Pages

பிருகு முனி - ஒரு தொகுப்பு-2




 பிருகு மகரிஷியின் கதைகளும், அதில் புதைந்த ஞான கருத்தும் /Bhrigu's story and the Gnana behind it

மகரிஷி மும்மூர்த்திகளை சோதனை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.கலியுகத்தில் மூவரில் யாருக்கு ஆகுதி பிரதானம் என்று ரிஷிகளுகுள் சர்ச்சை வந்தது, இதற்காகவே இந்த சோதனை என்றும் கதைகள் கூறுகின்றன.  இதன் விளைவாகவே ஸ்ரீனிவாச சம்பவமும், திருப்பதி நிலையமும் தோன்றிற்று.

முதலில் பிருகுமுனி பிரம்மாவை காண செல்கிறார் சத்யலோகதிற்கு .  பிருகுமுனி வரவை கவனிக்காத பிரமமன் தன் வேலையை செய்கிறார். வெகுண்ட முனிவர் இனி உனக்கு உலகில் தனி கோவில்கள்  கிடையாது என்று சபித்தார்.

Bhrigu first went to Satyaloka, the abode of Lord Brahma. At Satyaloka, he found Lord Brahma, reciting the four Vedas in praise of Lord Narayana, with each of his four heads, and attended upon by Saraswati. Lord Brahma did not take notice of Bhrigu offering obeisance. Concluding that Lord Brahma was unfit for worship, Bhrigu left Satyaloka for Kailasa, the abode of Lord Shiva.

பிறகு  முனிவர் கைலாயத்திற்கு சிவபெருமானரை காண செல்கிறார். அங்கு
சிவபெருமான்  சக்தியை இடப்பக்கம் ஆலிங்கனம் கொண்டு உள்ளார். அவர்
எதிர் பார்த்த வரவேற்பு இங்கும் இல்லாததால் சிவனை இனி எல்லோரும்
லிங்க வடிவத்தில் வணங்கட்டும் என்று சபிக்கிறார். இதை வைத்து தான் தாந்தரிகம் பேசுவோர்  லிங்கம், யோநி என்று  அர்த்தம் அறியாமல் குழம்புகின்றனர்.

On reaching Shiva's place and calling there was no reply. The knocking turned to pounding and then to a desperate beating. Finally Shiva emerged, taking his own time. He had his wife Parvati on his left arm.Incensed at the treatment meted out to him, the sage cursed Shiva that henceforth, since he was so fond of making love, he would be worshipped in the image of  "organ of generation", rather than his idol representation. Thus, to this day, Shiva is worshipped in the form of the organ of procreation, often alone, and frequently conjoined with the corresponding female yoni, which is sculpted as a receptacle to receive Shiva's seed. :-) This is the place where tantric yogi's completely misunderstand the topic.

அதன் பிறகு பிருகுமுனி பெருமாளை காண செல்கிறார். அங்கே விஷ்ணு தூங்கி கொண்டு இருந்ததால் தன் காலால் விஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி வசிக்கும் இடத்தில உதைக்கிறார். அதற்கு விஷ்ணு பிரிகுவின் காலை அமிக்கி கொடுப்பது போல  அகங்காரம் என்னும் அந்த ஒற்றை கண்ணை நசுக்கி அகற்றுகிறார். அதன் பின் பிருகு முனிவர்  திருமாலையே மூவரில் ஆகுதி கொடுக்க சிறந்தவர் என ரிஷிகளிடம் சென்று உரைக்கிறார்

At Vaikunta, Lord Vishnu was reposing on Adisesha with Sri Mahalakshmi in service at his feet. Finding that Lord Vishnu also did not notice him, the sage was infuriated and kicked the Lord on His chest, the place where Mahalakshmi resides. Vishnu, in an attempt to pacify the sage, got hold of legs of the sage and started to press them gently in a way that was comforting to the sage. During this act, he squeezed the extra eye that was present in the sole of Bhrigu's foot. The extra eye is believed to represent the sage's egotism. The sage then realised his grave mistake and apologized to Vishnu. Thereupon, the sage concluded that Lord Vishnu was the most supreme of the Trimurti and told the rishis the same.

இப்போது இதில் என்ன ஞானம் நமக்கு உரைக்கப்பட்டது என்பதை  பார்போம். அதற்கு சற்று அகமாக சிந்திக்கலாம். /Let's see the GNANA behind this

பிரமன் விஷ்ணுவின் தொப்புள் வழியாக தாமரை மேல் அமர்ந்தவன். படைப்பிற்கு  பின்  பரிபாலனம்  என்றல், அனந்தசயனம் கொள்ளும் பெருமாள் வயிற்றில் பிரமனை காண்பிக்க தேவை-இல்லை.  இந்த பூலோகத்தை நம் உடலாக கொண்டால் அர்த்தம் விளங்கும். இங்கு படைப்பே ஞானத்திற்கு புறம்பாக உள்ளத்தால் தனித்து பிரம்மனை வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது யோகிக்கு. அவ்வாறாக உண்டாகும் படைப்பில் அறியாமை உள்ளது. அவை 5 வகை ஆகிறது அந்ததமிச்ரம், தமிச்ரம், மகாமொஹம், மொஹம், அந்தகாரம். இவைகளை பெரும் இருள் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதற்காக தான்  சூட்சமம் அறியாத
அவரை இளையவன் சிறை வாசம் கொள்கிறார்.

Brahma is depicted sitting on a lotus in the nabi of anandhasayana perumal. It is thereby sure that brahma who creates the world exists if only Vishnu exists. Now refer the world to your self (Inner). Brahma created the five forms of IGNORANCE first – namely, “Andhathamisram, Thamisram, Mahamoham, Moham, Andhakaram" Having said that it is important to understand all this especially the andhakaram which is also refered as darkness in the vedas. Now the earth is nothing but a reference to self per yogi. So these internal creations are distractions for yogi to achieve the state that he wants to. However a normal person in earth is a part and parcel of this guna which is refered as thamo guna by vedas. Also to remember that he was jailed by kumara because he led the creation without understanding the essence of om (agara + ugara + magara)

பிருகு முனி ஈசனை மறை பொருள் (மறைத்து வைக்கப்பட்ட பொருள்) என்பதை உணர்கிறார்.  ஆழ்ந்து அகன்ற நுனியன் அல்லவே. அந்த ஒரு பொருள் இரண்டாய் பிரிந்து ஷக்தி சொருபமாய் மாறுவதை அறிந்தார். அகவே கபாலத்தில்/கயிலாயத்தில்   மறைந்துள்ள அந்த கபாலீஸ்வரனை உள்ளங்கை நெல்லி  கனி போல் காண்பித்தார். சூட்சமமாய்  உள்ள அய்யனை, ஸ்தூலமாய்  லிங்க வடிவமே  உண்மை  என்று அந்த வடிவம் கொடுத்து அதனை நேரடியாக  சென்று அடைய முடியாது என்பதை உணர்த்துகிறார்.  

The easan is the soothma porul which becomes into easan and shakthi. Upastham is the combination of lingam and Yoni which functions as source to indriyams inside us. It is the "organ of generation" inside and not the physical ones visible to us outside.This was made as sthoolam for people to understand and the whole temple architecture revolves around how the human in built. So Brighu ensured Sivan being the source and "organ of generation" has to be worshipped as lingam (Baanam held on yoni..together upastham and lingam). To reach him the mind has to be become aiykiyam with Jeevan.
அந்த பாற்கடலின் மேல் சிதாகாசிதில் நிஷ்டை கொள்கிறான், ஆனந்தமாய் சயநிக்கிறான்: மனம், சித்தி, புத்தி, அஹங்காரம் ஆகியவைகளின் அதிபதியாகிய திருமால். மனம் ஓடுகினால் ,அகங்காரம் ஒடுங்கும்(காலில் உள்ள ஒற்றை கண்) , வாசி ஒடுங்கும் (காற்று என்னும் காலால் விஷ்ணு நிஷ்டை கொள்ளுதல்). வசுக்கள் எல்லாம் அந்த வாசுதேவன் இடமிடம் ஐக்கியம்  கொண்டது.சீவன் தோன்றும் இடத்தில் மனம் ஐக்கியமாகும்.  நீராய் உருகும் நீல வண்ணன் சுக்ல மாய்  அங்கே கட்டுகிறான். இப்போது சத் சித் ஆனந்தம் ஆகிறது .  புத்தி என்னும் விஞ்ஞானம் தாண்டி  அண்ணாக்கு மேல் உள்ள மலை உச்சியில் சோதியாய், ஆனந்தமாய், அன்னம் உண்டு, சதா சிவமான சோதியாய் ....... 
The one who lyes in the milky ocean on a snake is on ananda sayanam meditating... His state is gone beyond manas, intellegence, self and "I" now due to this and got to the state of ananda.The vasus get controlled by vasudevan here. The ahankara being the eye of Brighu got removed due to the praanan control (the prana + aayamam) is depicted as leg in the story. Vaasi is refered to as leg, horse and other various names by siddhars and rishis in their songs. For example Markendeya was saved by lord shiva by kicking yama, using his leg (கால் அறிந்தவன் கூற்றனை உதைக்கலாம் என்கிறது சித்தர் பாடல்கள், இன்னும் ஒப்பிட்டால் 16 அங்குலம், வயது பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் ) . now the mind resides in jeeva and becomes sat + Chit + aanandham. That is the practioner has crossed the state of vignana/ intelligence and is in the annamalai in state of bliss, ecstacy, consuming and becoming the sadasiva as jothi.

அப்பன்  அருள்  தொடரும் ......