மயிலாடுதுறையிலிருந்து
திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகில் அரை கிலோ
மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கூத்தனூர், சரஸ்வதி தேவிக்கென்றே தனி ஆலயம்
அமைந்துள்ள பெருமை பெற்ற ஊர். புராண நூலில் இந்த கூத்தனூரை திலதைப்பதி
முக்கால அம்பாள்புரி எனும் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரமாண்டபுராணத்தில் சரஸ்வதி தேவி இத்தலத்தில் திருக்கோயில் கொண்டதோடு மட்டுமல்லாமல், தற்போது இங்கு ஓடிக்கொண்டிருக்கும் அரிசொல் ஆறு எனப்படும் அரிசலாறு எனும் நதியில், கங்கை யமுனையுடன் சேர்ந்து தட்சிண திரிவேணி சங்கமமாகப் பிரவாகிக்கிறாள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பார்வதி எனும் திருப்பெயருடன் பர்வதராஜனின் புதல்வியாக வளர்ந்து வந்த மலைமகளை மண முடிக்க நினைத்த ஈசன், தன் தலையில் இருந்த கங்கையை ஒரு பெண்ணாக உருமாற்றி முன்பு கௌரிவனம், வில்வவனம் என்று வழங்கப்பட்ட இத்தலத்தில் தவம் செய்து வந்த பாஸ்கர முனிவரிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண் நதி நீரில் இறங்கி விடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லி விட்டுப் போனார்.
ஒரு நாள் ஆசிரமத்தையடுத்துள்ள அரிசொல் ஆற்றில் ஒருநாள் நீராடிக் கொண்டிருந்த பாஸ்கர முனிவர், ஞாபக மறதியாகப் பாத்திரம் எடுத்து வர பெண் உருவில் இருந்த கங்கையைப் பணித்தார். பாத்திரத்தோடு நதிக்கு வந்த பெண் உருவில் இருந்த கங்கை தன் இயல்பு குணம் காரணமாக நீராக மாறி அரிசொல் ஆற்றில் கலந்தாள். அதன்பின்தான் நீரில் கலந்தவள் கங்கை என்றும் அவளைத் தன்னிடம் ஒப்படைத்தவர் ஈசன் என்றும் பாஸ்கர முனிவருக்குத் தெரிந்தது. கங்கை அரிசொல் ஆற்றில் கலந்த இடம் ருத்ர கங்கை என்று வழங்கப்படுகிறது.
ஒரு சமயம் சத்யலோகத்தில் படைக்கும் கடவுளான நான்முகனுக்கும் கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான கலைமகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் பூவுலகில் மானிடராக அவதரித்தனர். பகுகாந்தன், சிரத்தை எனும் பெயரில் மானிடர்களாக அவதரித்து அவர்கள் வாழ்ந்து வந்த காலத்தில் அவர்கள் தந்தை புண்ணிய கீர்த்தி சிரத்தைக்குத் திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். சிரத்தை ஈசனை மனமுருகி வேண்ட, ஈசனின் திருவுளப்படி கூத்தனூரில் ருத்ரகங்கையில் கங்கையோடு சரஸ்வதியும் ஒரு அம்சமாகி அரிசொல் ஆற்றில் கலந்து நதிக்கரையில் கோயில் கொண்டாள்.
நான்முகனுக்குத் தனி ஆலயம், ஆலயபூஜை இல்லாத காரணத்தால் தர்ப்பணம் முதலிய அனைத்து பித்ரு கர்மாக்களிலும் பிரம்ம பூஜை விசேஷமாகச் செய்யப்படும் என்றும் ஈசன் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படியே பித்ரு காரியங்களில் பிரம்மபூஜை முக்கிய இடம் பெறுகிறது.
இத்தலம் உள்ள கூத்தனூரில் தொடங்கி ருத்ரகங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் அரிசொல் ஆறு ஓடும் நதிக்கரையில் தர்ப்பணம், தானம் முதலிய பித்ரு கர்மங்கள் செய்யப்படுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணாவதார காலத்தில் யமுனை கண்ணனின் ஆணைப்படி இத்தலத்திற்கு வந்து ருத்ரகங்கையில் கலந்து தன் பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.
கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற மூன்று புண்ணிய நதிகளும் சங்கமமான தட்சிணத்ரிவேணியாக இத்தலம் உள்ளதை பிரமாண்டபுராணம் மீண்டும் மீண்டும் உரைக்கிறது. அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வந்த இத்தலத்தை மாமன்னன் இரண்டாம் ராஜராஜன் தன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கினார். அதனால் கூத்தன் + ஊர் = கூத்தனூர் என்று இத்தலம் வழங்கப்படலாயிற்று.
இங்கு அருளும் மகாசரஸ்வதி ஆலயத்தின் விமான கோபுரத்தில் ஐந்து கலசங்கள் பொருத்தப் பட்டுள்ளது விசேஷமாகக் கருதப்படுகிறது. இங்கு அன்னை ஞானத் தவம் கொண்டிருப்பதால் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுக்கு உணர்த்துவதாக ஐந்து கலசங்கள் உள்ளதாம். கருவறையில் தேவி ஞானத்தவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவத் திருவுருவங்கள் வீற்றருள் புரிகின்றன.
இத்தல நடராஜப் பெருமான் நம் கண்ணையும் கருத்தையும் கவரும் திருவுருவில் முயலகன் பக்கவாட்டில் இல்லாமல் நேர்முகமாக அமைக்கப்பட்ட வடிவில் தரிசனம் அளிக்கிறார்.
மகாமண்டபத்தில் இடப்பக்கம் நின்ற திருக் கோலத்தில் நான்கு திருமுகங்களுடன் மறைகள் ஓதும் நான்முகனை தரிசிக்கலாம். அவருக்கு நேராக பிரம்மபுரீஸ்வரர், விநாயகர், முருகன் போன்றோர் அருள்கின்றார்கள்.
இந்த மண்டபத்திற்கு வெளியே இடப்புறம் கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தரின் திருவுருவச் சிலை உள்ளது. எப்போதும் கம்பிக் கதவினுள்ளேயே காட்சி அளிக்கிறார் ஒட்டக்கூத்தர்.
ஆலயத்தின் நுழைவிடத்தில் பலி பீடத்தருகே வலம்புரி விநாயகரை தரிசிக்கலாம். சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் அன்னையை நோக்கி எழிலுடன் நிற்கிறது. ஆலய பிராகாரத்தின் தென் மேற்கு மூலையில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் நவகிரகங்கள் இல்லை.
கருவறையில் ஞான சரஸ்வதி நான்கு திருக்கரங்களுடன் வலப்பக்க மேல் கரத்தில் அட்சர மாலையும் கீழ்க் கையில் சின் முத்திரையோடும் இடப்பக்க மேல் கையில் அமிர்த கலசமும் கீழ்க் கையில் புத்தகமும் ஏந்தி, வெண்ணிற ஆடை அணிந்து, வெண்தாமரை மீது பத்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறாள். இத்தல சரஸ்வதியின் கரங்களில் வீணை இல்லை.
கவிச்சக்ரவர்த்தி கம்பனின் பிரத்யட்ச தெய்வம் இந்த சரஸ்வதி தேவி. இவளே கம்பனின் பக்திக்காக கிழங்கு விற்கும் பாட்டியாகவும், இடையர் பெண்ணாகவும் வந்து கம்பரின் சங்கடங்களை நீக்கி அருளினாள்.
சங்கமர்கள் ஒட்டக்கூத்தரைக் கொல்ல வந்த போது கூத்தர் காளியின் ஆலயத்தில் சரணடைய, பரணி பாடினால் கூத்தரைக் கொல்லாமல் விடுவதாக அவர்கள் கூறினார்கள். கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடி அவரின் உயிரைக் காத்த அன்னையை கூத்தர் ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியவே என்று மனதாரப் பாடி நன்றி தெரிவித்திருக்கிறார்.
பிறவியிலேயே பேசும் திறனற்ற புருஷோத்தமன் எனும் பக்தனுக்குத் தன் திருவாயிலிருந்து தாம்பூல உச்சிஷ்டத்தைத் தந்து புவி போற்றும் புருஷோத்தம தீக்ஷிதராக்கிய கருணைக் கடல் இவள்.
பௌர்ணமி தினத்தில் இந்த அன்னைக்கு தேனால் அபிஷேகம் செய்வித்து, அந்தத் தேனை மோதிரவிரலால் தொட்டு நாவில் வைத்துக் கொள்ள, கல்வி அறிவு பெருகும்.
ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் தாங்களே கருவறையில் உள்ள தேவிக்கு பாத பூஜை செய்யமுடியும் என்பது இத்தல விசேஷம். அதற்கு வசதியாக கருவறை தேவியின் பாதங்கள் நீளமாக கருவறைக்கு வெளியே எடுத்து வரப்படும் வகையில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் அதை பூஜிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். விஜயதசமியன்று கலைஞர்களும் வித்வான், வித்வாம்சனிகளும் இங்கு வந்து சரஸ்வதியின் அருளால் தாங்கள் பெற்ற வித்தையை காணிக்கையாக கலைநிகழ்ச்சிகள் நடத்தி விட்டுச் செல்கின்றனர்.
மாணவ-மாணவியர் தேர்வுக்குச் செல்லும் முன் பேனாவை இத்தேவியிடம் சமர்ப்பித்து பயபக்தியுடன் வழிபட்டுச் செல்கின்றனர். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இத்தல தேவியை வணங்க, அன்னையின் கருணையால் கல்விச் செல்வம் நமக்குள் ஊற்றாய் பெருகும்.