மகா தீபம்
2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மீது ஏற்றும் தீபம், மகா தீபமாகும். சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மகா தீபம் ஏற்ற 3000 கிலோ பசு நெய், 7 அடி உயரம் கொண்ட செப்புக் கொப்பரை, திரியாக பயன்படுத்த சுமார் 1000 மீட்டர் காடாத்துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும். திருவண்ணாமலை மட்டுமல்ல மலை மீது கோயில் கொண்டுள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும்கூட மகாதீப விழா நடைபெறும். இந்த மகாதீப ஒளிக்காட்சியைக் காணும் மக்கள் வாழ்வில் நலமும் வளமும் தழைப்பது உறுதி. திருவண்ணாமலை கார்த்திகை தீப நாள் அன்று அதிகாலை 4 மணி அளவில் மலை அடிவாரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.
திருவண்ணாமலை தீபம் ஏற்றும் முறை
திருவண்ணாமலையில் பத்துநாட்கள் கார்த்திகை தீபவிழா நடக்கும். பத்தாம் நாள் மலைமீது தீபம் ஏற்றப்படுகிறது. முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் வைக்கப்படும் கற்பூரம் ஏற்றப்படும். அதிலிருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கைக் கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். சுவாமி சந்நதியில் ஏற்றப்படும் இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். இதே நேரத்தில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்தை சர்வாலய தீபம் என்பர்.
தீபத்தை தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா: பதங்கா: மச காச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா:
த்ருஷ்ட் வா ப்ரதீபம் நச ஜன்ம பாகின:
பவந்தி நித்யம் ச்வ பசா ஹி விப்ரா:
அண்ணாமலை தீப தரிசன பலன்
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும்.
அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.