மேட்டூர்,
: புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று விடுமுறை என்பதால் மேட்டூர் அணைக்கு
ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து சென்றனர். அணைகட்டு முனியப்பன் சுவாமிக்கு
ஆடு, கோழி பலியிட்டும், பொங்கல் வைத்தும் மகிழ்ந்தனர். மேட்டூர் அணை
மீன்களை வாங்கி சமைத்து குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும்
குழந்தைகளுடன் அணைப்பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், விளையாடியும் பொழுதை
கழித்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் நுழைவு கட்டணமாக அரசுக்கு
ரூ.5,726 வசூலானது. இதே போல் பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் பழமையான
கோபுரங்களை காண ஏராளமானோர் கூடினர். இதனால் நேற்று மேட்டூர் அணை மற்றும்
பண்ணவாடி பகுதியில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.

