skip to main |
skip to sidebar

தியானம்
சாமி புத்தகம் – தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம்
24.08.2011 (பக்கம் 79-89)
“ஓ….ம் ஈஸ்வரா குருதேவா”
“அம்மா அப்பா அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால்,
அகஸ்தியர் துருவனாகி, துருவமகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அந்த பேரருளை
பெற வேண்டும்”
என்று உங்கள் உயிரான ஈசனிடம், அந்த ஆறாவது அறிவை வைத்து, உங்கள் எண்ணத்தை செலுத்துங்கள். இப்பொழுது
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா”
என்று கண்ணிலே ஏங்கும் பொழுது, அந்த கண்ணிலே ஈர்க்கும் சக்தி வரும். கொஞ்சம் கனமாக இருக்கும். மெதுவாக கண்களை மூடுங்கள்.
“”குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்”
என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி தியானியுங்கள். இப்பொழுது உயிர்
வழி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் ஏங்கி பெறும் பொழுது,
உயிரின் பாகம் அது வலிமை பெறுகின்றது. இப்பொழுது அதை எடுத்து உயிரின் பாகம்
வரும் பொழுது ‘ஓ…ம்’ பிரணவம், ஆக, துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக, நம்
உடலிலே மாறுகின்றது.
நமது உடலில் உள்ள தீமையான அணுக்களுக்கு, ஆகாரம்
மூக்கின் வழி சென்றுதான் சேருகின்றது. இப்பொழுது அங்கு போகாதபடி
தடைப்படுத்துகின்றோம். இப்பொழுது உயிரிலே, அந்த துருவ நட்சத்திரத்தின்
சக்தி மோதும்போது, அந்த உணர்வின் அறிவு, உங்களுக்குள் இயக்கமாக
ஆகப்படும்போது, அந்த ஈர்க்கும் சக்தி கிடைக்கின்றது. ஒரு நிமிடம் ஏங்கி
தியானிப்போம்.
“குருவின் அருளால் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து.
எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா”
நாம் எதை எண்ணினாலும், அந்த உணர்வுகள், நமக்குள் இரத்தமாக மாறி, ஜீவ
அணுவாக மாறுகின்றது. அப்போது அந்த ஜீவ அணுவிற்கு, நாம் கண்ணின் நினைவு
கொண்டு, அது செயல்படுத்தும் பொழுது, அந்த தீமை என்ற நிலை உருவாகாதபடி
தடுக்கின்றது. தீங்கு செய்ததும் அணுவாக வருகின்றது. அதை எண்ணும்போது,
நமக்கு தீமை விளைவிக்கின்றது. நல்லது செய்ததும் அணுவாக வருகின்றது. அது
நமக்கு நல்லது செய்கின்றது. ஒருவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால்,
வேதனைப்படும் உணர்வை உருவாக்குகின்றது. அவ்வுணர்வால் வேதனைப்பட்ட ஒருவன்
ஜீவான்மா, நமக்குள் வந்தால் ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆனால் அதனால் வேதனையை
மாற்ற முடியாது.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவ ஆன்மாக்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள். இப்பொழுது உங்கள்
இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும். இந்த வலிமை பெறும்போது,
உங்கள் உடலுக்குள் தீமையை இழுக்கும், உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும்
வெறுப்பு, வேதனை, சலிப்பு, கோபம், இது மாதிரி எத்தனையோ வகையான தீமையான
உணர்வுகளை, உங்கள் உடலின் ஈர்ப்பை விட்டு தள்ளிவிடுகின்றது. உங்கள் ஆன்மா
சுத்தமாகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் வலிமை
பெறுகின்றது. இவ்வாறு சுத்தப்படுத்திவிட்டு,
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
சிறுகுடலிலும் பெருங்குடலிலும் கலந்து, சிறுகுடலையும் பெருங்குடலையும்
உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும், குருவின் அருளால் அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்ற உணர்வினை செலுத்துங்கள். இப்பொழுது சிறுகுடல், பெருங்குடலை உருவாக்கிய
அணுக்கள் உற்சாகம் அடையும் பொழுது, உங்கள் குடல்களில் இதற்கு முன்னால்
வேதனை, வெறுப்பு, என்ற உணர்வுகள் பட்டிருந்தாலும், அந்த சிறுகுடலில் உள்ள
அணுக்கள் வீரியமடையப்படும் பொழுது, குடல் புண்ணோ, குடல் வாதங்களோ, இதைப்
போன்ற நிலைகள் இருந்தால் அவைகள் நீங்கி நல்ல குடலாக சிறுகுடலை உருவாக்க
முடியும். அதனால்,
“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்”
என்று நினைவைச் செலுத்துங்கள். சிறுகுடல் பெருங்குடல்களில் வாத நீர்கள்
இருந்தால், சரியாக ஜீரணிக்க முடியாது. புளித்த ஏப்பங்கள் வரும், குடல்
வாதங்கள் வரும், குடல் புண் வரும். இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க,
“எங்கள் சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்,
குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
படர்ந்திடவேண்டும்”
என்று கண்ணின் நினைவை, சிறுகுடலிலும்
பெருங்குடலிலும் செலுத்தி, ஒரு நிமிடம் ஏங்கி தியானியுங்கள். இப்பொழுது அது
உற்சாகம் அடைவதை உங்களால் உணர முடியும்.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
கணையங்களில் கலந்து, கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும், குருவின்
அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட
அருள்வாய் ஈஸ்வரா”
இந்த கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள்
கண்ணின் நினைவை செலுத்தப்படும்பொழுது, அந்த கணையங்களை உருவாக்கிய அணுக்கள்
உற்சாகம் அடைவதை உணர முடியும்.
“குருவின் அருளால்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரலில்
கலந்து, கல்லீரலையும் மண்ணீரலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்,
குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள். நாம்
சந்தர்ப்பத்தால் நுகரும் வெறுப்பு, வேதனை போன்ற உணர்வுகள் நம் ஆகாரத்துடன்
கலந்து, நம் இரத்தத்துடன் கலந்து, இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை
விஷத்தின் தன்மையானால், கல்லீரல் மண்ணீரல் விஷத்தன்மையானால், இரத்தத்தை
சுத்திகரிக்கும் தன்மை இழந்து, விஷத்தன்மையான அணுக்கள் அதை மறைக்கும்
பொழுது, கல்லீரல், மண்ணீரல் வீக்கமாகும். அங்கே வலியும் ஏற்படும்.
வேதனைபட்டோரைக் கண்டால், கல்லீரல் மண்ணீரல்களில் வீக்கம் வருவதைப்
பார்க்கலாம். இது போன்ற நிலைகள் வராமல் தடுப்பதற்கு, வெறுப்பு, வேதனை
உணர்வு கொண்டவர்களைப் பார்க்கும் பொழுது,
“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலையும் மண்ணீரலையும் உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்”
என்று ஏங்கி தியானியுங்கள். ஏனென்றால் “இன்ஜெக்சன்” செய்வது மாதிரி, அந்த
அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டும்போது, அந்த விஷத்தை மாற்றியமைத்து,
இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை வருகின்றது.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
நுரையீரலில் கலந்து, நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும், குருவின்
அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட
அருள்வாய் ஈஸ்வரா”
என்று கண்ணின் நினைவை, நுரையீரலில் செலுத்தி அதை
வீரியமடையச் செய்யுங்கள். நேரடியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று,
அங்கே நுரையீரலில் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.
இராமாயணத்தில் சொன்ன மாதிரி, ராமனின் பக்தன் ஆஞ்சநேயன், சுக்கிரீவனின்
மந்திரி. அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வு நம் சொல்லாக அது தாவி சென்று,
உங்கள் உடலுக்குள் அந்த தீமைகளை நீக்கும். அந்த உணர்ச்சிகளை ஊட்டி, எங்கே
நோய் இருக்கின்றதோ, அங்கே சுக்கிரீவனின் உணர்வுகள், தீமைகளை நீக்கும்.
விஷத்தன்மை கண்டால், வேதனையான உணர்ச்சிகள், இந்த நுரையீரல் வழி தான்
சுவாசிக்க நேரும், அப்போது பிறர் உடலில் அதிகமாக நுகர்ந்த விஷத்தின் தன்மை,
நம் உடலில் வரப்படும்பொழுது, நுரையீரல் பலவீனமாகி ஆஸ்த்மா போன்ற நோயும்,
சளிக்கட்டிகள் போன்ற தீய விளைவுகளும் ஏற்படும். இதைப் போன்ற நிலைகளைத்
தடைப்படுத்த
“எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்,
குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள்.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
கிட்னியிலும், சிறுநீரகத்திலும் கலந்து, கிட்னியையும், சிறுநீரகத்தையும்
உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும், குருவின் அருளால் அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று உங்கள் கண்ணின் நினைவை கிட்னியிலும், சிறுநீரகத்திலும்
செலுத்துங்கள். இவ்வாறு அந்த அணுக்களை வலுப் பெறச் செய்தால், உப்புச்சத்து,
சர்க்கரைச் சத்து, வாத நீர் போன்ற நிலைகளை அது சுத்திகரிக்கும். நல்ல
இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது. இவ்வாறு நல்ல இரத்தமாக மாறி,
இதயத்திற்குச் செல்லப்படும் பொழுது, இந்த இதயத்திலிருந்து வீரிய உணர்வுகளை
மேற்கொண்டு, நல்ல அணுக்கள் அனைத்திற்கும், இந்த உடலை இயக்குவதற்கும்,
மனவலிமை பெறுவதற்கும், நமது சிறுமூளை பாகங்களை அது வீரியத்துடன்
இயக்குவதற்கும் இந்த உணர்ச்சிகள் பயன்படுகின்றது.
"குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இதயத்தில் கலந்து, இதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும், குருவின்
அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட
அருள்வாய் ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள். இதயம் பலவீனமடைந்தால்
நுரையீரலும் கல்லீரலும் பலவீனமடையும். இதயத்தை வலுப் பெறச் செய்தால், எல்லா
உறுப்புகளையும் சீராக்கும் அந்த உணர்ச்சிகளின் பக்குவம் பெறுகின்றது.
இப்போது உங்கள் இதயத்தில் உள்ள அணுக்கள் வீரியமடைவதை உணரலாம். நெஞ்சுவலி,
அல்லது பலவீனமான நிலை, கலக்கமோ இருந்தால் அது அகலும்.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கரு மணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று உங்கள் நினைவினை கருமணிகளில் செலுத்தி ஏங்கி தியானியுங்கள். நீங்கள்
வேதனைப் பட்டதோ, வெறுப்படைந்ததோ, கோபப்பட்டதோ, இந்த கருமணியில்
ஈர்க்கப்பட்டு தான், அதன் வழி நரம்பு மண்டலத்தின் மூலமாக உடல் முழுவதும்
பரப்புகின்றது. இந்த மாதிரி வேதனை, வெறுப்பு போன்ற உணர்வுகளைப் பார்த்தால்.
அடுத்து, நல்ல பொருளை பார்த்து, சிந்தித்து செயல்படுதல் என்றால் முடியாது.
ஒரு பொருளின் தரத்தை நாம் பார்க்க முடியாது. ஒரு மணத்தின் தரத்தை நாம்
நுகர முடியாது. எனவே நாம் இத்தகைய தீமையான உணர்வுகளை பார்த்தபின், அடுத்த
நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்
என்று எண்ணினோம் என்றால், இந்த கருவிழிகள் சுத்தமடைகின்றது.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
நரம்பு மண்டலத்தில் கலந்து, நரம்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள்
அனைத்திலும், குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
இந்த கருமணி வழி கொண்டுதான்,
வேதனை, வெறுப்பு, கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் சேர்க்கப்படுகின்றது.
நரம்பு மண்டலங்களின் அணுக்களில் இது மாறினால், வாத நோய், சரவாங்கி நோய்,
மூட்டுவாதம், இதைப் போன்ற நோய்கள் அதிகரித்து விடுகின்றன. துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய
அணுக்களில் படர வேண்டும் என்று ஏங்கி தியானிக்கும் பொழுது, அத்தகைய நோய்கள்
வராமல் தடுக்கலாம்.
“குருவின் அருளால் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலங்களில் கலந்து,
எலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும், குருவின் அருளால்
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய்
ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள். இந்த நரம்பு மண்டலம் வழி தான்,
வாயு மண்டலம் செல்கின்றது. நாம் எண்ணிய உணர்வுக்கொப்ப விரல்களை அசைப்பதும்,
எலும்புகளை இயக்குவதும் இதுவேதான். எலும்பு மண்டலத்தின் இயக்கத்தால்
ஆவியாக மாறிவிடுகின்றது. அவ்வாறு ஆவியாக மாறி, எலும்பு மண்டலத்தில் உணவாக
உட்கொள்ளும் பொழுது, வேதனை என்ற உணர்வாகிவிட்டால்.“T.B.” போன்ற நோய்களும்,
“கேன்சர்” போன்ற நோய்களும் எலும்பு மண்டலங்களில் வந்துவிடுகின்றது. அதைப்
போன்ற நிலைகளை நீக்க, இதை முறைப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
நெஞ்சின் பாகம் (விலா எலும்புகள்) உள்ள எலும்புகளில் கலந்து, குருத்து
எலும்பு முழுவதும் படர்ந்து, அந்த எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்
முழுவதும் படர்ந்து, ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்திலும்,
குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று உங்கள் கண்ணின் நினைவினை, விலா
எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் பெற வேண்டும் என்று
ஏங்கி தியானியுங்கள். இவ்வாறு செய்வதனால், துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகள், வேதனையை நீக்கும் உணர்வாக, ஊழ்வினை என்ற நல்ல வித்துக்களை
உருவாக்கும் சக்தியாக உருபெறுகின்றது. ஆகவே நமக்குள் வேதனை, வெறுப்பு,
கோபம், ஆத்திரம் என்ற உணர்வுகளை வளராது கட்டுபடுத்த, இது உதவும். அதனால்
ஒவ்வொரு நிமிடத்திலும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் விலா
எலும்புக்குள், ஊனை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி
தியானியுங்கள்.
இப்பொழுது விலா எலும்புக்குள் ஒரு உற்சாக உணர்வு
இருக்கும். உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் ஒரு மெலிதான வெளிச்சம் வருகின்றது.
உங்கள் நெஞ்சு எலும்புக் கூட்டில், வீரிய உணர்வின் சக்திகள் வளர்ச்சி
பெறும் சந்தர்ப்பத்தை, நாம் உருவாக்க வேண்டும்.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை
மண்டலங்களில் கலந்து, தசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும்,
குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள்.
“குருவின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
தோல் மண்டலங்களில் கலந்து, தோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள்
அனைத்திலும், குருவின் அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா”
என்று ஏங்கி தியானியுங்கள்.
இவ்வாறு தோல் மண்டலத்தில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சேர்க்கும்
பொழுது, காற்றில் உள்ள தீமையான உணர்வுகள், நம் அருகில் வராது விலகிச்
செல்லும்.
இதைப் போன்ற தியானம், நாம் காலையில் 4.30
மணியிலிருந்து 6.00 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது இருக்க வேண்டும்.
முடிந்தால் கொஞ்ச நேரம் கூட இருக்கலாம். இதுதான் “ஏகாதசி விரதம்” பத்தாவது
நிலையை அடையக்கூடிய சக்தி பெற வேண்டும். தீமைகளை நாம் கவருவது இல்லை.
இதைப் போன்று காலையில் வீரிய சக்தியை எடுத்தபின்,
நான் பொருளறிந்து செயல்படும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற அருள்வாய் ஈஸ்வரா
என் சொல்லைக் கேட்போர் வாழ்வில், அந்த கனியைப் போன்ற சுவையான வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என் குடும்பத்தில் அனைவரும், அந்த கனியைப் போன்ற சுவையான வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
நான் பார்க்கும் குடும்பமெல்லாம் இந்த நிலை பெற வேண்டும்
நான் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் இவ்வாறு ஆன்மாவை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
“அந்த தங்கத்தைப் போன்று என் மனம் மங்காத நிலை பெற வேண்டும்” ஒருவர்
கோபித்து விட்டால், அந்த கோபமான உணர்வு, நம் மனதை மாற்றிவிடக் கூடாது.
தங்கம் எவ்வாறு நிறம் மாறாதிருக்கின்றதோ, அதைப் போன்று
தங்கத்தை போன்று, என் மனம் மங்காத நிலை பெற வேண்டும்.
என் குடும்பத்தில் அனைவரும், தங்கத்தை போன்று, மனம் மங்காத நிலை பெற வேண்டும்
வைரத்தைப் போல் என் சொல் ஜொலிக்க வேண்டும், என் வாழ்க்கை ஜொலிக்க
வேண்டும். என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கை வைரத்தைப் போன்று ஜொலிக்க
வேண்டும்
என்று நாம் நினைக்க வேண்டும்.
என் கணவர்/மனைவி அருள்ஞானம் பெற வேண்டும்.
என் கணவரைப்/ மனைவியைப் பார்ப்பவருக்கு, அந்த அருள்ஞானம் பெற வேண்டும்.
அவர்கள் தொழில் செய்யும் இடங்களில், அந்த நிலை பெற வேண்டும்,
என்று எண்ணத்தால் படைத்தல் வேண்டும்.
இதே போன்று தொழிலுக்கு போனால், அலுவலகத்தில் குறைபாடு இருந்தாலும்
நீங்கும். அவர்கள் எடுத்துக் கொண்ட தொழிலும் நன்றாக இருக்கும், நல்ல
பெயரும் வரும். அலுவலகத்தில் குறைபாடு வந்துவிட்டால், அந்த உணர்வுகள்
வீட்டில் பதிந்து, இருவரும் ஒருவரை ஒருவர் குறைபாடாக வளர்த்து,
அலுவலகத்திலும் கெட்ட பெயராகும். இந்த முறைப்படி நீங்கள் தியானம் செய்யும்
பொழுது, உங்களுக்குள் தீமையை நீக்கும் அணுக்கள் வளர்ச்சியடைந்து, வேதனையை
நீக்குகின்றது.
ஆகவே, இந்த வாழ்க்கையில் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால், நீங்கள் எல்லா விதத்திலும் உயர்வு பெற
முடியும். உங்கள் வாழ்க்கையில் வரும் நோய்களை போக்க முடியும். அதே சமயம்,
இந்த வாழ்க்கைக்குப்பின், இந்த உடலைவிட்டு நாம் சென்றால், எங்கு போவது
என்று தெரியும். அப்பொழுது நாம் நம் குழந்தையின் மீது பாசத்தால் இவ்வாறு
ஆகிவிட்டானே என்ற உணர்வை எடுக்காதபடி, துருவ நட்சத்திரத்தின் உணர்வை
சேர்த்து கணவனும் மனைவியும், அதை மாற்றி நல்ல நிலை பெறலாம். இந்த
உடலுக்குபின் பிறவி இல்லா நிலை பெறலாம். அழியா ஒளி சரீரம் பெற முடியும்.

சாமி புத்தகம் – தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம் 25.08.2011
(பக்கம் 14-16)
சூரியன் தனது இயக்கத்தால், விஷத்தின் தன்மையை, தனது பாதரசத்தால் தாக்கி,
வெப்பம், காந்தம் என்ற நிலைகளை உருவாக்கி, கடைசி நிலைகளில் உள்ள விஷத்தை
தனக்குள் கவர்ந்து, அந்த விஷம் ஒரு இயக்க அணுவாக மாறி, அது எதிலே போய்
இணைகின்றதோ, அந்த உணர்வை அது இயக்கும். 27 நட்சத்திரங்களும் பால்வெளி
மண்டலங்களை அமைத்து, அதிலே வருவதைத் தன் உணவாக உட்கொண்டாலும், அவை சூரியன்
அருகிலே வரப்படும்போது, தனது பாதரசத்தால் மோதுவதனால் இத்தகைய நிலை
ஏற்படுகின்றது.
ஆனாலும் சூரியன் கவரும்போது, பூமி
இடைமறித்தால், பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வருவது மோதி, மின்னலாகி,
கடலிலே பட்டால், யுரேனியமாக மாறுகின்றது. மரத்தில் பட்டால் கருகுகின்றது.
பூமியின் பரப்பில் பட்டால், ஊடுருவி நடு மையம் அடைகின்றது. இவ்வாறு 27
நட்சத்திரங்களும் கலந்து, கொதிகலனாகி, இயக்க சக்தி வருகின்றது. இந்த
கலவைகள், பலவிதமான வித்தியாசமான நிலைகள் வரப்படும்போது, உணர்வுக்கொப்ப
பாறைகளும், மண்களும் மற்றும் பலவிதமான நிலைகள் மாற்றமாகிக் கொண்டேயுள்ளது.
இதையெல்லாம் பார்ப்பதற்கு, இரண்டு வருடம், மின்னல் அதிகம் உள்ள இடங்களுக்கு
குருநாதர் கூட்டிச் சென்று, சாப்பாடு இல்லாமல் பார்க்கச் சொன்னார். ஒரு
நிமிடம் மாறிவிட்டால், பார்க்க முடியாது.
இப்படி, கடலில்
மின்னல் அலைகளில் தாக்கப்படும்போது, மணலாக உருவாவதை, விஞ்ஞானிகள்
யுரேனியமாக மாற்றி, கதிரியக்க பொறிகளாக மாற்றி, அணுகுண்டுகளாக வெடிக்கச்
செய்து, இது வெடித்த பின், அதே இயக்க அணு தனக்குள் எடுத்து, பூமியில்
பரவியிருந்தாலும், அதிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் பிரபஞ்சத்தில்
படர்ந்து, அருகில் இருக்கும் புதனுக்கு சென்று, உலோகங்களாக மாறி, புதனில்
வெளிப்பட்டு, சூரியனில் பாதரசமாக மாறுவதை, விழித்திருந்தே பார்க்கச்
செய்தார்.
பிரபஞ்சத்தில் நம் பூமி ஒன்றில்தான், தாவர
இனங்களின் வளர்ச்சி உள்ளது. தாவர இனங்களின் மணத்தை உயிரணு நுகர்ந்து, இயக்க
சக்தியாக மாறுகின்றது. தாவர இனத்தின் சத்து உயிரிலே மோதி, ஒரு இயக்க
சக்தியாக மாறுகின்றது. இதுதான் பிரணவம். மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை
இருப்பதினால், அது உயிரில் மோதும்போது பிரணவம். அங்கு விஷத்தின் ஆற்றலே
வரும், வளர்ச்சியும் குன்றி இருக்கும். நம் பூமியில் மட்டும்தான், இதன்
உணர்வுகள் வளர்ச்சியாகி, மனிதனாக வளரச் செய்கின்றது. இதைத் தெளிவாக
தெரிந்துகொள்தல் வேண்டும்.
ஆக அணுகுண்டுகளை வெடித்து இங்கு
பரப்பச் செய்யும்போது, இதன் துணை கொண்ட கோள்களிலும் இது சேர்கின்றது. நமது
பூமியில் கதிரியக்கம் எங்கெல்லாம் அதிகமாகின்றதோ, அங்கெல்லாம் உணர்வுகள்
கரைகின்றது. கரைந்த உணர்வுகள், பூமி சுற்றப்படும்போது, அது பூமிக்குள்
போகும் பக்கமெல்லாம், மோதல் ஏற்படுகின்றது. எப்படி கடல் அமைதியாக
இருப்பினும், அதில் உள்ள பாறைகள் மோதும்போது, சப்தங்கள் வருகின்றதோ,
அதைப்போல கூழாக பூமிக்கு அடியில் மோதும்போது, பாறைகளில் உள்ள இடைச் சந்தில்
மோதி, வேகமாக ஓடும்போது, அதிர்வு வருகின்றது. ஆகவே, இது மோதலில் வெப்பம்
அதிகமாகும் பொழுது பூமி பிளக்கின்றது.
இதே மனிதன் லேசர்
கதிரியக்கங்களை உருவாக்கினான். எப்படி மின்னல் ஊடுருவி ஓடுகின்றதோ, அந்த
லேசர் இயக்கத்தை தனக்குள் எடுத்து, மின்னலைப் போல லேசரை உருவாக்கிவிட்டான்
மனிதன். இப்படி ஏற்படுத்தப்பட்ட உணர்வுகள் அனைத்தும் சூரியனையே
சாடுகின்றது, சூரியனே அழியும் நிலைகள் உருவாகிவிட்டது. அதற்குப் பின்
உணர்வுகள் சிறுத்துவிடும். அதற்கு முன், இதை எப்படி மாற்ற வேண்டும்
என்பதுதான், நமது குருநாதர் காட்டிய இந்த அருள்வழிகள்.
(பக்கம் 22-25)
மனிதனான பின், அன்பால், பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அறிகின்றோம்.
வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும்
உடலுக்குள் வலிமையாகின்றது. நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும், இதற்கும்
போர் நடக்கின்றது. இதைத்தான் சாஸ்திரங்களில், பரசுராமனுக்கும்
சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது என்று காட்டினார்கள். சீதாராமனோ, விஷ்ணு
தனுசை எடுத்து, பரசுராமனை வீழ்த்துகின்றான். பரசுராமனோ சிவ தனுசை
எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாக
காட்டி இருக்கின்றார்கள்.
வராகனுக்கு (பன்றி) பின்,
பரசுராமன், மனிதன் என்ற நிலைகள் ஆனபிறகு, எல்லோரும் பேரன்போடு வாழவேண்டும்
என்ற ஆசை வருகின்றது. ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத்
தெரியவில்லை.
நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ,
அதன்வழிதான் செல்லுகின்றோம்.
மனிதனானவன் ஒரு குழம்பு வைக்கவேண்டுமென்றால், மிளகாய், உப்பு, புளி
அனைத்தையும் சமமாக சேர்த்து, சுவைமிக்கதாக சமைக்கின்றோம். இதைப்போல, வேதனை
என்ற உணர்வை நமக்குள் எடுத்து தெரிந்துகொண்டாலும், அதை மாற்றி அமைக்கும்
சக்தி, நமக்குள் வேண்டும். அந்த சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை,
உங்களுக்கு ஏற்படுத்துவதற்கு தான் இவ்வாறு உபதேசிப்பது.
இதன் மூலம், உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
இந்த உயிரின் இயக்கமும்,
மனிதனான நிலையும் உங்களால் அறிய முடிகின்றது.
கோபிப்பது நாமல்ல;
வேதனைப்படுவது நாமல்ல;
வெறுப்படைவதும நாமல்ல;
தற்கொலை செய்ய சொல்வதும் நாமல்ல,
தவறு செய்ய சொல்வதும் நாமல்ல,
நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால், அந்த பொருளின் மணம் தான், நுகர்ந்தவரை
இயக்குகின்றது. இதைப் போல நம்முடைய எண்ணம்தான் நம்மை இயக்குகின்றது. நமது
எண்ணம் கொண்டு, வேதனைப்படுவோரை எண்ணினால், கோபப்படுவோரை எண்ணினால், அது
“வாலி”. நமது நல்ல குணங்களை அது அடக்கி, நமக்குள் வலிமையானதாக மாறி, நம்மை,
அதன் வழிகளில் இயக்குகின்றது.
இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால், நமது ஆறாவது அறிவு கொண்டு
“தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற, அந்த துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும், நான் பெற வேண்டும், என் இரத்த நாளங்களில் கலக்க
வேண்டும், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்”
என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இது வலுவான பின்,
“நான் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், கனியைப் போன்ற இனிமையான
சொல்லும் செயலும் பெறவேண்டும், தெய்வீக குணத்தைப் பெறவேண்டும், தெய்வீக
அன்பை பெறவேண்டும், தெய்வீக அருளை பெறவேண்டும், தங்கத்தைப் போல மனம் மங்காத
நிலை பெறவேண்டும், மலரைப் போல மணம் பெறவெண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி
பெறவேண்டும்
என்று எண்ண வேண்டும்.
கடவுளின்
அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரமாக, நாராயணன், வாசற்படியில், மடிமீது இரண்யனை
வைத்து பிளந்தான் என்று காட்டப்பட்டுள்ளது. சூரியனான நாராயணன், 27
நட்சத்திரங்களும் வெளிப்படுத்தும் பால்வெளி மண்டலங்களிலிருந்து தான்
கவர்வதை, தனது உடலில் உள்ள பாதரசத்தால் மோதி, பிளக்கின்றது. இது அதன்
சந்தர்ப்பம். ஆனால் மனிதனோ, வேதனைப்படும் மனிதனைச் சந்திக்கும்போது,
வேதனையைப் படரவைக்கின்றது. நமது அந்த சந்தர்ப்பம், உடல்களில் உள்ள
உணர்வுகளை, பலவீனமடையச் செய்கின்றது.
பலகோடி உடல்களில்
தீமையை நீக்கிய, "துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும்" சந்தர்ப்பத்தை,
ஏற்படுத்த வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, நமது கண்களின்
நினைவிற்கு கொண்டு வரவேண்டும். பின் புருவ மத்திக்கு, கண்களின் நினைவைக்
கொண்டு வரவேண்டும். நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாக, கண் வழி
கவர்ந்து, இதை இணைக்கின்றோம். இது வலிமையான பின், உணர்வின் பிராணயாமம்.
அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இது தான் முருகு,
மாற்றி அமைக்கும் சக்தி.
ஆகவே தீமைகளை நீக்கிய அருள் உணர்வை,
உயிரிலே இணைத்தபின், தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது, உடலைச் சுற்றியே
நிற்கும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் இரத்த
நாளங்களிலே கலந்து, என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும். ஒரு நிமிடம் வலுவானபின், அந்த சக்தி
உடலுக்குள் வலுவாக்கப்படும்போது, உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள்,
நம்மைவிட்டு அகலும். எப்படி துணியில் அழுக்குபட்டால், சோப்பைப் போட்டு,
நுரையை ஏற்றி, அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ, அதைப் போல துருவ
நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி, அதை வலுவாக்கி, தீமைகளை,
நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு, அகன்று செல்ல செய்கின்றோம்.
அதற்குபின் ஒரு நோயாளியைப் பார்த்திருந்தால், துருவ நட்சத்திரத்தின்
பேரொளியை நீங்கள் பெற்று, உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு
பதிவு செய்தால், அவரும் நலம் பெறுவார். ராமனின் பக்தன் ஆஞ்சனேயன்.
சுவைக்கொப்ப எண்ணங்கள், சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்,
அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன்,
சுக்கிரீவனின் மந்திரி. சுக்கிரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை
எண்ணத்தால் எண்ணி (சீதாராம்), நமக்குள் வலு பெற்று, மற்றவர் பெறவேண்டும்
என்று சொல்லும்போது, அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று,
மற்றவர்களையும் பெறச் செய்யும்.


சாமி புத்தகம் – தெளிந்து வாழ்ந்திட குருவின் அருள்ஞானம் 26.08.2011
(பக்கம் 69)
உயிர், நம்மை மிருக நிலையில் இருந்து மனிதனாக உருவாக்கியது. முன்
சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக, இந்த மனித உடலை உருவாக்கியது..
கணங்களுக்கெல்லாம் ஈசா, “கணேசா” என்று உயிரை வணங்கச் சொன்னார்கள். நாம்
தீமையிலிருந்து நீங்க வேண்டுமென்பதற்காக, கணங்களுக்கு அதிபதியாகி, உடலில்
உள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றது. “அங்குசபாசவா”, யானை பெரியது. ஆனாலும்
அதை அங்குசத்தால் அடக்கிவிடலாம். அதே போன்று, விஷம் அனைத்திலும்
வலிமையானது. அந்த விஷத்தை, துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு, அடக்குதல்
வேண்டும். அதைத் தான் “அங்குசபாசவா” – தீமைகளை அடக்கும் நிலை, என்று
ஞானிகள் உரைத்துள்ளனர்.

(பக்கம் 73,74)
தங்கத்தில் எப்படி திரவகத்தை ஊற்றி சுத்தப்படுத்துகின்றார்களோ, அதைப்
போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நமக்குள் பெறவேண்டும்
என்று நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானமும், சாந்தமும்,
விவேகமும் நாம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இவ்வாறு நாம் செய்தோம்
என்றால், நமது உயிரிலே போய் இணைந்து, நமக்குள் நல்ல சக்தி ஜீரணித்து, நல்ல
சத்து கிடைக்கும்.
தொலைகாட்சிப் பெட்டியில் எந்த அலைவரிசை
வைக்கின்றோமோ, அது தான் வரும். அதே போல், நம்முள் எந்த சக்தி
எடுக்கின்றோமோ, அது தான் வரும். அது சரியாக வரவில்லை என்றால், அது சரியாக
வராது. அது சரியாக வரவில்லை என்றால், அதைச் சரிப்படுத்தி, சரியாக நல்ல
சக்தியை, நாம் எடுக்க வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையில், தெளிந்து,
தெரிந்து, எப்படி வாழவேண்டும் என்பதற்குத்தான், ஞானிகள் கோவிலை
வைத்தார்கள்.
நாள் பூராவும், நாம் எடுக்கும் உணர்வுகள், அந்த
அத்தனை அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெறுவது “ஏகாதசி விரதம்”.
பகைமை நீக்கி, பத்தாவது நிலை அடைந்தது துருவ நட்சத்திரம். நாம் வயலில்
பலவித குப்பைகளை போடுகின்றோம். அந்த வித்து என்ன செய்கின்றது. மற்ற செடி
கொடிகளுடன் சேர்த்து நல்ல வித்தாக விளைகின்றது. இதுபோன்று, இவை
எல்லாவற்றையும் கருக்கியது துருவ நட்சத்திரம். இதற்கு முன்னால் தெரிந்தோ,
தெரியாமலோ சேர்த்தது விஷம்தான், அதை எல்லாம் கருக்கி, நம்மை ஒளியாக
மாற்றுகின்றது.
காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக உள்ளது.
காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, வராக அவதாரமாக, நல்ல
சக்தியை நீங்கள் பெற வேண்டும். அந்த நல்ல சக்தி, நீங்கள் பெற்று வளர்த்துக்
கொள்ளக்கூடியது, எலெக்ட்ரிக்-எலக்ட்ரானிக்-ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடிய
ஒரு “ரோபோட்” தயார் செய்கின்றனர். ஒருவனது மனது எந்த நிலையில்
இருக்கின்றதோ, அவனைப் பார்த்தவுடனே, இவன் தவறு செய்பவன் என்று தன்
எஜமானனுக்கு எச்சரிக்கை செய்கின்றது. அதே போன்று உடல் உறுப்புகளுக்கு,
எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில், உங்கள் உடல் உறுப்புகளுக்கு
சக்தி ஏற்றுகின்றேன். அதை வளர்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் நிலை,
வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நல்லது.
(பக்கம் 76)
அரும்பெரும்
சக்தியை தியானத்தின் மூலமாக பெறுகின்றோம். எனக்கு குருநாதர், என் உடலில்
உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் சக்தி கொடுத்தார். அதே போன்று, உங்கள் உடலில்
உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும், சக்தி கொடுத்தது, நீங்கள் அதை ஓங்கிப் பெற
வேண்டும். நீங்கள் அதை எண்ணுகின்றீர்கள். உங்கள் உடலில் அது சேரட்டும். இதே
போன்று, காலையில் சக்தியைக் கூட்டிக் கொண்டு, எது எது நல்லதோ, அதை
நினைத்தீர்கள் என்றால், நல்ல சிந்தனை வரும், தீமையை நீக்கச் சொல்லும்,
வாழ்க்கை உயரும். இதே போல் கேட்டுக் கொண்டீர்களேயானால், இந்த உடலுக்கு பின்
பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரொளி
சேர்க்கப்படும்போது, “அவன் அப்படிச் செய்தான், இவன் இப்படிச் செய்தான்”
என்பதை பற்றற்றதாக மாற்றுகின்றீர்கள். அதைப் பற்றுடன் பற்றி, இதைப்
பற்றற்றதாக மாற்றி, நீங்கள் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். விஜய தசமி –
பத்தாவது நிலை அடைந்ததை வைத்து, இந்த பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.
(பக்கம் 27,28)
எல்லாமே சந்தர்ப்பத்தில் உருவானதுதான். செடி கொடியானாலும், மிருகமானாலும்,
மனிதனானாலும், எது வலிமையோ அதன் வழி வளர்ந்ததுதான். இதைப் போல
சந்தர்ப்பத்தால் வலிமை பெற்று, ஒளியின் உடல் பெற்ற அந்த துருவ
நட்சத்திரத்தின் உணர்வை, நாம் பெற்றோமென்றால், அந்த சந்தர்ப்பம் தீமைகளை
நீக்கும்.
சந்தர்ப்பம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
எதன் வலிமையோ, அதன் வழி மாற்றிக் கொள்ளும்.
இதைப் போன்று, உங்களுக்குள் பதிவான, “வலிமையான துருவ நட்சத்திரத்தின்
உணர்வை” வளர்க்கும் சந்தர்ப்பமாக, எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ,
சலிப்போ, வேதனையோ, வெறுப்போ வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் தாய் தந்தை
அருளால், (ஏனென்றால் நம்மைக் காத்தது அவர்கள்தான்) அந்த துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணிப் பாருங்கள். என் இரத்த நாளங்களில்
கலக்க வெண்டும், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும்
என்று ஏங்கும்பொழுது, அதைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அது நமது உடலில்
வலிமை பெறுகின்றது. குடும்பத்தில் எத்தகைய சிக்கல் வந்தாலும், இந்த
முறைப்படி, அன்னை தந்தை அருளால், துருவ நட்சத்திரத்தின் பேரருளைப்
பெறவேண்டும் என்று ஏங்கி பாருங்கள், எளிதில் பெறமுடியும், அந்த சிக்கலை
நீக்கும் ஞானமும் கிடைக்கும்.
(பக்கம் 34, 35)
நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான், நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”
என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ, அதன் வழிப்படி, இந்த
உடலான பரத்தை உருவாக்கியது உயிர். இதுதான் இராமேஸ்வரம், ஸ்தலபுராணத்தை
உருவாக்கி, இதே எண்ணத்தால் ஒளி என்ற உணர்வு பெற்ற, துருவ நட்சத்திரத்தின்
உணர்வைப் பெறச் செய்வதற்கு, இராமேஸ்வரத்தை அமைத்தார்கள். அங்கு அதிகாலை
4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தை பார்க்கலாம்
என்பதற்காக கோவிலை அமைத்தார்கள்.
அதன் உணர்வை ஒரு மண்டலம் (48
நாட்கள்) வளர்த்துக் கொண்டபின், நம் குடும்பத்தில் நமது மூதாதையர்களையோ,
உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களையோ, விண் செலுத்தி, துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும், சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க
முடியும்.மூதாதையர்களின் உணர்வு நமக்குள் உண்டு. அதன் துணைகொண்டு,
"எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த குலதெய்வமான உயிராத்மாக்கள், சப்தரிஷி
மண்டலத்தில் கலந்து, உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து, பெருவீடு பெருநிலை
அடைந்து, அழியா ஒளி சரீரம் பெறவேண்டும்” என்று, பிறவி இல்லா நிலை அடையச்
செய்யும் இடம் அது.
சிறிது காலமே மனித உடலில் வாழ்கின்றோம்.
இந்த மனித உடலில், மனதக் குவித்தல் வேண்டும். அதாவது, மனதில் எல்லா
குடும்பங்களும் நல்லது பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இதைத் தான்,
இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக, இராமாயணத்தில் காட்டினார்கள்.
இராமேஸ்வரத்தில், மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் உண்டு.
27
நட்சத்திரங்களின் சத்தை, சூரியன் எவ்வாறு பாதரசங்களாக மாற்றுகின்றதோ அதே
போன்று27 நட்சத்திரங்களின் சத்தை சூரியன் கவர்ந்து, இயக்க அணுவாக
மாற்றியதை, ஜீவ அணுவாக்கி,
இந்த உடலை உருவாக்கியது உயிர்.
மனிதனான பின், 27 நட்சத்திரத்தையும் சேர்த்து,
முழுமை அடையும் பக்குவத்தைத்தான்,
இராமேஸ்வரத்தில் காட்டினார்கள்.
இராமேஸ்வரத்தில் 27 கிணறைக் காட்டி இருப்பார்கள். எதுஎது உணர்வுகள்
ஊற்றெடுத்து, நமக்குள் ஒன்றாக்குகின்றது என்று இராமேஸ்வரத்தில்
காட்டப்பட்டது. நம் மனதைக் குவிக்கும் இடம் இராமேஸ்வரம்.
அங்கு நம் மூதாதையர்களை எண்ணி,
"எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த மூதாதையர்கள், சப்தரிஷி மண்டலத்தில் கலந்து,
உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
வாழவேண்டும்"
என அவர்களை விண்செலுத்தும் இடம் அது. மனிதன் ஒருவன் தான், அதைப் பெறமுடியும். கடைசி முடிவு.
அணுக்களாகச் சேர்த்து, சூரியனாகி, பிரபஞ்சமாகி, பிரபஞ்சத்தில்
உயிரணுவாகி, உயிரணு தோன்றிய பின், ஒளியின் உடலாவதுதான், இறுதி நிலை.
ஆகையால், முதாதையர்களை முறைப்படி விண் செலுத்தினால், அவர்கள் பிறவி இல்லா
நிலை அடைகின்றனர். அவர்கள் முன் சென்றால், அதை நாம் அனைவரும் எளிதில்
பெற்று, நம் ஆன்மாவை புனிதப்படுத்தி, எளிதில், நாம் எல்லோரும், அங்கு
(சப்தரிஷி மண்டலத்திற்கு) செல்லலாம்.
