சென்ற
மார்கழி மாதத்தில் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து
கொண்டிருந்தேன்.ஆமாம்! தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து,அதன் பலன்களை எப்படி
நம்மை வந்தடைகின்றன என்பதை ஆராய்ந்துகொண்டிருந்தேன்.
www.omshivashivaom.blogspot.com உருவாகவில்லை;இந்த மார்கழியில்(2011) இந்த
வலைப்பதிவினை ஏராளமானவர்கள் வாசித்து,பின்பற்றிவருகின்றனர்.எல்லாம்
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் மற்றும் எனது நேரடி ஆன்மீககுரு
திரு.சிவமாரியப்பன் அவர்களின் ஆசியே இதற்குக் காரணம்!
நாளை 17.12.2011 சனிக்கிழமையன்று கர வருடத்தின் மார்கழி பிறக்கிறது.நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
தினமும் காலை 4.30 முதல் 6.00 மணிக்குள் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தான்.
புதியவர்கள் இந்த மாதம் ஒரு நாளுக்கு 10 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால் போதுமானது;
21 வயதை விட குறைவானவர்கள்,இதே பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் 108 தடவை மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.
பல நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்து,இடையில் அடிக்கடி ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்கள்
இந்த மாதம் முழுவதும் எப்பாடு பட்டாவது காலையில் ஜபிப்பது அவசியம்.
நிம்மதி;மன
மகிழ்ச்சி;செல்வ வளம்; தொழில் வளர்ச்சி;குடும்பத்தில் குழப்பம் நீங்கிட;
நீண்ட கால லட்சியம் நிறைவேற என எந்த ஒரு லட்சியமாக இருந்தாலும்,இந்த
மார்கழி மாதத்தில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக விரைவாகவே
அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதை உணரலாம்.
அப்படி உணர்ந்தால்,நமது ஆன்மீகக்கடலுக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.
ஓம்சிவசிவஓம்


