
சமீபத்தில் நான் இந்த பதிவை போகி மூலமாக பார்த்தேன். பிறகு இணையத்தில் தேடியதில் தமிழ் இந்து. நெட் தளத்தில் இன்னும் பிற தலங்களிலும் இதே பதிப்பை பார்த்தேன். அதற்கு பின்னூட்டமும் அளித்தேன். ஏனோ தெரியவில்லை எனது பின்னூட்டத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே எனது கருத்தை என்னுடைய இந்த வலையில் சொல்லலாம் என்றெண்ணி இங்கே இந்த பதிவு.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கருட தரிசனம் கர்ம பலன் நீங்கும்.
முதல் வரி முன்னோர்கள் சொன்னது. இரண்டாவது வரி என்னுடைய கருத்து.
அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.
கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு.
இங்கே நான் சொலவது என்ன வென்றால், அவர்களின் கருத்துப்படி கூட்டம் சேரும் இடத்தில் கருடன் வருவார் என்கிறார்கள்,
அப்படியானால் ஏன் அரசியல் கூட்டம் போடும் இடங்களிலும் திருவிழாக்காலங்களில் மக்கள் அலை மோதும் இடங்களிலும் கருடன் வருவதில்லை.
ஏன் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும்பொது ஏன் அங்கே கருடன் வட்டமடிக்க வருதில்லை.. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால் இது நடக்க வேண்டுமல்லவா?
ஆனால் கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை.

ஏனோ என்னால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆகவேதான் இந்த பதிப்பு. என் மனதில் தோன்றியதை இங்கு பதிக்கிறேன் அவ்வளவே.

கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.