Pages

ஆனைமலை புலிகள் காப்பகம் திறப்பு



வால்பாறை: புலிகள் காப்பகங்களில் சுற்றுலா நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 25ம் தேதி தடை விதித்தது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வனத்துறை மற்றும் தனியார் விடுதிகளுக்கு வருவாய் பாதித்தது. சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள மலைவாழ் மக்கள் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27ம் தேதி, புலிகள் காப்பக உள்வட்ட பகுதியில் தேசிய புலிகள் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, மாநில அரசுகள் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரியிலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம் இன்று திறக்கப்பட்