Pages



ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகம் காலசர்ப்ப தோஷ ஜாதகம் ஆகும். அனைத்துக் கிரகங்களும் பொதுவாக ராகு, கேதுவின் பிடிக்குள் கட்டுண்டு செயலற்றிருப்பர். இத்துடன் நாகதோசமும் சேர காலசர்ப்ப தோஷம் உண்டாகும்.

இத்தகைய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காளஹஸ்தி சென்று சர்ப்பசாந்தி செய்தல் நலம். சங்கரன்கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்தல் அவசியம். வெள்ளியினால் செய்த ஒரு தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் சேர்க்க வேண்டும். இந்த பரிகாரங்களால் காலசர்ப்ப தோஷம் உடனே விலகும்.

புதுக்கோட்டை மாவட்டம், பேரையூர் என்ற ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு மிக்க பிள்ளைப்பேறு வழங்கும் நாகநாத சிவன் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் சர்ப்ப தோஷப் பரிகாரத்திற்காக ரிஷபாரூடராகக் காட்சி தருகிறார்கள் ராகுவும் கேதுவும். இத்திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும்.

நீராடிய பிறகு ஈர உடைகளை கால் வழியாகக் கழற்றி அங்கேயே போட வேண்டும். தலைக்குமேல் ஈர ஆடைகளைக் கொண்டு வரக்கூடாது. அதன் பிறகு இக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்து, கால சர்ப்ப தோஷம் நீங்கி நன்மை அடையலாம்.