வி.கே.புரம்,:
இந்தியாவில் உள்ள புலிகள் காப்பக பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல
விதித்த தடையை கடந்த அக். 16ம் தேதி உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன்
நீக்கியது. கடந்த 13ம் தேதி முதுமலை புலிகள் காப்பக பகுதிக்கு சுற்றுலா
பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது. களக்காடு முண்டன்துறை புலிகள்
காப்பக பகுதியில் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் வரும்
டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் ஓரிரு நாட்களில்
களக்காடு காப்பக பகுதிகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

