வலம்புரி சங்குசங்கநிதி பதுமநிதி
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதிJayBee
சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தைத் தாங்கியிருப்பது. சங்குகளில் பல
இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும்
கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும்
பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள்
உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றைக ்கூறுவார்கள். சாதாரணமாக உள்ள
சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில
சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச்
சங்கு என்பார்கள்.
வலம்புரி இடம்புரி
இடம்புரியை
'வாமாவர்த்தம்' என்றும் வலம்புரியை 'தக்ஷ¢ணாவர்த்தம'் என்றும் சொல்வார்கள்.
வலம்புரியா, இடம்புரியா என்று எப்படி நிர்ணயிப்பது?
சங்கின் நுனி
மேல்புறமாக நோக்கியிருக்குமாறு வைத்திருக்கவேண்டும். கைகளை முஷ்டி
பிடிக்கவேண்டும். ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல்
ஆகியவை உள்ளங்கைக்குள் அடங்கியிருக்குமாறு
மடக்கிவைக்கப்பட்டிருக்கவேண்டும். பெருவிரல் மேல்நோக்கி
நீட்டப்பட்டிருக்கவேண்டும். சங்கின் உட்புறச் சுழற்சி எந்தக் கையின்
விரல்களின் உட்புறச்சுழற்சியோடு ஒத்து இருக்கிறதோ, அந்தக் கையை ஒத்த சங்கு
அது. வலக்கையுடன் ஒத்திருந்தால் அது வலம்புரி.
வலம்புரிச் சுற்று
இந்த இடத்தில் உயிரியல் நூலைக் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போமே? இயற்கையின் பல
விதிகளில் Mutation என்பதும் ஒன்று. சாதாரணமாக எந்த உயிரினத்திலும்
காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் அவற்றின் பாரம்பரிய குணாதிசயங்களைப்
பொறுத்தே அமையும்.ஆதியில் மூதாதையரிடமிருந்து வந்த ஜீன்களின்மூலம்
கிடைக்கப் பெற்ற குணாதிசயங்கள்தாம் அந்த வம்சத்தில் வந்த வாரிசுகளிடையே
தோன்றும்.இந்தப் பொது விதி பல சமயங்களில் பிறழ்ந்துவிடும். அதுவரைக்கும்
அந்த குறிப்பிட்ட வம்சாவளியிடம் காணப்படாத முற்றிலும் புதிய குணாதிசயம்
திடீரென்று தோன்றிவிடும். இத்தகைய மாறுதலைக் கொடுக்கும் புதிய ஜீன்
தோன்றியதாலேயே இவ்வாறு ஏற்படும். இந்த மாதிரி பிறழ்ச்சியின் மூலம் ஏற்படும்
குணாதிசயங்கள்கொண்ட ஜீவராசி தோன்றுவதை Mutation என்றும் அந்த ஜீவராசியை
Mutant என்றும் குறிப்பிடுவார்கள். அணுசக்தியின் வெளிப்பாட்டின்போது
ஏற்படும் கதிர்வீச்சால் மியூட்டேஷன் ஏற்படும். சூரியனின் கதிர்களிலும்கூட
இந்த மாதிரியான ஆற்றல் உண்டு. பல்லாயிரக்கணக்கான இடம்புரிச்சங்குகளில் ஒரே
ஒரு வலம்புரிச்சங்கு தோன்றுவது மியூட்டேஷன ்மூலமாகத்தான். ஆகவே வலம்புரிச
்சங்கு எனப்படுவது ஒரு மியூட்டண்ட் ஸ்ட்ரேய்ன் எனப்படும் ஜீவராசி. அது
தனிப்பட்ட இனமில்லை. வலம்புரிச் சங்குகள் இயற்கையில் அதிகம் காணப்படமாட்டா.
அதிலும் வெண்சங்கு எனப்படும் பால்சங்கில் வலம்புரி ஏற்படுவது மிக
அபூர்வமானது. அதுவும் பெரியதாக இருப்பது இன்னும் அபூர்வம். ("ஆனாலும்கூட
தற்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளிலும் கோயில்களிலும் வலம்புரிச
சங்குகள் வாங்கி வைத்திருக்கிறார்களே. கலைப்பொருள்கள் விற்குமிடங்களிலும்
பூசைக்குரிய சாமான்கள் விற்கும் ஒவ்வொரு கடையிலும் நூற்றுக்கணக்கில்
வலம்புரிச்சங்கு வைத்திருக்கிறார்களே?" என்ற கேள்வி எழலாம். அதெல்லாம்
பிறந்த இடத்தின் மகிமையைப் பொறுத்தது. வலம்புரிச் சங்கின் பிறப்பிடம் கடல்.
ஏதோ ஒருவகை (இ)-மி(யூ)ட்டேஷனால் அது பிலாஸ்ட்டிக் தொழிற்சாலைகளிலும்
தற்காலத்தில் பிறக்கிறது.) பால்கடலிலிருந்து லட்சுமியுடன் சங்கும்
தோன்றியது. ஆகையால்தான் சங்கை அவ்வளவு விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.
'வலம்புரிச் சஙெடுத்துப் பாலூட்டுதல'் என்பது செல்வச்சிறப்பைக் காட்டுவது.
வலம்புரிச ்சங்குகளில் தலைமையானது விஷ்ணுவின் ் கரத்தில் இருக்கும்
பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அதை அவர் சிவபெருமானிடமிருந்து திருவலம்புரி
என்னும் திருத்தலத்தில் பெற்றாராம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும்
குபேரனிடம் நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் உண்டு. அவற்றை வண்டோகை, மனோகை,
பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் என்று தமிழ்
நூல்கள ்குறிப்பிடுகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை சங்கநிதி
பதுமநிதி என்னும் என்னும் பெருநிதிகள். பல கோடிக்கணக்கான பொன்
மதிப்புப்பெற்றவை. சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து தரணியோடு வானாளத்
தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர்
அல்லராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும்
புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம்
வணங்கும் கடவுளாரே.
இந்தப் பாடல் திருநாவுக்கரசர் பாடியது. 'சங்கநிதி
பதுமநிதியும் தந்து, நிலம் மட்டுமின்றி வான் முழுவதையும் ஆட்சி புரியத்
தந்தாலும் அந்த தந்தவர்கள் 'சிவனை ஒரே தேவன;் முடிவான தேவன்' என்ற
கொள்கையில் இல்லாதவராக இருந்தால், மங்குபவர்களாகிய அவர்கள் கொடுக்கும் அந்த
செல்வங்களை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அங்கமெல்லாம் குறைந்து அழுகிய
நிலையில், முற்றிய தொழுநோயால் பீடிக்கப்பட்டவராகவும், மாட்டை உரித்து உண்டு
உழலும் புலையராக இருந்தாலும்கூட, அவர்கள் கங்கையை அணிந்த எம்பிரானார்க்கு
அன்பராக இருந்தால் அவர்களே நாம் வணங்கும் கடவுளர'்.
இடம்புரி வலம்புரி
தன்மைகளை நாம் இயற்கையில் பல பொருட்களில் பார்க்கலாம்.மலர்களில் இந்த
இருவித தன்மைகளும் உண்டு. அவற்றின் இதழ்களின் சுழற்சி இந்த விதமாக
இருக்கும். இலைகள் விடுவதிலும் கிளைகள் விடுவதிலும்கூட இதைக் காணலாம்.