Pages

பித்ரு, களத்ர தோஷம் போக்கும் திருத்தலம்



தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உளூர் என்னும் பேருந்து நிலையத்தில் இறங்கி, கிழக்கே 2 கி.மீ. சென்றால் திருப்பருதி நியமம் தலத்தை அடையலாம். மேலும் சூரியன் பலம் குறைந்த ஜாதகர்களும், சூரிய பலம் பெற்ற ஜாதகர்களும் இத்தலத்திற்கு வந்து இறைவனை பூசிப்பதால் பித்ரு தோஷம் நீங்கி எல்லா வளமும் பெறுகின்றனர். இத்தலம் சிறந்த பித்ரு பரிகார ஸ்தலமாக உள்ளது.

வில்லியனூர் வடுகூரை அடுத்து உள்ளது திருபுவனை. இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையானது. சுக்கிர பகவானும் குரு பகவானும் ஒன்று சேர்ந்து வணங்கிய இடமாகும். களத்ரதோஷம் எதுவாயினும் இங்கு வழிபட்டால் அவை தீர்ந்து நல்ல வரன் அமையும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்