திருமலை: திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது. காலையில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் நான்கு மாட வீதியில் உலா வந்தார். அப்போது பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில், நாலாயிரம் திவ்யபிரபந்தம் பாடியபடி ஜீயர் சீடர்கள் உடன் வந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பல வண்ண வேடமணிந்து ஆடியபடி வந்தனர். தப்பாட்டம், கோலாட்டம், பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்திற்கிடை யில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி வீதிஉலா வந்தார். இதைத்தொடர்ந்து 2ம்நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ் ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார். இரவு அம்ச வாகன உற்சவம் நடக்கிறது.
திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாள் விழா : சின்ன சேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா