skip to main |
skip to sidebar

மனை
வாங்கி வீடு கட்ட வேண்டும், அல்லது வீடே வாங்க வேண்டும் என்று
விரும்புபவர்கள், மரக்காணம் தலத்தை தரிசிக்கவேண்டும். மிகப்பெரிய சுயம்பு
மூலவராக, பூமீஸ்வரன், இறைவி கிரிஜாம்பாளோடு திகழ்கிறது இவ்வாலயம். புது
வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்களும் இத்தலத்துக்கு வந்து
பூமீஸ்வரனைப் பிரார்த்தித்துச் செல்கிறார்கள். ஏற்கனவே கட்டிய வீட்டில்,
வாஸ்து பிரச்னையால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கிடவும் பக்தர்கள் இங்கே வந்து
இறைவன் அருள் பெறுகிறார்கள். இங்குள்ள துர்க்கை குடை, மாலையுடன்
காணப்படுகிறாள். இவளுக்கு துவாரபாலகிகளும் உண்டு. இங்குள்ள வெகு அழகிய
பிட்சாடனர் சிற்பமும் அபூர்வமானது. இத்தல வல்லப விநாயகர் சந்நதியில்
குழந்தைகளுக்குக் காது குத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதனால் இவர் ‘காது
குத்தி விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். புதுச்சேரியிலிருந்து 35 கி.மீ.
தொலைவில் உள்ளது, மரக்காணம்.