Pages

நவக்கிரகங்களால் நமக்கு ஏற்படும் தோஷங்கள் அகல



கோளறு பதிகத்தை பயபக்தியுடன் மனமுருகி பாராயணம் செய்து வருவதன் மூலம் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு கற்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, மாதுளை, நிவேதனமாக வைத்து அர்ச்சனை செய்து சரபேஸ்வரரை 21 சுற்றுகள் சுற்றி வர பணம், புகழ், பாராட்டு, வீடு தேடி வரும். கடுமையான சூரிய தோஷத்தால் பிடிக்கப்பட்டோர் பிதுர்வகை சாபங்கள் நிறைய உள்ளோர், அரசு ஆதாயம் வேண்டுவோர் அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும்.

சந்திர தோஷம் நீங்க....

கடுமையான சந்திர தோஷ பாதிப்பு உள்ளோர், குறிப்பாய் தாய்வகை சாபம் உள்ளவர்கள், கிரக தோஷ பாதிப்பு உள்ளோர், கலைத்துறையில் சிறப்பு பெற விரும்புவோர், வெள்ளி, முத்து, பால், வெண்பட்டு, வெண்குடை, பூநூல், வெள்ளைப்பசு, நெய், கற்பூரம், வெண் அல்லி, பூ இவற்றை தானம் செய்யலாம். இதை அவரவர் ஜென்ம நட்சத்திரத்திலோ திங்கள் கிழமைகளிலோ சந்திர ஓரையில் தானம் செய்து சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

செவ்வாய் தோஷம் நீங்க........

கடுமையான செவ்வாய் தோஷ பாதிப்பு உள்ளோர் தீராத கடன் வழக்கு பிரச்சினை உள்ளோர் வெற்றி பெற தேர்தலில், போட்டிகளில் தேர்வில் வெற்றி பெற, சட்டதுறையில் உயர் பதவி பெற, தாமிரம், பவளம், சிவப்பு பட்டு, செவ்வரளி பூ, காளைமாடு (ரிஷபம்) துவரை, கோதுமை, தங்கம் இவைகளை தானம் செய்யலாம். இதை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் ஓரையில் தானம் செய்வது சிறப்பு.

புதன் கிரஹ தோஷம் நீங்க......

புதன் கிரக தோஷத்தால் தீராத பிரச்சினைக்கு ஆளானோர், கல்வியில், வியாபாரத்தில், உயர விரும்புவோர், ஜோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் மேம்பட விரும்புவோர், தங்க விக்ரகம், மரகதம், சர்க்கரைப் பொங்கல், நெய், பச்சை பயிறு, பட்டு துணி, சந்தனக் கட்டை, யானை தந்தம், வெண் காந்தகம், இவைகளை ஜென்ம நட்சத்திரத்தில், (அ) புதன்கிழமை, புதன் ஓரையில் தானம் செய்ய வேண்டும்.

சுக்கிர தோஷம் நீங்க.....

கலைத்துறையில், வியாபாரத்தில், அன்னிய நாட்டில் புகழ் பெற விரும்புவோர், வெள்ளி விக்கிரகம், வைரம், வெண்பட்டு, வெண்தாமரைப்பூ, வெள்ளக் குதிரை, அவரை, அலங்கரிக்கப்பட்ட பசு, தாம்பூலம் இவைகளை தானம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தானம் செய்ய வேண்டும்.

சனி தோஷம் நீங்க.....

கடுமையான சனி பாதிப்புள்ளோர் இரும்பு விக்கிபரம், நீலக்கம்பளி, கருப்புப்பட்டு, கருப்பு பசு, சாலிக்கிராமம், எள்ளுடன் கூடிய பாத்திரம், அரசு வேம்பு உற்பத்தி செய்து திருமணம் செய்வித்தல், கருங்குவளைப் பூ, நீலம் இவைகளை தானம் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தில் மற்றும் சனிக்கிழமையில் தானம் செய்ய வேண்டும். கடுமையான முன்பாவ விணைககள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.