திருவண்ணாமலை
நேரடியாகச் சென்றோ, தொலைக்காட்சி சாதனங்கள் மூலமாகவோ நம்மில் சிலர் திருவண்ணாமலை தீபக் காட்சியினை கண்குளிர தரிசித்திருப்போம். பலர் நேரடியாகவே திருவண்ணாமலை சென்று தீப தரிசனம் கண்டு வந்திருப்பீர்கள். அந்த மலரும் நினைவாக, இதோ திருவண்ணாமலை தீபக் காட்சிகள் சில:
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் உலக மக்கள் உணர்வதற்காக இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் ஐந்து. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர்(நிலம்), திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்(நீர்), திருக்காளத்தியில் காளத்தீஸ்வரர்(காற்று), சிதம்பரத்தில் சிதம்பரேஸ்வரர்(ஆகாயம்), திருவண்ணாமலையில் அண்ணாமலையார்(அக்கினி).
இவற்றில், காஞ்சியில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி. ஆனால், ஜோதிவடிவான திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. எனவேதான் இதற்கு முக்திபுரி எனும் சிறப்பும் உண்டு. தலேச்சுரம், சிவலோகம், ஞானநகரம், சுத்தநகரம், கவுரிநகரம், தென்கயிலாயம், சோணாச்சலம், சோணகிரி, அண்ணாத்தூர், அண்ணாநாடு, அருணாத்திரி, அருணாச்சலம், அருணகிரி, திருவருணை, அருணை என்பதெல்லாம் திருவண்ணாமலையின் திருப்பெயர்கள். அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பு, உமையாளுக்கு இடபாகம் அருளிய அருளாளன், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நலம் தரும் ஈசன், அண்ணாமலையாராக எழுந்தருளியிருக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையின் அடியொட்டி, விண்ணுலக காட்சியாக பரந்து, விரிந்து, வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட திருத்தலத்தில் அருளாட்சி நடத்துகிறார், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்.
அக்கினி வடிவான அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போது கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தீபப்பெருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவின் நிறைவாக 10ம் நாளில் நடைபெறும் பரணி தீபமும் மகா தீபமும் தரிசிக்க முற்பிறவி பயன்வேண்டும். தீபத்திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். ‘ஏகன் அனேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், ஒரு மடக்கில் ஏற்றப்படும் தீபம் கொண்டு பஞ்சமுக தீபங்கள் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
முன்னதாக, அண்ணாமலையார் கோயில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், ஆனந்தத் தாண்டவம் காட்டுவார். அப்போது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ எனும் முழக்கம் விண்ணதிரும். மிகச்சரியாக மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, மலை உச்சியில் மகா தீபம் பிரகாசிக்கும். பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என எழுந்த சர்ச்சையின்போது, அடி, முடி காணாத விஸ்வரூப மூர்த்தியாக, ஜோதி வடிவாக சிவபெருமான் எழுந்தருளியது திருக்கார்த்திகை தினத்தன்று. எனவே, நான் எனும் அகந்தையை அழித்து, உள் முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியை காண்பதுதான் தீப தரிசனம். அதற்காகவே இறைவனின் திருவருளால் தீபத்திருவிழா நடைபெறுகிறது.
மலையில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்தப்படுகின்றன. பருவதராஜகுல வம்சத்தினர் தீபம் ஏற்றும் உரிமை பெற்றுள்ளனர். தீபம் எரியும் 11 நாட்களும் மலை மீது முகாமிட்டு திருப்பணியை நிறைவேற்றுகின்றனர். தீபம் ஏற்றப்படும் பாரம்பரியமான கொப்பரை காலப்போக்கில் சேதமடைந்ததால், தற்போதுள்ள தீபக் கொப்பரை கடந்த 1991ம் ஆண்டு, 92 கிலோ செம்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவாக்கப்பட்டது. மகா தீப கொப்பரையின் உயரம் 57 அங்குலம். அடிபாக விட்டம் 27 அங்குலம், மேல்பாக விட்டம் 37 அங்குலம். 11 நாட்களுக்குப் பிறகு, அந்தக் கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டு, அதில் ஒட்டியிருக்கும் தீப மையை வழித்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
-கி.வினோத்குமார்
படங்கள்: சு.திவாகர்