Pages

பிருகு முனி - ஒரு தொகுப்பு- 3

பிருகு முனியும் சுவாமி மலையும்



கும்பகோணம் அருகேருகே உள்ள சுவாமி மலை அறுபடை வீடுகளில் நான்கவதாக  முருகனுக்கு அமைந்த வீடு. அப்படியென்றால் பெருமாளை பிரதான படுத்தி ஞானத்தை கூறிய பிருகு முனிவருக்கும் இந்த இடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும்??  மேலும் இங்கு தான் முருக பெருமான் பிரணவத்தின் ரகசியத்தை தகப்பனுக்கு உணர்த்திய இடம்.

Swamimalai is fourth among the six padai veedu  (sacred shrines ) dedicated to Lord Muruga.
The presiding deity here  expounded the meaning of the Pranava mantra OM to his own 
Father Lord Siva Himself.
புராணங்கள் பிருகு முனி இங்கு கடும் தவம் புரிந்ததாகவும், அந்த தவத்தை யார் கலைதாலும் அவர்கள் தன் நினைவு எல்லாம் மறக்கும் என்ற எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் அவரின் தவம் மிக கடுமையாக இருந்தது. தலையில் இருந்து கிளம்பிய அக்னி ஜவாலை தேவலோகத்தை தாக்கியது.
தேவர்கள் பயம் கொண்டு ஈஸ்வரனை சரண் அடைந்தனர். ஈசன் தன் கையால்
 பிருகுவின் தலையில் இருந்து கிளம்பிய அக்னி ஜவாலை மூடினார். இதனால் பிருகுவின் தவம் கலைந்தது அதனால் அத்தன் பிரணவத்தை
மறந்தார். அதனை மறுபடியும் முருக பெருமான், தந்தைக்கு நினைவு படித்தினார்.
   
Mythology says that saint Bhrigu before commencing an arduous tavam or penance,
got the boon that anybody  disturbing his mediation will forget all his knowledge. Such was the
power of the penance that the sacred fire emanating  from the head of the saint reached up to
the heavens, and the frightened devas surrendered to Lord Siva praying for his grace.
The Lord extinguished the sacred fire by covering the saint's head by hand. With the
saint's penance thus disturbed the Lord  became oblivious of all his knowledge and is said to
have regained them by learning the Pranava mantra from Lord Muruga at this shrine.



தந்தைக்கு பிரணவம் ஓதுவதற்கு முன், ஏன் பிரம்மனை கைது செய்தார்  குமரன் ? பிரணவம் அறியாமல் படைப்பு செய்ததால் தானே? பிரணவம் அறியாமல் படைத்தால் என்னவாகும், அறிந்து படைத்தால் என்னவாகும். இதற்கு படைப்பு என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். பூலோகத்தை நம் உடலாக கொண்டால் அர்த்தம் விளங்கும். அவ்வாறாக உண்டாகும் படைப்பில் அறியாமை உள்ளது. அவை 5 வகை ஆகிறது அந்ததமிச்ரம், தமிச்ரம், மகாமொஹம், மொஹம், அந்தகாரம். இவைகளை பெரும் இருள் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. 

Why was lord brahma jailed by Lord Muruga? what are the consequences in creation , if the creater doesn't know 'OM" .Now refer the  creation to your self (Innerself). Brahma has created the five forms of IGNORANCE first – namely, “Andhathamisram, Thamisram, Mahamoham, Moham, Andhakaram" Having said that it is important to understand all this especially the andhakaram which is also refered as darkness in the vedas. Now the earth here is nothing but a reference to self  which is immersed in worldly aspects. 

நமது உயிரான ஈசன் , தினமும் நசித்து கொண்டு இருக்கிறான்  பிரமன் படைக்கும் அறியாமையலால். இந்த படைப்பால் மனம்மான விஷ்ணுவும், ஜீவனாகிய ஈசனும் உள்ளே நோக்காமல் வெளியில் கறைந்து நிற்கின்றனர் . அதை போல யோகிகள் தியானத்தில் தன் நிலை மறப்பது உண்டு. அவர்கள் பிரமன் படைப்பை நிறுத்திவிட்டு  உள்  முகமாக தங்களை மறுபடியும் படைப்பது உண்டு  அந்த மாற்றி பிறக்கும் யுக்தி பிரணவம் அறிந்தோருக்கு மட்டுமே உண்டு. அந்த பிரணவ சூட்சமத்தை  அறிந்தவன் சுப்பிரமணி . ஆகையால் சுப்பிரமணி
படைக்கும் படைப்பு அழகா இருக்கும். அந்த தத்துவத்தை ஈசன் இடம் சொன்னதால் ஈசன் தன் பெருமையை அறிந்து உள்ளே ஆனந்தமாய் இருந்தானே. இவ்வாறு தனுக்குள் இருந்த ஓங்கார ரகசியத்தை இங்கே பிருகு மகரிஷி ஓதியப்பன் யோக ஆசியால் அடைந்தார். பின்பு ஏறி அகத்தே  நின்றார் (திருவேரகம்). இந்த அந்தர் அனுபவத்தை அழகாக அருணகிரி நாதர் ..." நாத விந்து கலாதி நமோ நம வேதா மந்தர ஸ்வரூபா நமோ நம". என்கிறார். இங்கு பிருகுமுனி சிலை இல்லை மாறாக சுப்ரமணிய  ஞானத்தின் தந்தையான அகத்தியர், அகத்தை ஆராயும் ஞானியர்க்கு குருமுனியாய் அங்கு சிலை வடிவில் உள்ளார்.


The Jeeva (Shiva) and Vishnu (Mind) are lost in the ignorant creation of brahma.This leads to diversion of jeeva and mind from the real fact of achieving the state of Ananda for the one who searches within. Yogis during their deep trance lose track of their state.The only way back is to know the secret of OM in order to deal with it and to arrest their Jeeva inside. Else brahma continues to create without control. For yogis, lord murugan takes control and starts creating. Hence the creation is as beautiful as him, the SUBRAMANI. This is the place where Brigumuni should have got into a similar trance state and had identified the subramani. The above story is a clear explanation of this..

This place has Airavath as vahanam instead of Mayil and has Karthaveerya Arjuna (Sudarshan chakra's incarnation) worshipping the lord in Swamimalai. This is also set to be a place were sugabrahma goswami had seen Muruga (internally).