Pages

ஜோதிடம் கற்கலாம் வாங்க - 5

கடந்த பாடத்தில் நட்சத்திர பங்கீட்டை அட்டவணையாக அளித்திருந்தேன். இதனை இராசி சக்கரத்திலும் இந்த பாடத்தில் அளித்துள்ளேன். இப்படி இராசி சக்கரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தாங்கள் பயிற்சி செய்வது மிகுந்த பயனளிக்கும். ஒரு கிரகத்தின் நட்சத்திர பாதம் கொடுக்கப்பட்டு இருப்பின், அதனை சட்டென்று இந்த ராசி சக்கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி எழுதி விடலாம்.





மீனம்

பூரட்டாதி 4

உத்திரட்டாதி 1,2,3,4

ரேவதி 1,2,3,4



மேஷம்

அஸ்வினி 1,2,3,4

பரணி 1,2,3,4

கார்த்திகை 1

ரிஷபம்

கார்த்திகை 2,3,4

ரோகினி 1,2,3,4

மிருகசீரிடம் 1,2

மிதுனம்

மிருகசீரிடம் 3,4

திருவாதிரை 1,2,3,4

புனர்பூசம் 1,2,3


கும்பம்

அவிட்டம் 3,4

சதயம் 1,2,3,4

பூரட்டாதி 1,2,3











இராசி சக்கரம்

கடகம்

புனர்பூசம் 4

பூசம் 1,2,3,4

ஆயில்யம் 1,2,3,4


மகரம்

உத்திராடம் 2,3,4

திருவோணம் 1,2,3,4

அவிட்டம் 1,2



சிம்மம்

மகம் 1,2,3,4

பூரம் 1,2,3,4

உத்திரம் 1




தனுசு

மூலம் 1,2,3,4

பூராடம் 1,2,3,4

உத்திராடம் 1



விருச்சிகம்

விசாகம் 4

அனுஷம் 1,2,3,4

கேட்டை 1,2,3,4



துலாம்

சித்திரை 3,4

சுவாதி 1,2,3,4

விசாகம் 1,2,3



கன்னி

உத்திரம் 2,3,4

அஸ்தம் 1,2,3,4

சித்திரை 1,2






பஞ்சாங்கத்தில் கிரக பாத சாரங்கள் என்ற தலைப்பில் பின் வருமாறு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை இராசி சக்கரத்தில் எவ்வாறு அடைப்பது என்று பார்ப்போம்.




கிரகம்

நட்சத்திர பாத சாரம்


சூரியன்

சித்திரை - 3


சந்திரன்

திருவோணம் -2


செவ்வாய்

புனர்பூசம் - 4


புதன்

ஆயில்யம் - 1


குரு

கார்த்திகை - 3


சுக்கிரன்

அஸ்தம் - 2


சனி

அனுஷம் - 3


இராகு

சதயம் - 3


கேது

பூரம் - 3


மேலே கொடுக்கப்பட்டுள்ள இராசி சக்கரத்தில் உள்ள நட்சத்திர பங்கீட்டை கவனித்து அதன் படி கிரகங்களை இராசி சக்கரத்தில் எழுதலாம். உதாரணத்திற்கு, சூரியன் சித்திரை - 3 என பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தால், சூரியனை துலா ராசியில் எழுத வேண்டும். இவ்வாறே மற்ற கிரகங்களையும் எழுதினால், சக்கரத்தில் அடைக்க பழகினால், நீங்கள் ஜோதிட தொடக்கப் பள்ளியில் 1 ஆம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்று காலரை உயர்த்தி சொல்லிக் கொள்ளலாம்.














குரு







இராகு





இராசி சக்கரம்



செவ்வாய்

புதன்




சந்திரன்



கேது







சனி



சூரியன்



சுக்கிரன்




அய்யா ! அதெல்லாம் சரி தான். பஞ்சாங்கம் என்று ஒரு சமாச்சாரம் சொல்லுகிறீர்களே அதனை கொஞ்சம் விளக்குங்கள், என்று ஒரு மாணவர் கேட்பதை யாம் ஞான திருஷ்டியில் அறிவோம் ! பெரும்பாலும் ஜோதிடம் அறியாத பலரும், நாள் நட்சத்திரம் பார்ப்பதற்காக பஞ்சாங்கத்தைப் பற்றி தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இருப்பினும், பஞ்சாங்கத்தின் பயன்பாட்டைப் பற்றி தெரியாதவர்களுக்காக அடுத்த பதிவினை எழுதலாம் என்று நினைக்கிறேன், அது வரை பொறுமை காக்கவும்.