சனிப் பிரதோஷத்தில் தொடங்கி, தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இருளஞ்சேரி என்ற தலத்திலுள்ள கலிங்கநாதீஸ்வரரை வழிபடுவோருக்கு ஏழரைநாட்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டச் சனி, பாதச்சனி, பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீவினைகள் நீங்கி விடுவதாகச் சொல்கிறார்கள். இத்தலத்து நந்திதேவர் மிகவும் சக்தி படைத்தவர். இவரது வலது கண் சூரியன் வடிவத்திலும் இடது கண் சந்திரன் வடிவத்திலும் அமைந்துள்ளன. இறைவி, தாயினும் நல்லாள். பெயருக்கேற்ப இந்த அம்பாள் பக்தர்களுக்கு நல்லருள் புரிகின்றாள். இங்கு பிரதோஷ காலத்தில் பெண் பக்தர்கள் அதிக அளவில் வழிபடுகிறார்கள். சென்னையிலிருந்து 56 கி.மீ. தொலைவில், இருளஞ்சேரி என்ற இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில். சென்னை கோயம்பேட்டில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
- மேவானி கோபாலன்



