப்படி குழம்பு வைக்கும் பொழுது. எல்லாம் ஒன்றாகச்
சேர்த்து, சுவையாக இருக்கின்றதோ, இதைப் போல,
நாம் துன்பத்தை நீக்கி,
இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று,
எல்லோரும் சொல்லும் நிலைகளுக்கு
இங்கே ஒலிபரப்பும் பொழுது,
மேக்னட், அதாவது
மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து, தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு,
அந்த உணர்வின் நிலைகளில், நெடு நெடு என்று வளர்ந்திருக்கும் அந்த மலை.
ஆனால், அந்தக்
கல்லுக்குள் மறைந்திருக்கக்கூடிய காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும்.
மனிதனுக்குள் நாம் எடுத்துக் கொண்ட ஒலியின் அலைகள், அங்கே பதிவாகி
இருக்கும்.
ஆக, நாம் இடும் இந்த மெய்ஞானிகளின் அலைகள், அங்கே கோவிலுக்குள் படரப்பட்டு, நாம் எண்ணிய நிலைகளில் அங்கே பெறச் செய்வதற்கு, அந்த மெய்ஞானி சாதாரண மக்களும் பெறுவதற்காக வேண்டி, அங்கே ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.
இதை நான்
சொல்லவில்லை. நமது குருநாதர் சொன்னது. நான் படிக்கவில்லை. எமக்குக்
கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தலவிருட்சத்தைப் பற்றியும் தெரியாது.
அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம். குருநாதர், எம்மிடம்
கோவிலுக்குப் போனால், இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.
நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது, தெய்வமாகின்றது.
எண்ணிய எண்ணம் இறையாகின்றது. இறைவானாகின்றது.
அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாகின்றது.
ஆக, அந்த செயலின் தன்மையாக நான் ஆகின்றேன்,
என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.
அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.
5. தேர் இழுப்பதின் மகிமை
கோவிலில் பெரிய
தேரைக் கட்டிவைத்து, சிறிய சிலையை வைத்திருக்கிறார்கள். கோவிலுக்குப்
போகும் நாமெல்லாம் இதைப் போல எண்ணினால், எல்லாமே வலுவாகி, வலுவான நிலைகள்
பெறுகின்றது.
ஆகையினாலே, அந்த
நிலைகளில் கோவிலில் பல ஆயிரம் பேரை வைத்து, தேரை இழுக்கச் செய்கின்றார்கள்.
அந்தத் தேரில் சிறிய சிலையை வைக்கிறார்கள்.
அந்தத் தெய்வ குணத்தை, அத்தனை பேரும் ஒருங்கிணைந்து எடுத்துச் செயல்படுத்தினால், இந்த எண்ணத்திற்கு வலு உண்டு.
எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் வரப்படும் பொழுதுதான்,
இயக்க நிலைகள் வரும் என்று
கோவிலில் தேரை வைத்தார்கள்.
தேருடைய மகிமையை நாம் அறியாமல் இருக்கிறோம்.
ஆலயமான இந்த உடலைப்
பரிசுத்தப்படுத்துவதற்கு இந்த நிலையைச் செய்தார்கள் ஒவ்வொருவரும் நம் உடலை
ஆலயமாக்கி, ஒவ்வொரு நொடியிலும் நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்காக ஆலயங்களை
அமைத்தார்கள், ஞானிகள்.
ஆக, கேட்டுணர்ந்த
நீங்கள் இனியாவது கோவிலுக்குப் போகும் பொழுது, விநாயகரை எப்படிக் கும்பிட
வேண்டும்? கோவிலுக்குப் போனால், அந்தத் தெய்வ சக்தியை எப்படிப்
பெறவேண்டும்? இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம், எப்படி வரவேண்டும்
என்ற நிலைகளில், நீங்கள் ஒரு வழிகாட்டியாக வாருங்கள்.
“எல்லோரும்
நன்றாக இருக்க வேண்டும்” என்று, நீங்கள் எண்ணுங்கள். அந்த தெய்வகுணம்
எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எமது அருளாசிகள்.