Pages

செவ்வாய்

செவ்வாய் – பொது

பொதுவாக செவ்வாய் கிரகம், ஜோதிட ரீதியாக பூமியில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது. அதாவது பூமியில் ஏற்படும், நன்மை தீமைகளையும், இயற்கை சீற்றங்களையும், அழிவுகளையும் தற்கால கிரக அமைப்புகளை வைத்து (கோட்சாரம்) செவ்வாய் கிரகம் ஏற்படுத்துகிறது என்று கூறலாம். பி.வி. இராமன் போன்ற ஜோதிட மேதைகளும் இதனை ஆராய்ந்து எழுதியுள்ளனர். வட மொழியில் அங்காரகன் என்ற பெயரும் உண்டு. செவ்வாய் கிரகத்தை வைத்தே ஜாதகரின் திருமண வாழ்க்கையை கணிப்பதால் தான், இந்த கிரகத்தை வட இந்தியாவில் மங்கள் என்று குறிப்பிடுவார்கள். செவ்வாய் உடலில் உள்ள இரத்த அணுக்களை ஆள்வதால், தாம்பத்ய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. செவ்வாயைக் கொண்டு ஒரு ஜாதகரின் வீரியத்தை அறியலாம். விந்தணுக்களின் வேகம் (Motility) ஜாதகத்தில் செவ்வாயின் நிலையப் பொறுத்தே அமைகிறது. கருத்தரிப்பதற்கு விந்தணுக்களின் எண்ணிக்கை (Quantity), வேகம் (Motility) இரண்டுமே முக்கிய காரணிகளாகும். விந்தணு உற்பத்தியை குரு பகவானும், வேகத்தை செவ்வாய் பகவானும் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதே எமது ஆய்வு.


இதனாலேயே செவ்வாய் தோஷம் என்பது திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது முக்கியத்துவம் பெறுகிறது. செவ்வாய் தோஷம் பற்றிய ஆய்வுகளை தனியாக பிறகு பதிவிடுகிறேன். தனி மனித ஒழுக்கம், நடத்தை ஆகியவற்றில் செவ்வாய்க்கு மிகுந்த பங்குண்டு. சாகசம், அல்லது ஏதோ ஒரு வகையில், துறையில் சாதனை செய்தவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தோமானால் அதில் செவ்வாய் மற்றும் சனிபகவானின் தொடர்பு, கண்டிப்பாக இருக்கும்.



செவ்வாய் – அறிவியல்

செவ்வாய் சூரியனிலிருந்து 4 வது கிரகமாக, சூரியனை சுமார் 687 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. (பூமி 365.25 நாட்கள் எடுத்துக் கொள்கிறது). அளவில், அது ஏறக்குறைய பூமியின் அளவேயாகும். புவியீர்ப்பு விசை பூமியை விட 3 மடங்கு குறைவே. 95 சதவீதம் கார்பன்டை ஆக்ஸைடு உறைந்த நிலையில் அதன் மேற்பரப்பில் காணப்படுகிறது. இயற்பியலில் இதன் பெயர் உலர் பனிக்கட்டி (Dry ice). பக்தி, மாயாஜால படத்தில் இந்திர லோகத்தை காட்டும் போது புகை மண்டலம் மிதக்குமே, கனவு டூயட் காட்சிகளிலும் மேகம் போல மிதந்து வருமே, அதனை Dry ice பயன்படுத்தியே உண்டாக்குவார்கள். விண்வெளி விஞ்ஞானிகளால் அனுப்பபட்ட ஒரு விண்கலம் பிடித்த படத்தைக் காணும்போது, நமக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் அதன் மேற்பரப்பு சிவந்து காணப்படுகிறது. அதனால் தான் தமிழர்கள் அதற்கு செவ்வாய் என்று பெயர் வைத்திருப்பார்களோ !! ஆஹா என்னே நம்மவர்களின் அறிவுத்திறன். பெயர்க்காரணம் குறித்து தனித்தமிழ் ஆர்வலர்களின் ஆய்வுக்கு விட்டு விடுவோம். மேலும் செவ்வாயின் ஜோதிட பயோடேட்டாவைப் பார்த்தால், அதன் நிறம், மலர், ஆடை, உலோகம், இரத்தினம் இவை எல்லாம் சிவந்த நிறத்துடன் தொடர்புள்ளதாகவே காணப்படுகிறது.




செவ்வாய் – காரகத்துவம்

பூமிகாரகன், சகோதரகாரகன், மங்கள காரகன், வீரம், போர்க்குணம், இராணுவம், காவல் துறை, இரத்தம், கோபம், வாகன மற்றும் தீ விபத்து, இரத்த காயம், கலகம், பூமியினால் உண்டாகும் யோகம், தொழில், விளையாட்டுத் துறை போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகனாவார்.



செவ்வாய் தசா



மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக செவ்வாய் தசை வரும். செவ்வாய் தசை மொத்தம் 7 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 7 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 7 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் ”கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள். செவ்வாய் தசையில் செவ்வாய் – காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், செவ்வாய் தரும் பலன்களும் நடைபெறும்.

இனி ஜோதிட ரீதியாக செவ்வாயின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

செவ்வாய் – பயோடேட்டா


ஆட்சி பெறும் ராசி

மேஷம், விருச்சிகம்


உச்சம் பெறும் ராசி

மகரம்


நீச்சம் பெறும் ராசி

கடகம்


நட்பு பெறும் ராசிகள்

சிம்மம், தனுசு, மீனம்


சமம் (நியூட்ரல்)

ரிஷபம், துலாம், கும்பம்


பகை பெறும் ராசிகள்

மிதுனம், கன்னி


மூலத்திரிகோணம்

மேஷம்


சொந்த நட்சத்திரம்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்


திசை

தெற்கு


அதிதேவதை

சுப்பிரமணியர்


ஜாதி

ஷத்திரியர்


நிறம்

சிவப்பு


வாகனம்

அன்னம்


தானியம்

துவரை


மலர்

செண்பகம், செவ்வரளி


ஆடை

சிவப்பு


இரத்தினம்

பவழம்


செடி / விருட்சம்

கருங்காலி


உலோகம்

செம்பு


இனம்

ஆண்


அங்கம்

கை, தோள்


நட்பு கிரகங்கள்

சூரியன், சந்திரன், குரு


பகை கிரகங்கள்

புதன், இராகு, கேது


சுவை

துவர்ப்பு, காரம்


பஞ்ச பூதம்

பூமி


நாடி

பித்த நாடி


மணம்

குங்கிலியம்


மொழி

தமிழ், தெலுங்கு, மராட்டி


வடிவம்

குள்ளமானவர்


செவ்வாய்க்குரிய கோயில்

வைத்தீஸ்வரன் கோயில்







செவ்வாய் போற்றி

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே !

குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ

மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்கு !



கந்த சஷ்டி கவசம்

சஷ்டி கவசத்தை தினமும் ஒரு முறையாவது மனதில் தியானித்து வருவோமானால், செவ்வாயால் ஏற்படும் தோஷத்தையும், விபத்துகளையும், ஆபத்துகளையும் தவிர்க்கலாம். தன்னையே கொல்லும் சினம் குறையும். இது உறுதி.


கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்