(ஜூலை 1993)
எமன் என்பது என்ன? எமன் என்பது நமது எண்ணம்தான், அதாவது வேதனையான உணர்வை, நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால், அது நமக்குள் பாசக் கயிறாக மாறுகின்றது.
எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ, அதனின் அறிவில்லாத செயலைப் போன்று, நாம் எடுக்கும் வேதனையான உணர்வால், நமது எண்ணங்கள் சிந்தித்து செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.
நாம் சிந்திக்கும் திறனை இழந்து, அறியாமையால் உழலப்படும் பொழுது, நமது எண்ணங்கள் வலுவிழந்து, நம் வாழ்வில் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.
அதாவது, எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு, எமன் எனும் எண்ணம், நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே, அன்று மகரிஷிகள் எமனுக்கு, எருமையை வாகனமாக வைத்து, எமன், சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான், என்று காண்பித்தருளினார்கள்.
அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் சித்திர புத்திரனாக இயக்கம் பெறுகின்றது.
இந்தச் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம், நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று, தீமையை அகற்றிடும் செயலாக, அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது.
நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது, அவைகள் நமக்குள் சித்திர புத்திரனாகின்றன.
கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ,
அவை நமக்குள் புகுந்து, புத்திரனாக விளைகின்றன.
நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மிடத்தில் உள்ள இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன. தீமையை அகற்றுகின்றன.
தீமையில்லாத உலகத்திற்கு, உயிர் நம்மை அழைத்துச் சென்று, என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையை அடையச் செய்கின்றது. ஆக நாம் அங்கே “பிறவா நிலை” என்பதை அடைகின்றோம்.
“மார்க்கண்டேயனை” நோக்கி எமன் பாசக் கயிறை வீசுகின்றபோது, மார்க்கண்டேயன் “சிவலிங்கத்தை” அணைத்துக் கொள்கின்றான். இதில் “லிங்கம்” என்பது உயிர், ஆவுடை என்பது உடல்.
அங்கே, மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது, லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான். அதாவது உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.
ஆகவே, நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும், ஆகவே நாம் எண்ண வேண்டியது எது? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒளியாக நின்று, நாம் எண்ணியது அனைத்தையும், அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும், இயக்குவதும், அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி, நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து, அதை ஏங்கி எடுத்தோமென்றால், அது சித்திர புத்திரனாக செயல் படுகின்றது.
அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது, அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய, அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.
“ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும்” என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது, “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளி சரீரத்தை நீங்கள் அடைய முடியும்.
வாழ்வில் சஞ்சலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது, உங்கள் உயிரை எண்ணி, ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது, உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.
மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை, லிங்கத்தை அதாவது உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான். அது போன்றே, நீங்கள் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா’ என்று உயிரை எண்ணி, ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை, நீங்கள் எடுக்கும் பொழுது, உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக, ஒளியின் சுடராக விளைகின்றது.
இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக, எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
நீங்கள் எந்த அளவிற்கு, இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ, அந்த அளவுக்கு ஆழமாக, யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள், உங்களிடத்தில் பதிவாகின்றன.
யாம் கொடுக்கும் உபதேசங்களை, அடிக்கடி நினைவு கூர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி ஏங்கும்போது, அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து, உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.
ஆகவே, இந்த உபதேசத்தைப் படித்து, தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும், இருள் சூழ்ந்த இவ்வுலகில், நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும்விதமாக, துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும், மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து,
மார்க்கண்டேயனைப் போன்று, “என்றும் பதினாறு” என்ற
நிலைத்த ஒளி சரீரத்தை பெறவேண்டும் என்று
நெஞ்சில் அவா கொண்டு,
நம் குருநாதர் காட்டிய, மெய்வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும், எமது அருளாற்றலை பூரணமாக வழங்குகின்றோம்.

(ஜனவரி 1994)
நன்மை எது, தீமை எது என்பதை அறிந்துணர்ந்து, அதில் நன்மைகளை நாடுவதே, “மெய்ப்பொருள் காணும் திறன்” ஆகும். இதில் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளி நிலை பெறச் செய்வதே “மெய்ப்பொருள்” ஆகும்.
ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் தன்மையைப்987 பெற்றது. ஒவ்வொரு உயிரும், தனது துடிப்பின் இயக்கத்திற்குள் வந்து மோதும் உணர்வினை, ஜீவ அணுக்களாக மாற்றும் தன்மை பெற்றது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், சில எதிர்நிலை உணர்வுகள் இருக்கும்.
வைரக்கற்களில், விதவிதமான கலர்கள் உண்டு. ஒவ்வொரு இன வைரக்கல்லிலும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மை அதிகமாக இருக்கும். இவ்விதமாக இருபத்தியேழு விதமான வைரக்கற்கள் உண்டு. இது போன்றே ஒவ்வொரு நட்சத்திரத்தின் வலுவின் தன்மைக்கேற்ப, இங்கே உணர்வின் இயக்கங்கள் இருக்கின்றன.
விண்ணிலே இருக்கக்கூடிய நட்சத்திரங்களின் உணர்வலைகள், ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது, அவைகளின் மாறுபட்ட நிலைகளினால், ஒன்றோடு ஒன்று எதிர் நிலையாகும் பொழுதுதான், விண்ணுலக ஆற்றலே, இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
அதைப் போன்று, ஒரு உணர்வின் சக்தி நம் உடலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையாக இருந்தாலும், அதற்கு
எதிர்மறையான நிலைகள் வரும் பொழுதுதான்,
உந்தி இயங்கும் நிலை வருகின்றது.
இன்று மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும், அதனுள் நெகடிவ், பாசிடிவ் என்று, ஒன்றுக்கொன்று எதிர்மறையான நிலைகளில் இருக்கும் காரணத்தினால்தான், பிற பொருள்களை இயக்க முடிகின்றது.
இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும், நவக் கோள்களின் சக்தியையும் உள்ளடக்கி, உயிருடன் ஒன்றிய உணர்வினை, ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள், சப்தரிஷி மண்டலங்கள் என்பதை நாம் அறிய வேண்டும்.
இந்த சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரும் ஒளி அலைகளை, நம் தியானத்தின் பொழுது, எண்ணத்தில் வலுக்கொண்டு, ஏங்கி எடுத்து, நம் உயிருடன் இணைக்கப்படும் பொழுது, அம்மகரிஷிகளின் அருள் சக்தியினால், நட்சத்திர வலுவின் தன்மைகளை நமக்குள் சமப்படுத்தி, நமக்குள் வரும் நஞ்சான நிலைகளை நீக்கி, மெய்ப்பொருளை கண்டுணரும் தன்மையாக, விண்ணின் ஆற்றலை நமக்குள் எடுத்து, நம்மை வளர்க்க முடியும்.
“வசிஷ்டாத்வைதம்” என்று
எதனையும் தனக்குள் கவர்ந்து, அருந்ததியாக
இணைந்தே வாழும் நிலைகளும்,
இணைந்தே அறிந்திடும் நிலைகளும்,
இணைந்தே இயங்கிடும் நிலைகளும், இந்த உடலிலே
இணைத்திடும் நிலைகள் கொண்டு,
நாம் என்றைக்கு நமக்குள் இயக்கிடும் நிலைகளைப் பெறுகின்றோமோ அன்று இதனை,
இணைத்திடும் நிலைகள் ஆகி,
மகரிஷிகளின் அருள் உணர்வு அதைப் பருக வேண்டும். அவ்வாறு பருகும் நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான், “கூட்டு தியானம்”.
ஆகவே, நமது குருநாதர் விண்ணுலக ஆற்றலின் தன்மையை, அவர் வாழ்க்கையில் கண்டறிந்தார். அதனின் நெறி முறைகளை, அவருக்குள்ளேயே விளைய வைத்தார். அவ்வாறு அவருக்குள் விளைய வைத்த நிலைகளை, அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள், எமக்கு உபதேசித்தார்.
அவ்வாறு உபதேசித்து அருளி, விண்ணுலக ஆற்றலை, எவ்வாறு பருக வேண்டும், மற்ற எல்லோரையும் எப்படிப் பருகச் செய்ய வேண்டும் என்று உணர்த்திய அவரின் அருள்வழி நெறிகளை, உங்களுக்குள் நீங்களும் பெறவேண்டும்.
அதனை நீங்கள் பெறவேண்டும், என்று எண்ணத்தால் எண்ணும் பொழுது, மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்ந்து, இந்த உணர்வை வலுக்கொண்டதாக மாற்றி, இம்மனித வாழ்க்கையைக் கடந்து செல்வோம் என்றால், நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நிலைத்திடும் நிலையாக இருந்திட முடியும். நாம் அனைவரும் அத்தகைய நிலைகளை, நிச்சயம் பெறுவோம்.
தாய், தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு, தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும், உலகில் மிக மிக உயர்வானது. இதில், குருவானவர் தன் சிஷ்யனுக்கு எதை, எப்பொழுது, எப்படிக் கொடுப்பது என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.
ஆக ஒவ்வொருவரும் தான் உயர்ந்தவைகளைப் பெற வேண்டும் என்று உயர்ந்த, நல் எண்ணங்களை எண்ணி ஏங்கும் பொழுது, குரு அருளைப் பெற முடிகின்றது.

(பிப்ரவரி 1994)
எமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள், அருள்ஞான வித்தை எமக்குள் பதித்து, பதித்த வித்தை எமக்குள் வளர்ப்பதற்கு, எங்கெங்கெல்லாம் மகரிஷிகளின் அருள்ஞான சக்தி தொடர்ந்து உள்ளதோ. அங்கெல்லாம் எம்மைக் கால் நடையாக சென்றுவர கட்டளையிட்டு, ஞானிகளின் உடலில் விளைந்த அருள் ஞானசக்திகள் அந்த இடங்களில் பதிந்திருப்பதை, படர்ந்திருப்பதை நுகர்ந்தறியச் செய்தார். மேலும் அதனின் ஆனந்த நிலையினை, எமக்குள் விளைவித்துக் கொள்ளச் செய்தார்.
பூமியில் மனிதராக பிறந்த நாம்,
எவ்வாறு இந்த உடலை விட்டு,
வெளியே செல்ல வேண்டும்?
சென்றபின் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்று,
அதையும் குருநாதர் செய்து காட்டுகின்றார்.
உயிரான்மாவை, உடலை விட்டுபிரியச் செய்கின்றார்.
ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்.
ஒளியின் சுடராக ஆனபின், இந்த உயிரான்மா எந்த நிலையில் இருக்கும்? என்பதையும் நிலைக்கச் செய்து காட்டுகின்றார்.
உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை, மகாஞானிகளின் அருளாற்றலின் துணை கொண்டு, வளர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், விண்ணும் மண்ணும் போற்றும், மகாஞானிகளில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.
(ஏப்ரல் 1994)
ஆதிமூலமாகிய உயிரையும், அதற்கு ஆதாரமாக இருக்கும் உணர்வையும் அறிந்து, அதனின் உயர்வுக்காக நாம் செய்யும் சேவையானது, நம் மூலாதாரத்தைப் புனிதப்படுத்தி, "பெருவீடு பெருநிலை" எனும் நிலைக்கு அழைத்துச் செல்லும்.
(மே 1994)
கடல் அலைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட சிறு துரும்பு, அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிவது போல, நாமும் மனித வாழ்க்கையில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படுகின்றோம்.
துயர்மிகு இவ்வாழ்க்கையிலிருந்து காத்துக் கொள்வதற்காக, மேலான மெய்ஞானத்தைப் பெறவேண்டும் என்று பாடுபடும் பொழுது, மெய்ஞானிகளின் அருளை நாம் பெறமுடியும்.
தெய்வச் செயல் என்பது, தீமையானவற்றை நாம் காணும்பட்சத்தில், "மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெறவேண்டும்" என்று எண்ணி ஏங்கும்போழுது, நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.
மேலும், யார் நமக்கு தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ , அவரிடத்தில் "நல்ல உணர்வுகள் வளர வேண்டும்" என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது, அங்கே கடும் சொல் வராது, அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து, அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி, அவர் நம்மீது கொண்ட பகைமையை நீக்கி, நட்பினை வளர்க்கும்.
பிறவிப் பெருங்கடல் நீந்தி, தன் ஞானத்தால் பிறவி இல்லா பெரு நிலையை அடைந்து, உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக, இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை பெறும் ஏக்கத்துடன், நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும்பொழுது, அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து, அங்கே சுழலும் சக்தியாகப் "பிறவா நிலை" என்னும் நிலையை, அடையச் செய்கின்றது.
அவ்வாறில்லாமல், நமக்கு தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால், இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா, இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி என்ணிக்கொண்டிருந்தோமோ, அவரின் உடலுக்கு இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,
பின், அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து, அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை, இந்த உயிரான்மா கவர்ந்து, அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி, இதுவும் வீழ்ந்து, பிறிதொன்றைக் கொன்று புசிக்கும், உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி, அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.
ஆகவே, நாம் தேய்பிறை போன்று இல்லாது, வளர்பிறையாக, நமது மெய்ஞானத்தை வளர்க்கும் விதமாக, மெய்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து, வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி, விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகாஞானிகளின் ஈர்ப்பில் கலந்து, நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம் என்ற பேரவாவுடன் கூட்டுத் தியானங்களில் ஏங்கி தியானிக்கும் அனைத்து உயிரான்மாக்களுக்கும், எமது ஆசீர்வாதங்கள்.
கல்வி, விஞ்ஞானம் போன்றவைகள், நம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே உதவ முடியும். மெய்ஞானம் ஒன்று மட்டுமே, நம் ஆன்மாவுக்கு உயர்வு தரும். அந்த மெய்ஞானத்தை, குருவின் அருளால்தான் பெறமுடியும்.