Pages

(பக்கம் 132-134)
இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை, அதாவது செல்கள், அதாவது சிலிகான்களைப் போன்று, நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து, நமக்குள் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும், இன்று, விஞ்ஞான அறிவு கொண்ட, கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பதிந்தபின், அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
மனிதன் என்ற எண்ணமே, இங்கே போய்விட்டது,
இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு,
இன்று நாம் வந்துவிட்டோம்.
இவ்வாறு, நாம் அந்த நிலைகள் கொண்டு, இதை நமக்குள் பதிவு செய்தபின், இருந்த இடத்திலே இருந்துகொண்டே, ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்துவிட்டது, இன்றைய விஞ்ஞானம்.


ஆக, மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும், சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும், இந்த பூமியினுடைய நிலைகளும், அணுக்களாக பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.


இன்று, பூமியினுடைய நிலைகளில் அணுகுண்டு வெடித்தால், இவன் பதுக்கி வைத்திருக்கும், லேசர் கதிரியக்கங்கள், நீருக்குள்ளும், நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற அணுக்கள் வெடிக்கும். இதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.


அவ்வாறு எடுத்தாலும், அணு நீர் மூழ்கியினுடைய நிலைகளை ஒரு இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும், அது ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அணு கதிரியக்கங்கள் தாக்கி, அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்,


அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும், பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு, இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் ஊடுருவி, வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.


அவ்வாறு வந்தாலும், இன்று வரக்கூடிய நிலநடுக்கங்கள் இவன் அணு உலையாலே, இவன் அணுக்களைக் கண்டுபிடித்து, மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று, இவன் எண்ணுவான்.


ஆனால், இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் ஆனவுடன், இந்த இயற்கையின் துடிப்பு கொண்டு, தன் கதிரியக்கச் சக்தியை அதிகமாக காட்டும். அங்கே எதிர்நிலையான நிலை வரப்படும்போது, பூமியில் நிலநடுக்கம் ஏற்படும், எல்லாமே போய்விடும். இந்த அளவுக்குத்தான், உலகின் தன்மைகள் இருக்கின்றது.


ஆக, இயற்கையின் நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும், மனிதனின் உணர்வுக்குள் எட்டியதை அசுத்தப்படுத்திக் கொண்டு, மனித உணர்வுக்குள்ளும் பதியச் செய்து, இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.


ஆனால், இதுபோன்று வெடித்தாலும், வெடிக்கும் நிலைகள் கொண்டு, புகை மண்டலங்களாகக் கூட்டப்பட்டு, சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்திவாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி, பூமியில் இருக்கக்கூடிய, நீர் வளங்கள் அனைத்துமே, உறையும் தன்மை பெறும். இங்கே, நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே, உறையும் தன்மை வருகின்றது.


இதிலிருந்து வெளிப்படும் இந்த கதிரியக்க சக்தியின் தன்மைகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன், இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி, இதே உணர்வின் தன்மைகள், சூரியனிலே மாறுபடும் காலங்கள் வருகின்றது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே, இன்று சூனிய நிலைகளாக ஆகும் காலம் வந்துவிட்டது.


யாம் சொல்வது, உங்களுக்குப் புதிராக இருக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு, நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது என்று சொல்வார்கள். இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம்.


நமது குருநாதர், ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி,
மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது? அதிலே, நீ எவ்வாறு செயல்பட வேண்டும்? என்ற நிலைக்கு, எமக்கு உபதேசித்தார். ஆகையினாலே, இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து,
இது சரி, இது தப்பு, என்று வரவேண்டாம்.


இந்த தபோவனத்தில், நாம் அனைவரும் மெய் ஒளியைக் காணவேண்டும். குறைகளைக் காண வேண்டாம், மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் ஓரே குடும்பம், ஓரே நிலைகள் தான்.


நமக்குள், இருளான நிலைகள் வந்தாலும் உடனடியாக மாற்றிச் சென்று, மகரிஷிகளின் அருளாலே, இந்த இருள்கள் நீங்கவேண்டும், நாம் அனைவரும் ஒளிநிலைகள் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்கு தான்,
நமது குருநாதர் ஆணைப்படி,
இதை யாம் செயல்படுத்தினோம்.
நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும், ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த உணர்வின் ஒளிகள், நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.


நாம் இடும் மூச்சலைகள்,
நாளை, மழை நீராகக் கொட்டவேண்டும்.
அப்படிப் பெய்யும் மழை நீருக்குள், இந்த விஷத்தன்மைகள்
(விஷக் கதிரியக்கங்கள்) மாயவேண்டும்.


அந்த விஷத்தின் தன்மைகளை, நீக்கும் ஆற்றல்களை,
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூண்டும் நிலைகள்தான்,
யாம் செயல்படுத்தும், இந்த தபோவனத்தின் தத்துவம்.





(பக்கம் 137, 141-143)
பேரண்டத்தினுடைய பேருண்மையினுடைய நிலைகளை, யாம் சொன்ன பின்னும், இதை அலட்சியப்படுத்தாதபடி, காலத்தை விரயப்படுத்தாதபடி, ஒவ்வொருவரும் “துருவ தியானத்தை” பத்து நிமிடமாவது செய்யவேண்டும்.


அதற்குப் பின், ஆத்ம சுத்தியை நாம் பயன்படுத்தி, வாழ்க்கையில் வரக்கூடிய, எத்தகைய இன்னல்களானாலும் துடைத்துப் பழகவேண்டும்.


இந்த ஆத்ம சுத்தியினுடைய எண்ணமே, துருவ நட்சத்திரத்துடன் உங்கள் எண்ணங்களைத் தொடர்பு கொள்ளச் செய்து, அந்த உணர்வை உங்களுக்குள் சிறுகச் சிறுக, சேர்க்கச் செய்வது தான்.


யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள், அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியுடன் கலந்து, மெய்ஞானிகள் நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, அந்த காந்த அலைகளுடன் தொடர்பு கொண்டு, சப்தரிஷி மண்டல ஒளி உணர்வுடன் தொடர்பு கொண்டு,
குருநாதர் இட்டுச் சென்ற நிலையை,
அந்த உண்மையின் உணர்வின் தன்மையை,
உங்கள் செவிப்புலனறிவாலே ஈர்க்கச் செய்து,
இந்த உணர்வின் சத்தான அமுதை,
உங்கள் ஈசனான உணர்வுக்குள் உராயச் செய்து,
இந்த உணர்வின் தன்மையை,
உங்கள் உடலான சிவத்திற்குள், அமுதாக சுரக்கச் செய்து,
சிவனுக்குள் இருக்கக் கூடிய, அந்த ஈசனின் வெப்பத் துடிப்பாலே,
இந்த உணர்வின் சத்துக்களை, அணுத்திசுக்களாக மாற்றி,
அணுத்திசுவான நிலைகளில்,
உங்கள் உயிராத்மாவில் சேர்க்கும் தன்மையும்,
இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்,
மெய் ஒளியின் உணர்வுக்குள் நாம் சேரும் நிலையைத்தான், யாம் செய்வது.


உங்களுடைய உயிரான ஈசனிடம் வரம் கேட்டுத்தான், இந்த உணர்வின் ஆற்றல்மிக்க அந்த சக்தியின் தன்மையை, ஆராதனை எடுக்கும் முறையில்தான், யாம் இந்நேரம் வரையிலும் பிரார்த்தித்தோம்.


ஆக, உங்களுக்கல்ல இந்த உபதேசம். யாம் பிரார்த்தித்த இந்த உணர்வுகள், நீங்கள் செவி கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் உயிரான ஈசனுக்கு, ஆராதனை.


இதை, நீங்கள் எந்த அளவுக்குத் தடைப்படுத்தாதபடி சுவாசிக்கின்றீர்களோ, இந்த உணர்வின் சத்தான நிலைகள், உங்கள் உடலான சத்தான நிலைகளில் மகிழ்ச்சி அமுது. ஆனால், உங்கள் சிவத்திற்குள் கூடியிருக்கக் கூடிய உணர்வுகள், தெய்வங்கள். அந்த நற்குணங்கள் அனைத்துமே மகிழ்ச்சியும், அதற்குள் ஒவ்வொரு அணுக்களின் தன்மையும், ஆற்றல்மிக்க தெய்வங்களாக உங்களுக்குள் ஊடுருவி, உங்கள் பேச்சும், மூச்சும்
அது ஒவ்வொன்றும், ஒவ்வொரு நிலைகளிலும், துன்பம் போகும் என்று நீங்கள் சொன்னால்,
கண் துன்பத்தை பார்த்தாலும், உனக்குத் துன்பமில்லை என்று நீங்கள் சொன்னாலும்,
பிறருடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.


அதே சமயம், ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, “மகரிஷிகளின் அருளாலே, எனக்குள் நல்ல ஒளி பெறுகின்றேன், நலம் பெறுகின்றேன், எனக்கு வியாதியில்லை” என்ற இந்த உணர்வை உங்களுக்குள் கூட்டிச் சென்றால், உங்களுக்குள் வரக்கூடிய துன்பமும் போகும்.


ஆக, அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி, இதை நீங்கள் செயலாக்குங்கள். உங்கள் பேச்சும் மூச்சும், உங்கள் உடலுக்குள் அதை நலம் பெறச் செய்யட்டும்.
உங்கள் மூச்சலைகள், இந்த உலகத்திற்கு உதவட்டும்.
உங்கள் குடும்பத்திற்கு உதவட்டும்.


எத்தொழில் செய்தாலும், எந்த வியாபாரம் செய்தாலும், நீங்கள் விடும் மூச்சலையாலே பிறருடைய துன்பங்களைப் போக்கி, உங்களுக்கு அங்கிருந்து மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். அந்த மகிழ்ச்சியின் எண்ணங்கள் தோன்றி, நாம் ஒளி நிலைகள் பெறுவோம்.






பக்கம் 143-148)
அத்திரி மாமகரிஷி, அவ்வளவு பெரிய அரசன், தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து, அந்த மெய்ஞானியின் அருள் ஒளி பெறவேண்டுமென்று, மக்கள் மத்தியிலே வந்தான்.


அதைப் போல நாம் ஒவ்வொரு குடும்பத்திலும், இன்றைக்கு யாராவது குறை சொல்லிவிட்டால், இரு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நாம் பேசுகின்றோம். இது அரசுக்குச் சமம்தான்.


நாம் நல்ல நிலையில் இருக்கும்போது ஒருவர் கேவலமாகப் பேசிவிட்டால், நாம் நல்ல மதிப்பாக இருக்கிறோம், குறைத்துப் பேசுகிறான், இவன் திமிரைப் பாரு, இரு நான் பார்க்கிறேன் என்போம்.


இந்த உணர்வுகளில் நாம் எண்ணும்போது, நம் உயிரான ஈசனுக்குள் பட்டவுடன், இரு நான் பார்க்கிறேன், என்று இந்த உணர்வுகள் வரும். நாம் சொல்லும்போது, இந்த உணர்வுகள் நமக்குள், ஈசனுக்குள் பட்டுத்தான், அந்த வேலையைச் செய்கின்றது.


ஆக, இதைபோன்று நமக்குள் வரும் இந்த நிலையை அன்று “அத்திரி மகரிஷி” இதையெல்லாம் கண்டுணர்ந்து, தான் ஆணையிட்டால் எத்தனையோ செயல்படும் நிலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் துறந்து, தன் உணர்வின் தன்மையை மாற்றிக் கொள்வதற்கு, ஒவ்வொரு மனிதனையும் ஈசனாகக் கருதினான். ஆக ஈசனுக்கு அபிஷேகம்.


மகிழ்ச்சியாவதற்கு தான் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு, மழை நீராக கொட்டச் செய்தான். ஆனால், ஒவ்வொருவரையும் பசியாறச் செய்து, ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியின் தன்மை வருவதற்கு வேண்டி, மக்களை நாடி வந்தான். அதைப்போல, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நமக்குத் துன்பம் என்று எப்பொழுது தோன்றினாலும் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.


நம்மைத் துன்புறுத்தும் நிலையோ, நம்மைக் கேவலப்படுத்தும் நிலையோ, நம்மை அசிங்கப்படுத்தும் நிலையோ, பிறர் பேசிவிட்டால், அசிங்கப்படுத்திவிடாதீர்கள். அதை உடனே தடைப்படுத்துங்கள். ஆக, உயிரான ஈசனுக்குள், அதை நுழையவிடாதபடி தடைப்படுத்துங்கள்.


“ஓம் ஈஸ்வரா” என்று உயிருடன் தொடர்பு கொண்டு, அவனிடமே கேளுங்கள்.


“மகரிஷிகளின் அருள் ஒளியை, என் ஜீவாத்மா பெறவேண்டும், மகரிஷிகளின் அருள் ஒளியை, என் உடலுக்குள் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள், இந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய, அந்த அணுக்கள் ஒவ்வொன்றும், அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும்” என்று, நாம் எண்ணி ஏங்கி எடுக்க வேண்டும்.


ஏனென்றால், இந்த ஆலயத்திற்குள் நின்று, அந்த அணுவின் தன்மை கொண்டு, உயிரான நிலைகளில்தான் செயல்படுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிமிடமும், நமக்குள் இதைச் செயல்படுத்தும்போது, நமக்குள் தீய உணர்வுகள் வராது தடுப்பதோடு, நம் பேச்சும் மூச்சும், நமக்கு எந்தத் துன்பத்தை ஊட்ட எண்ணுகின்றனரோ, அவர்களிடம், நாம் இந்த எண்ணத்தைப் பாய்ச்சிவிடுவோம்.
“அவர்கள் செய்வது நாளை நல்லதாக இருக்கட்டும், அவர்கள் பேச்சும் மூச்சும் நல்ல உணர்வுகளை ஊட்டட்டும்” என்று நீங்கள் எண்ணுங்கள்.


இவ்வாறு, இதை நீங்கள் எண்ணினால், அவர் நம்முடைய எண்ணங்களை அவர் எடுத்தால் எடுத்துக் கொள்ளட்டும். எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.


ஆனால், நமக்குள் “அவர்கள் அப்படி செய்கிறார்களே”, என்று வேகமாக இழுத்து, உணர்வைக் கூட்டிவிட்டால், நமக்குள் அந்த வேலையைச் செய்துவிடும்.


ஏனென்றால், நாம் எதை எண்ணினாலும், அது, நமக்குள் வருகின்றது. நம் ஈசனைவிட்டு அகலுவதில்லை. கொடுப்பதைச் சமைப்பான். ஏனென்றால், நாம் எதை எண்ணுகின்றோமோ, இந்த உயிரில் நாம் சுவாசித்தவுடன், இதுவே பிரம்மமாகின்றது.


ஆக, நாம் எந்த சந்தர்ப்பத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும்போது, அந்த மகரிஷிகள் நல்லதை உருவாக்கும், பிரம்மத்தின் ஆற்றல் பெற்ற சக்தி பெற்றவர்கள்.


நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் அந்த பிரம்மத்தை உருவாக்குவதற்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெற்று, அந்த மெய்ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை, நமக்குள் சுவாசித்து இந்த உயிரான நிலைகளில் பிரம்மமாக்கும்போது, அது பிரம்மமாகி நமக்குள் ஜீவனாகின்றது.


இதனுடைய தத்துவத்தை, வெகுகால நிலைகளில் உங்களுக்கு கிடைக்கச் செய்துள்ளேன். இதை தவறவிடாதீர்கள். உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு, ஆணித்தரமாக, அழுத்தமாக, அந்த மெய் உணர்வின் மகரிஷிகளின் அருள் ஒளிகளை, உங்களுக்குள் பெருக்குவதற்கு, இந்த உணர்வை யாம் பதிவு செய்கின்றோம். எமது அருளாசிகள்.






(பக்கம் 158-161)
ஒவ்வொரு உணர்வலைகளையும் நமக்குள் பதியச் செய்து, இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, எதையெல்லாம் வளர்த்துக் கொண்டோமோ, இன்று T.V., ரேடியோ நாம் எங்கிருந்தாலும், “டெலிபதி” வயர் இல்லாதபடி, சில நிலைகளில் தொடர்பு கொண்டு, பல கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் இருப்பதை, T.V.யில் ஒலிபரப்பு செய்து, கதிரியக்கச் சக்தியாலே, அறிந்துணர்ந்து செயல்படச் செய்யும் ஆற்றலினுடைய நிலைகள், இன்று வந்துவிட்டது.


ஆக, அதையெல்லாம் எடுத்து விண்ணின் ஆற்றலும், விஞ்ஞானி எதை எதைக் கொண்டு, எந்தெந்த உணர்வின் ஆற்றல்களை, எந்தெந்த அலைவரிசை கொண்டு இயக்கினானோ, அந்த அலைவரிசைகள் அனைத்துமே, மனித உணர்வலைகளுக்குள்ளும் கலந்துவிட்டது. மனித எண்ணத்திற்குள்ளும் கலந்துவிட்டது.


மனித எண்ணத்திற்குள் கலந்து உணர்வாகும் போதுதான், இவன் சிந்திக்கப்படும்போது, இந்த அணு ஆயுதங்களினுடைய தன்மையும், துரித நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக்கும், துரித வேக நிலைகளில் இந்த உணர்வலைகளைக் கண்டுணர முடிந்தது.


இப்படி அலைவரிசைகளில், தான் கண்டுணர்ந்தாலும், அநேகமாக அணுகுண்டுகளினுடைய நிலைகளால் பூமியை நிர்மூலமாக்குவதற்கு, இந்த மணலைப் போன்றே, உலகம் முழுவதுமே உருகி, அப்படியே கரைந்து ஓடக்கூடிய நிலைகளுக்கு, அணுகுண்டுகள் இந்த பூமியில் இருக்கின்றது.


ஆக, ஏக காலத்தில் அது வெடித்தால் போதும். ஒவ்வொரு மண்ணுக்குள்ளும் இருக்கக்கூடிய கதிரியக்கங்கள் அது உருகி, புயலாக மாறி, விண்ணிலே இது ஆவியாகப் பறக்கும் நிலைகளுக்கு, இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும் கண்டுபிடித்துவிட்டார்கள்.


இவையெல்லாம், விஞ்ஞானிகள் வெளியிலே சொல்லவில்லை. இன்று யாம் சொல்லியிருக்கின்றோம். “குறித்துவைத்துக் கொள்ளுங்கள்” இனி ஒவ்வொன்றாக வரிசையாக சொல்லிக் கொண்டு வருவார்கள்.


இப்படிச் சொல்கின்றாரே, என்று நினைப்பதற்குப் பதில், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். யாம் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன், சொன்னதெல்லாம் இன்று வந்துகொண்டே இருக்கின்றது. முதலில் சொன்னது சிறிதளவே.
ஆக, யாம் ஒவ்வொரு நிமிடமும்
உங்களைக் காப்பதற்காக வேண்டி,
நமது குருநாதர் காட்டிய முறைகொண்டு,
சில உணர்வுகளினுடைய நிலைகளில்,
தொடர்பு கொண்டே, வந்து கொண்டிருக்கின்றோம்.


ஆக நம்முடன் இணைந்தவர்களுக்கு,
எப்படி குருநாதர், எமக்குத் தெரியாமல்
எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ,
அதே மாதிரிதான், நமது அங்கத்தினர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும், உங்களுக்குத் தெரியாமலே, பல சக்திகளை, உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.


யாம் ஒவ்வொரு நிமிடமும் பேசுவது, வெறும் பேச்சல்ல. நமது குருநாதர் தொடர்பு கொண்ட, அந்த உணர்வின் தொடர்பு கொண்டு, அந்த ஒளிகளை உங்களுக்குள் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றோம்.


ஆக, இந்த (கதிரியக்கம்) அலைவரிசையிலே, இன்று உலகம் முழுவதும் சிதறுண்டு போகக்கூடிய நிலைகளுக்கு வந்துவிட்டது. இன்று மனிதர்களாக இருக்கும் நாம், என்னதான் சத்தியத்தைப் பேசினாலும், தர்மத்தைப் பேசினாலும்,
எனக்கு தியானம் இருப்பதற்கு நேரமில்லை என்றுதான், சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அப்படியே தியானமிருந்து, சக்தி கிடைத்தாலும்கூட, அதையும், கொஞ்ச நாளில் விட்டுவிட்டுச் செல்வதற்குத்தான் இருப்பார்கள்.
இப்படித்தான் இருக்கின்றோம்.


இங்கு, யாம் எவ்வளவு சிரமப்பட்டுக் கொடுத்தாலும்கூட, அதை விட்டுவிட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.


அதே சமயத்தில், நமது எண்ணங்கள் என்ன செய்கின்றது? இரு நிலையான உணர்வுகள் கொண்டு, நாம் பெறமுடியாத நிலைகளில், நம்மை தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
இன்று விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு, பல நிலைகள் கொண்டு வருகின்றோம். இதையெல்லாம், நமது குருநாதர் ஒவ்வொரு நொடிக்கும் வேதனையைக் கொடுத்து, கஷ்டத்தைக் கொடுத்து, உணரச் செய்தார். அப்படி உணர்ந்த உண்மைகளைத்தான், யாம் சொல்கின்றோம்.


எனவே, நாம் அனைவரும் நமது குரு காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, ஒவ்வொரு நொடிப் பொழுதும், உயிர் வழி கவர்ந்து, நம் உடலுக்குள் சேர்த்து, பேரொளியாக மாற்றி, இந்த விஞ்ஞான அறிவால் விளைந்துள்ள, விஷக்கதிரியக்கங்களில் இருந்து மீளுவோம். உலக மக்களையும் இதிலிருந்து விடுபடச் செய்ய, தவம் இருப்போம். எமது அருளாசிகள்.