Pages

சித்தர் களஞ்சியம் அறிமுகம்

பதினெண் சித்தர் துதி

நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் காலாங்கி
சிந்தி அழுகண்ணர் அகப்பேய் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னிச் சிரத் தனியாய்ச் சேர்த்து வாழ்வோம்

நம் தமிழகத்தில் தோன்றிய தமிழ்ச் சித்தர்கள் இயற்றிய காவியங்களின் பெருமை அளப்பரியது.இவைகளில் யோகம்,ஞானம்,இரசவாதம்,வைத் தியம்,சோதிடம்,மந்திரம்,சரகலை,பஞ்சபட்சி,காயகற்பம்,போன்றவைகள்மட்டுமல்லாமல் புவியியல் இரகசியங்கள்,மூலிகை-தாவரங்களின் சூட் சும இரகசியங்கள்,தாது-சீவ வர்க்க இரகசியங்கள்,பஞ்ச பூத இரகசியங் கள்,நவக்கிரக,பிரபஞ்ச இரகசியங்களை தங்கள் ஞானத்தால் கண்டறிந்து உணர்ந்தவற்றை பல லட்சம் பாடல்களாக இவ் வையகத்திலுள்ளோர் அனைவரும் பயன் பெற வேண்டு மென்ற நோக்கில் வடித்துள்ளனர்.

சித்தர் நூல்களில் உள்ள பல கருத்துக்கள் இன்றைய அறிவியல் உலகில் நம்ப முடியாமல் பிரமிப்பும் ஆச்சரியமும் அளிக்கக்கூடிய ஏராளமான அதிசயங்கள் உள்ளன.இவைகளை "சித்தர் களஞ்சியம்" தளத்தில் வெளி யிடுகின்றோம்.இவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவு காண வேண்டுகிறோம்.

நன்றி !
ரிசி...