கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 13 கி.மீ தூரத்தில் துடியலூர் உள்ளது .அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இடிகரை வில்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.கரிகால் சோழ மன்னன் தனது நாடு சிறக்கவும் புத்திர தோஷம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் யோசனைப்படி 36 சிவாலயங்கள் கட்டினான்.29வது கோயிலாக வில்வ மரங்கள் நிறைந்த இந்த இடத்தில அமைத்த கோயில் இது.சிவனுக்கு வில்லீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது .பிற்காலத்தில் அம்பாளுக்கு சன்னதி அமைந்து வேதவல்லி என்று வழிபாடு செய்யபடுகிறது .
சிறப்பம்சம் : சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர்கோடுகள் உள்ளன .
ஆவணி 14,15,16 தேதிகளில் சூரியன் தனது கதிர்களை இந்த லிங்கத்தின் மீது
பரப்பி பூஜை செய்கிறார் . இந்த கோயிலில் உள்ள நவகிரகங்கள் தரையில் இருந்து
ஒரு அடி உயரத்தில் உள்ளது சிறப்பு . மேலும் இங்கு பக்தர்கள் தங்கள் குறைகளை
எழுதி அர்ச்சகரிடம் சமர்பிக்கின்றனர். அவர் அதை லிங்கத்தின் முன்னால்
வைக்கிறார் . அந்த குறைகள் முப்பது நாட்களில் தீர்வதாக பக்தர்கள்
நம்புகின்றனர் .