ராகு, கேது பிடியில் மற்ற ஏழு கிரகங்கள் அடைபட்டுக் காணப்பட்டால் அது "கால சர்ப்பயோக''மாகக் கருதப்படுகிறது. ராகு, கேது பிடியில் இருந்து ஒரு கிரகம் வேறுபட்டு இருந்தாலும், லக்னம் வேறுபட்டு இருந்தாலும் காலசர்ப்பயோகத்தின் பலன்கள் 80 சதவீதம் கண்டிப்பாக உண்டாகிறது. சில ஜாதகங்களில் ராகு - கேது பிடியில் இல்லாமல் பரவலாகக் கிரகங்கள் காணப்படும்.
ஆனால் அந்த ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் ராகு, கேது
நட்சத்திரமாகிய, திருவாதிரை, சுவாதி, சதயம், அசுவினி, மகம், மூலம் ஆகிய
நட்சத்திர பாதாசாரங்களில் கிரகங்கள் காணப்பட்டால் காலசர்ப்ப தோஷம்
உண்டாகிறது. காலசர்ப்பயோகம் ஒருவருக்கு அமையப் பெற்றால் 32 வயது முடிய அவர்
வாழ்வு போராட்டமாக இருக்கிறது.
தொழில், இல்வாழ்வு, புத்திர பலன்கள், யாவும் 32 வயதிற்குள் உண்டாவதில்லை. ஆனால் 32 வயதிற்குப் பிறகு அவருடைய வாழ்வு அசுரவேகத்தில் முன்னேற்றம் ஏற்படுகின்றது. ராகு, கேது இருக்கும் இடத்தைப் பொறுத்து காலசர்ப்ப யோகத்தின் பலன்கள் உண்டாகின்றன.
சாதாரணமாக ராகு, கேது வீற்றிருக்கும் இடம், சுபர் வீடாக இருந்தால் காலசர்ப்பயோகத்தின் சுப பலனும், அசுபர்கள் வீடாக இருந்தால் அசுப பலனும் உண்டாகிறது. பெரிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் கால சர்ப்பதோஷம் அமையப்பெற்றுள்ளது. இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் வரலாற்றில் இடம் பெற்றார்கள்.