Pages

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 12

கடந்த பதிவில் ஜோதிடத்தின் முக்கிய 3 தூண்களாக கிரகம், நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கூறினோம். அவைகளுக்கு இடையேயான தொடர்பை வரும் பதிவுகளில் காண்போம்.

முதலில் கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பைக் காணலாம்




ராசி

ஆட்சி செய்யும் கிரகம்


மேஷம்

செவ்வாய்


ரிஷபம்

சுக்கிரன்


மிதுனம்

புதன்


கடகம்

சந்திரன்


சிம்மம்

சூரியன்


கன்னி

புதன்


துலாம்

சுக்கிரன்


விருச்சிகம்

செவ்வாய்


தனுசு

குரு


மகரம்

சனி


கும்பம்

சனி


மீனம்

குரு


ஆட்சி செய்யும் கிரகம் என்னப்பா செய்யும்?
ஒவ்வொருவரும் மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு ராசியில் / லக்னத்தில் பிறந்தேயாக வேண்டும். அவருடைய ராசிக்கேற்ப ராசியாதிபதியும், லக்னத்திற்கேற்ப லக்னாதிபதியும் அமைந்துவிடுவார். அவர்தான் உங்களுக்கு எல்லாமும். அவருடைய குணாதிசயம்தான் உங்களுக்கு அமையும். ஜாதகத்தில் அவர் அமையும் இடத்தைப் பொறுத்து நன்மை தீமைகளை செய்வார். ஜாதகத்தில் இவர் கெடக்கூடாது. இவர் சொந்த வீட்டில் அதாவது ஆட்சியாக இருப்பது ஜாதகருக்கு சிறப்பாக அமையும்.

உதாரணத்திற்கு ஒருவர் சிம்ம ராசியில் பிறந்திருந்தால் அவருடைய ராசிநாதன் சூரியன் ஆவர். ஏனெனில் மேலே உள்ள அட்டவணைப்படி சிம்ம ராசியை ஆட்சி செய்யும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சிம்ம ராசியிலேயே அமர்ந்து இருப்பாராயின், அவர் ஆட்சியில் உள்ளார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இவர் சொந்த வீட்டில் அதாவது ஆட்சியாக இருப்பது ஜாதகருக்கு மிகவும் சிறப்பாகும். சிம்மம் தவிர்த்து மற்ற ராசிகளில் சூரியன் இருந்தால் அவர் ஆட்சியில் இல்லை என்று கொள்ள வேண்டும், ஜாதகத்தை ஆராய்ந்தே பலன் சொல்ல வேண்டும். இவ்வாறே ராசிகளுக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டாகிறது.

அடுத்தப் பதிவில் நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பைக் காணலாம்.