திருத்தணி:
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா தொடங்கியுள்ளது.
ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். காவடி எடுத்தும், முடி
காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அறுபடை வீடுகளில்
ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும்
விழாக்களில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பானது. இந்த ஆண்டு ஆடிக்
கிருத்திகை விழா, இன்று காலை தொடங்கியது. அதிகாலையிலேயே பக்தர்கள் கோயிலில்
குவிந்தனர். முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நாளை மறுநாள் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் முடி காணிக்கை அளித்து வழிபட்டனர். ஆடிக் கிருத்திகை விழாவை தொடர்ந்து தெப்பத் திருவிழா நடக்கிறது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சென்னை மற்றும் பல பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள் வசதிக்காக மலையடிவாரத்தில் இருந்து கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயிலுக்கு 2 பஸ்கள் இயக்கப்படுகிறது.