அந்நாளில்
மிதிலையும் இப்படித்தான் கோலாகலம் பூண்டிருந்ததோ! அயோத்தியிலிருந்து
தசரதன் தன் மனைவியர், அரசப் பரிவாரங்கள், படைகள், பொதுமக்கள் என்று
லட்சக்கணக்கில் மிதிலை நகருக்கு வந்த திருக்கோலமும் இப்படித்தான்
திகழ்ந்ததோ! கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை மக்கள் தலைகள்தான். கடும்
வெயிலையும் பொருட்படுத்தாமல், அடிக்கடி போக்குவரத்து இல்லாத வசதிக் குறைவை
எண்ணியும் கலங்காமல், அந்த கல்யாண வைபவத்துக்குத் திரண்டிருந்த மக்கள்
அனைவரும் ஒரே நோக்கினராக விளங்கினார்கள். அது, சீதா கல்யாண வைபோகத்தைக்
கண்டு களிப்பதுதான். நெல் போட்டால் பொரியாகிவிடும் அளவுக்கு பக்தி வெம்மை
அங்கே பரவியிருந்தது. மிதிலை மைதிலிக்கும் தினகர குல பூஷணமான
ஸ்ரீராமபிரானுக்குமான திருமண நிகழ்ச்சியினைக் காணத்தான் அப்படி ஒரு மக்கள்
வெள்ளம்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே, கரூர் செல்லும் வழியில் அமைந்துள்ள நாகையநல்லூர் கிராமத்தில்தான் இந்த பக்திப் பரவசம்! சீதா-ராம கல்யாணத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவரின் உதடுகளும் ‘‘ராம, ராம’’ என்றே உச்சரித்துக் கொண்டிருந்தனவே அல்லாது வேறு எந்த வம்பையும் பேசாதது அந்தத் தலத்தின் தனி மகிமை என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் அங்கே சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கேட்போரை நெகிழ வைத்து முழுமனதையும் ஸ்ரீராமனுக்கே அர்ப்பணிக்கச் செய்யும் உருக்கும் பாடல்களைப் பாடினார்கள், பாகவதர்கள். கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஆரம்பித்த இந்த வைபவம், ஏப்ரல் 18ம் தேதிவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையுடன் நிறைவேறியது, அதிசயம்தான். இத்தனைக்கும் அந்த கிராமத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் வீடுகள் இருக்கின்றன. ஆனாலும் பஜனை மண்டபத்தில் பிரதானமாக ஆரோகணித்திருந்த சீதாராம திருக்கல்யாண ஓவியம், இந்த ஊரையே நிறைக்கும் அளவுக்கு பக்தர்களை ஈர்த்திருக்கிறது என்றால் அது நிச்சயமாக ஸ்ரீராமனின் மகிமைதான். ஊரின் எல்லையில் இருக்கும் பூமாதேவி-நீளாதேவி சமேத லட்சுமிநாராயணப் பெருமாள் ஆலயத்திலிருந்து ராமர்-சீதை-லட்சுமணர்-அனுமன் உற்சவ விக்ரகங்கள் இந்த சீரிய வழிபாட்டுக்காக ஊருக்குள் பஜனை மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு, நித்ய பூஜைகள் பெறுகின்றன. (இந்தப் பெருமாள் கோயில் தவிர, ப்ரமராம்பா சமேத மல்லிகார்ஜுனர், மதுர காளியம்மன், முருகன் ஆகியோரும் இந்த கிராமத்திலும் சற்று அருகிலும் கோயில் கொண்டிருக்கிறார்கள்.)
இந்த தொடர் விழாவின் சிறப்பம்சம், சீதாராம கல்யாணம். ஒரு திருமண கொண்டாட்டத்தில் என்ன சம்பிரதாயமெல்லாம் மேற்கொள்ளப்படுமோ அவையெல்லாம் அங்கே நிறைவேறிய காட்சிகள் கண்கொள்ளாதவை. சீர் கொண்டுவருவது முதல், பந்தக்கால் நடுவது, அதைச் சுற்றி ஆடிப்பாடுவது என்று தொடர்ந்து, மாங்கல்யதாரணம் நடக்கும்போது அங்கிருந்த பக்தர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிவதைக் காணமுடிந்தது. ‘நம்ம வீட்டுக் கல்யாணம்’ என்ற பெருமை ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததை அவர்களது மலர்ந்த முகமும் உச்ச ஸ்தாயியில் பாடிய பஜனைப் பாடல்களும் நிரூபித்தன. இந்த ராமரிடம் என்ன விசேஷம் என்றால், இவரிடம் வேண்டிக்கொண்ட எந்த கோரிக்கையையும் இவர் நிறைவேற்றித் தராமல் போனதில்லை. அதனால்தான், ஒரு வருடம் வந்து இந்த ராமநவமி மஹோத்ஸவத்தில் கலந்து கொள்பவர்கள், அடுத்த ஆண்டும் வருகிறார்கள் - தங்களுடன் கூட இரண்டு மூன்று பேரையாவது அழைத்துக் கொண்டு! இந்த வகையில் சுமார் 5000 பேர் இந்த வருடத்து வைபவத்தில் கலந்துகொண்டு பேறு பெற்றிருக்கிறார்கள். இந்த ராமனிடம் வேண்டிக்கொண்டு, இவனருளால் தடைகள் நீங்கித் திருமணம் செய்து கொண்டவர்கள், மகிழ்ச்சி குறையாமல் வாழ்வதும் மகப்பேறுக்காக ஏங்கி இவனிடம் பணிந்து நின்றவர்கள், அடுத்த வருடமே தம் குறை நீங்கப் பெற்று, பரம்பரையைத் தொடரவைக்கும் பேறு பெற்று களிப்பு எய்துவதும் இங்கே நிதர்சனம். பாகவதர்கள் சாப்பிட்ட இலைகள் மீது புரண்டு எழும் பிரார்த்தனையையும் சிலர் இச்சமயத்தில் நிறைவேற்றுகிறார்கள்.
89வது வருடமாக இப்படி ஸ்ரீராமநவமி கொண்டாட்டம் இந்த ஆண்டு நிறைவேறியிருக்கிறது. வருடத்துக்கு ஒருமுறைதான் இந்த வைபவம் என்றாலும் இத்தனை வருடங்கள் தொடர்ந்திருப்பதிலிருந்து ராமனின் அருளும் பக்தர்களின் சரணாகதியும் எளிதாகப் புலப்படுகின்றன. கல்லுக்குள்ளிருந்தும் ஈரம் பெற்ற ஆன்மிக பலம் வாய்ந்த சிற்றூர், நாகையநல்லூர். ஆமாம், குடிதண்ணீர் கிடைக்காத வறண்ட பகுதியாகவே இருந்த ஊர் இது. கிணறு என்று ஒன்று இருந்தும் அது நீர் கொண்டதாக இல்லாமல், பாழாகிப் போய், குப்பைக் கொட்டும் இடமாக மாறிப்போயிருந்தது. ஒருநாள், ஒருவர் ‘ஜெய்ராம், ஸ்ரீராம்...’ என்று சொல்லிக்கொண்டே, விளையாட்டாக அந்தக் குப்பை மேட்டில் குதிக்கப் போக, அப்படியே அவர் உள்ளிழுக்கப்பட்டார். உடனே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பாய்ந்து சென்று அவரை இழுத்து, வெளியே போட்டபோது, உள்ளிருந்து நீர் கசிவதைக் கண்டு திகைப்புற்று மகிழ்ந்தார்கள். குதித்தவர் சொன்ன ராமநாமமே ஒரு பாணமாகி கிணற்றுக்குள்ளிருந்து நீர் ஊற்றெடுக்க வைத்ததோ! மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, ராமனை தியானித்தபடியே கிணற்றைத் தோண்டியபோது பாறை, ‘டங்’கென்ற ஓசையுடன் தன் எதிர்ப்பைக் காட்டியது. மேலும் முயன்றபோது, அந்தப் பாறையே ராமநாமத்தில் நெகிழ்ந்து, சற்றே விலகியதோ! அடியிலிருந்து நீர் பொங்கிப் பெருகி, மேலே, மேலே வர ஆரம்பித்தது.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இவ்வாறு ராம அருளால் நீர் வழங்க ஆரம்பித்த இந்தக் கிணறு, இன்றுவரை, எந்த வறட்சிக் காலத்திலும் இந்த ஊர் மக்களுக்கு நீர்வளம் அருளத் தயங்கியதேயில்லை. சமீபத்திய உதாரணமாக, சீதாராம கல்யாணத்துக்கு வந்திருந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தாகம் தீர்த்து, அவர்களுக்குத் தயார் செய்யப்பட்ட அன்னதான பிரசாதத்துக்கும் தேவையான நீர் அளித்துத் தன் தொண்டினை ராமர் பாதத்திற்கு சமர்ப்பித்திருக்கிறது இந்தக் கிணறு! ராமநாமம் எல்லா உயிர்களையும் உய்விக்க வல்லது. இது ராம அவதார காலத்திலிருந்தே அனுபவிக்கப்பட்டு வரும் தெய்வீக சுகம். ராம அவதாரத்தின்போது வாழ்ந்திருக்கக்கூடியவர்களே இந்தக் கலியுலகிலும் அடுத்தடுத்துப் பல ஜன்மங்கள் எடுத்து வாழ்ந்து வருவது சாத்தியமான உண்மையாக இருக்கக்கூடும். அதைத்தான் இந்த நாகையநல்லூர் ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் இப்போதும் நிரூபித்திருக்கிறது! இந்த மஹோத்ஸவம் நிறைவு பெற்றதும் ஊர் வெறிச்சோடிவிடும் என்றாலும் இதே ஊரிலுள்ள மீரா பஜன் மண்டலியின் இறைப்பணி மட்டும் இடையறாது தொடர்வதுதான், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களை ஈர்க்கும் ராம சூத்திரம்!
-பி.எஸ். படங்கள்: என்.ஆறுமுகம்