Pages

2. உயிரின் இச்சைக்காக வாழவேண்டும்

இந்நேரம் வரையிலும், நமது குருநாதர் காட்டிய நிலையில் அழைத்துச் சென்றேன். உங்கள் மனமெல்லாம், இந்த உலகெல்லாம் சென்று, அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தையும், ஆதிசக்தியின் ரூபத்திலிருந்து, இதுவரையிலும் உங்களைப் பெறச் செய்தது.


உங்கள் எண்ணங்களைப் பழகச் செய்து, இந்த உணர்வின் தன்மையெல்லாம், கிரேதா. நாம் எந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து, பதிவு செய்கின்றோமோ, அதை நினைவூட்டும் பொழுது, கிரேதாயுகமாகக் கவரும் சக்தி பெறுகின்றது.


இந்த உணர்வின் தன்மை, உயிருடன் மோதி, மீண்டும் இந்த திரேதாயுகத்தில், உணரின் எண்ணங்கள் கொண்டு, நமக்குள் மாற்றும் சக்தி வருகின்றது.


ஆக, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நம்க்குள் சேர்த்து, இந்த திரேதாயுகத்தில் நாம் மாற்றி, இந்த உயிரின் உணர்வின் தன்மையை, ஒளியாக மாற்றுதல் வேண்டும்.


அப்பொழுது, அதை ஒளியாக மாற்றும் பொழுது, இந்த உயிர் எப்படி ஆனதோ, இதைப் போல உணர்வின் அணுக்களை மாற்றியமைத்துக் கொள்வதே, நமது குரு காட்டிய அருள்வழி.


ஆகவே, இந்த உடல் இருக்கும் பொழுதே, இந்த உணர்வைப் பெறுவோம். உடலின் இச்சைக்கு அநேகமாக யாரும் செல்லாதபடி, உயிரின் இச்சையைச் சேர்த்து, அந்த உணர்வின் தன்மையை, நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெறுவதற்கு சக்தி கொடுத்திருக்கிறோம். அதை நீங்கள் பெறுவது, உங்களுடைய நிலைகளில்தான்.


கிடைக்கவில்லை, கொடுக்கவில்லை, என்ற நிலை வராதபடி, ஏனென்றால், இனி எதிர்காலம் மிகக் கடினமான காலமாக இருக்கும். அதனால், இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொள்வோம். அருளைப் பெருக்குவோம். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையில், முழுமை அடைதல் வேண்டும்.


ஏனென்றால், இவ்வளவு நாள் கேட்டோம், நீங்கள் அதை அடைய வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டவர்கள் உணர்வுகளிலும் அதே உணர்வுகளைப் பெருக்கச் செய்ய வேண்டும். அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, ஒளியான உணர்வை, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறுவோம்.
3. ஞானகுரு நமக்குள் பதிய வைக்கும் ஞானவித்து
ஒரு உணர்வுக்கு ஒரு வித்தைக் கொடுக்கின்றோம். அந்தச் செடி வளர்ந்தால்தான், அந்த வித்தின் ரூபம், மலரின் தன்மை, மணத்தின் தன்மை தெரியும். இப்பொழுது, இங்கு ஒரு ஞானவித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்படியென்றால், உங்களுக்குள் பதிவு செய்து, ஈர்க்கக் கூடிய சக்தியைக் கொடுக்கிறோம்.


அப்பொழுது, அதில் நாம் ஒன்றியிருக்க, எத்தனையோ கஷ்டங்களும் நஷ்டங்களும் இருக்கும். இதையெல்லாம் பிளந்துவிட்டு, உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும். அந்த உணர்வை, நமக்குள் வளர்க்கக் கூடிய சக்தி நமக்குள் உண்டு.


நாம் வளர்ந்தோம் என்றால், அடுத்தவர்ளையும் வளர்க்கலாம். அடுத்தவர்களின் வேதனை வளர்ந்தால், அதைக் கேட்டோம் என்றால், நாமும் அந்த வளர்ந்த வேதனையை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது எது தேவை?


அதனாலே, சில உண்மையின் உணர்வுகள் உங்களுக்குள் வரும் பொழுது, ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் தொடர்ந்து, இந்த உணர்வுகளை, உங்களுக்குள் எடுத்து வளருங்கள்.


ஒரு வித்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டால், அதைப் பாதுகாக்கும் உணர்வுக்குச் செலுத்த வேண்டுமா? இல்லையா? அந்த ஞானத்தின் வித்தின் தன்மையை, அந்த அடர்த்தியானது, அது “ஆதிசக்தியினுடைய உணர்வுகள்”.


இப்பொழுது, அகண்ட அண்டம் எப்படி இருக்கிறது என்று, “வட்ட வட்டமாக”, “மோதி மோதி, மோதி மோதி”, எப்படிப் பல நிலைகள் மாறுகிறது என்று நன்றாகத் தெரியும். அதை நாம், நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்வது.


ஒரு கண்ணாடி சுத்தமாக இருந்தால், நம் உருவத்தைத் தெளிவாகக் காட்டும். அதில் கொஞ்சம் அழுக்குப் பட்டால், அதில் உருவத்தைத் தெளிவாகக் காணமுடியாது. ஆக, அந்த அழுக்கைத் துடைத்தால்தான், சரியாக வரும்.


ஆகவே, அந்த அழுக்கைத் துடைக்கக் கூடிய உணர்வைத்தான், யாம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம். நம் ஆன்மாவில், இதைப் போன்ற அழுக்குகள் இருக்கின்றது. இதன் வழி கொண்டுதான் நாம் பார்க்க முடியும்.


அதில் அழுக்குப் பட்டிருக்கும் பொழுது, அழுக்குப் படவில்லை என்று நாம் சொன்னால், என்ன செய்யும்? அந்த அழுக்குகள், ஒன்று ஒன்றாகக் கூடிக் கொண்டேதான் இருக்கும்.


ஆக இந்த அழுக்குகளை, நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது, நிச்சயம் இந்தத் தெளிவை அடைகின்றோம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா?
4. ஞானகுரு காட்டும் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டியது
ஏனென்றால், நாளக்கு வரக்கூடிய் விஷத்தன்மைகள் ஏராளமாக இருக்கின்றது. அதற்குள், எப்படி ஒரு விஷத்தன்மை படர்ந்த உணர்வுகளில், ஒரு பூ அந்த நல்ல மணத்தை எடுத்து, நறுமணத்தைக் கொடுக்கின்றதோ, அதே போல, நம் உடலிலுள்ள அணுக்களுக்கு, வலுவான நிலைகளில் அந்த உணர்வுகளை நுகரச் செய்து, உணர்வை வளர்க்க வேண்டும். அந்த நறுமணங்களைப் பெருக்கச் செய்யவேண்டும்.


இப்பொழுது, தியானத்தில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு சாக்கடைப் பக்கம் நின்றால், சாக்கடை வாசனை தெரியாது. “என்ன இவன் சாக்கடை பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான்” என்று மற்றவர்கள் பேசுவார்கள். ஆக, அவர்கள் இதை ஞாபகப் படுத்தினால், இங்கே இருக்கும் சாக்கடையைத் திரும்பிப் பார்த்த பின்பு, சாக்கடையின் வாசனை தெரியும். இதை நீங்கள் உணரலாம்.


ஏனென்றால், மற்ற தீமைகள் நமக்குள் போகாதபடி பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது. அதனாலே, நாம் இதை நாளடைவில் பெருக்கிக் கொண்டு வரவேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாம் சொல்லும் இந்த உணர்வுகளை, உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள், அந்த உணர்வைப் பெறுவதற்குண்டான வழிகளைத்தான், யாம் காட்டுகின்றோம்.


இதை எல்லோரும் பெற முடியும். ஆனால், நீங்கள் யாம் சொல்லும் முறைப்படி, வளர்ந்து காட்ட வேண்டும். யாம் ஒருவன் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தால், பத்தாது. நீங்களும் இதைப் பெற வேண்டும், பெற முடியும். அந்த நிலைக்கு மாற வேண்டும்.


அப்பொழுதுதான், நாளைக்கு வரக்கூடிய தீவிரவாதத்திலிருந்து, நம்மை மீட்கவும், நம் குடும்பத்தாரையும், நண்பர்களையும், உலக மக்களையும் மீட்க முடியும். ஏனென்றால், இந்த உடலுக்குப் பின் அதைத்தான் நாம் பெறுகின்றோம். அதுதான் நமக்கெல்லாம் தேவை.

(பின் குறிப்பு: ஆதிசக்தி தியானமும், ஞானகுரு நம்மிடம் எதிர்ப்பார்ப்பது என்ற தலைப்புகளில் உள்ளவைகள் அனைத்தும், நம் சாமி அவர்கள் சிதம்பரத்தில் 22.09.2000 அன்று தியானம் செய்து, பின் உபதேசித்ததின் எழுத்து வடிவம்)