முந்தைய பதிவுகளிலிருந்து ....
காதல் ஏற்படக் காரணம் என்ன?
இயற்கையான காதல் தோன்றுவதற்கு முக்கிய காரணிகள் 4 என்பதே எமது ஆய்வு.
(1) புற அழகை வைத்து உண்டாகும் காதல்
(2) பருவக் கோளாறால் உண்டாகும் காதல்
(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்
(4) மேற்கூறிய 3 காரணங்களும் இல்லாமல், வரும் காதலை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜாதகத்தில்
பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு வீடு உண்டு. அதாவது லக்னத்தில் இருந்து 5
ஆம் இடம். இந்த பாவத்தை ஆராய்ச்சி செய்யும் பொழுது பல ஆச்சரியமான
விஷயங்கள் தெரிய வரும். இந்த 5 ஆம் வீட்டிற்கு எந்த வகையிலாவது காதல்
மன்னன் சுக்கிரன் சம்பந்தம் ஏற்பட்டால், எந்த காரணமுமில்லாமல் காதல்
ஏற்படும். அதாவது இந்த பிறவியை வைத்து காரணங்களை ஆராய இயலாது. போன
பிறவியின் விட்ட குறை, தொட்ட குறை ஏதாவது இருக்கும். பெருங்காய டப்பாவை
கழுவி காய வைத்தாலும் பல நாட்களுக்கு அதன் வாசம் இருக்கும். அது போல புதிய
பிறவிகள் எடுத்தாலும், முந்தைய பிறவியின் வாசம் இருக்கவே செய்யும். இதனை பல
நாடுகளிலும் ஆராய்ந்து உறுதிபடுத்தி இருக்கிறார்கள். தமிழிலும் “நெஞ்சம்
மறப்பதில்லை” போன்ற திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இவைகள் எல்லாம் கதைகள்
என்று சொன்னாலும், உலகப் பொது மறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
திருக்குறளில் “ஊழ்வினை” என்று ஒரு அதிகாரம் ஒதுக்கி முற்பிறவிப் பயனைப்
பற்றி எழுதியுள்ளார். ஜோதிட அறிவியலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை
ஒதுக்கியுள்ளது. இந்த ஸ்தானத்துடன் சுக்கிரன் தொடர்பு ஏற்படின் இந்த வகையான
காதல் ஏற்படும். அதாவது,
(1) மிதுன, மகர லக்கினகாரர்களுக்கு
சுக்கிரனின் வீடான துலாம், ரிஷபம் முறையே பூர்வ புண்ணிய ஸ்தானமாகிறது. இந்த
லக்கின காரர்களுக்கு இவ்வகையான முன் ஜென்மத்தில் விட்ட குறை, தொட்ட
குறையான காதல் ஏற்படலாம்.
(2) விருச்சிக லக்னகாரர்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால், இவ்வகை காதல் ஏற்படலாம்.
(3) மற்ற லக்கினகாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் நிற்பதாலும் இவ்வகை காதல் ஏற்படலாம்.
(4)
அந்தந்த லக்கினங்களுக்கு 5ஆம் அதிபதி, காதல் மன்னன் சுக்கிரனுடன் கூட்டணி
அமைத்தாலும், இவ்வகை காதல் ஏற்படலாம். ஆனால் இந்த கூட்டணி வெற்றி பெறுமா
என்று ஜாதகத்தை ஆராய்ந்தே கூற இயலும்.
(5) காதல் மன்னன் சுக்கிரன்
5ஆம் அதிபதியின் சாரத்தைப் பிடித்தாலும், அல்லது 5 ஆம் அதிபதி, சுக்கிரனின்
சாரத்தைப் பிடித்தாலும், இவ்வகை காதல் ஏற்படலாம். (சாரம் என்றால் லுங்கி
என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், இது நட்சத்திர சாரமாகும்)
இவ்வாறு
சமூக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல காரணங்கள் காதலுக்கு
சொல்லப்படுகிறது. வேறு ஏதாவது காரணங்கள் இருப்பின், வாசகர்கள் என்னுடன்
இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொண்டால் நன்றியுடையவன் ஆவேன்.
புதிதாக
கேள்வி-பதில் பகுதியை தொடங்கலாம், என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
இது பற்றிய தங்களுடைய மேலான கருத்தைத் தெரிவிக்குமாறு, வேண்டிக்கொள்கிறேன்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்