Pages

அருட் பிரகாச வள்ளலார்


திருவருட்பா ஆறாம் திருமறையில் உள்ள சில பாடல்களை பற்றிய ஒரு ஆய்வு தொகுப்பு (விளக்கு, புருவ பூட்டு மற்றும் திறக்கும் விதம்) . வள்ளல் பிரான் அகத்தே உள்ள தூண்டாத இந்த சுயம் ஜயோதியை பெரும் தெய்வம் என்று குறிப்பிடுகிறார்.

" தூண்டாத மணிவிளக்காய் துலங்குகின்ற தெய்வம் 
துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம்"

கீழே உள்ள பாடல்களில்...சுவாமிகள் உள்ளே இருக்கும் திருக்கதவை திறந்து, ஜயோதியின் உருவத்தை காட்ட மாட்டாயோ என்று உருகுகிறார். மேலும் அங்கிருந்து அமுத ஊற்று எடுத்து உடம்பு உயிரோடு உள்ளம் ஒளி மயமாக வேண்டும் என்று வேண்டுகிறார்.



இந்த பாடல்களை தொடர்ந்து வருகையில் வள்ளல் இந்த கதுவுகளை திறக்கும் அனுபவங்களை மறைவு இல்லாமல் கூறுகிறார். இப்பாடல் வரிகளில் ..."படிகளை ஏற்றி விட்டீர் ,பதியை அடைந்தும் விட்டேன், அந்த பதி நடுவே கோவிலை காட்டி, கோபுரவாசலும், கதவும் காட்டி...திரும்பவும் மூடி விட்டீர் அதை திறக்க வேண்டும். இனி அரை கணம் கூட வீண் அடிக்காமல் முயற்சிப்பேன்" என்கிறார்.



"உள்ளே இருக்கும் பேட்டியில் உண்டு அதை நீ பெற்று கொள்க என்று அது திறக்கும் பெரும் திறவு கோலும் கொடுத்தீர். இப்போது அதை திறந்து எடுக்க முயல்கிறேன். அய்யனே நேரத்தை வீண் அடித்தால் , வீண் ஆகும் அரை கணத்திற்கு ஆயிரம் ஆயிரம் கோடி ஆக வட்டி போட்டு வாங்கிவிடுவேன்" என்கிறார்.


இனி கீழ் உள்ள பாடல்களில் கண்ட கதவால், கிடைத்த பெரும் திறவு கோலும் கொண்டு பூட்டை எப்படி திறந்தார் தெரிய வருகிறது. புருவத்தின் மத்தியில் உள்ள அந்த பூட்டை திறந்து அமுதுனை உண்டதை உரைக்கிறார். மறைகள் பாடும் பாடு இது தான் என்றும், சிற்சபையும் பொற்சபையும் சொந்தமாச்சு. தேவர்களும், மூவர்களும் இங்கே தான் . பிறவி துன்பம் எல்லாம் இன்றோடு போச்சு என்கிறார் . மேலும் அந்த மாடத்தின் நடுவே பீடம். அங்கே தீப ஒளி கண்டவுடன் கிடைத்தது பேரானந்தம் என்கிறார். மேரு மலை உச்சியும் இது தான். அருட் பிரகாச வள்ளலார். 



.


இதையே திருமூலர்...

நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளி
உற்றுஉற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்த இடம்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே

சிவவாக்கியார்...

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினை
பத்தி ஒத்து நின்று பற்றறுத்தது என் பயன்
உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே

சுகபிரம ரிஷி...

உச்சு மகா மேரு முடி தீபமாகி
உண்ணாக்கின்மேல் புருவ நடுவதும் ஆகி.

புனித பைபிள்.. 

Matthew 6:22, the inner light, the inner eye....The candle of Jahve

புனித குரான்..

24:35 Allah is the Light of the heavens and the earth. The Parable of His Light is as if there were a Niche and within it a Lamp: the Lamp enclosed in Glass: the glass as it were a brilliant star: Lit from a blessed Tree, an Olive, neither of the east nor of the west, whose oil is well-nigh luminous, though fire scarce touched it: Light upon Light! Allah doth guide whom He will to His Light: Allah doth set forth Parables for men: and Allah doth know all things.