Pages

நீலகிரியில் துலீப் மலர்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்


குன்னூர், :நீலகிரியில் மலேரியா கொசுக்களை விரட்டும் வாசமில்லா மலர்கள் பூத்திருப்பதை, சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரியில் சாலையோரங்களில் சேவல் கொண்டை எனப்படும் துலீப் மரக்கன்றுகள் நடப்பட்டன. தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட துலீப் மலர்கள், மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களை விரட்டியடிக்கும் தன்மை கொண்டவை என கூறப்படுகிறது. இதுவே ஆங்கிலேயர்கள் அதிகளவில் இதை நடவு செய்ததற்கு காரணம்.

தற்போது மரங்களில் துலீப் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. வாசமில்லாத, இளஞ்சிவப்பு நிறம் கொண்ட துலீப் மலர்கள், வானத்தை பார்த்தவாறு பூத்துள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் சீசன் காலம். 2வது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் துலீப் மலர்களை பார்த்து ரசிக்கின்றனர். 15 நாட்கள் வரை மட்டுமே பூக்களை மரத்தில் காண முடியும். பின்னர் அவை வாடிவிடும். ஊட்டி மலைப்பாதை, பூங்காக்கள், எஸ்டேட் பங்களாக்களை அலங்கரிக்க இம்மரங்கள் வளர்க்கப்படுகிறது. மரத்தில் இருக்கும் காய் முதிர்ந்து வெடித்து காற்றில் சிதறும். காயில் இருக்கும் விதைகள் விழும் பகுதிகளில் துலீப் மரம் முளைக்கும்.