Pages

கொல்லூர் உபதேசம் - 2

“தியானமிருக்கிறேன்” எனக்கு “ஒன்றும் கிடைக்கவில்லை”,
“தியானமிருக்கிறேன் என் தொழில் நன்றாக நடக்கவில்லை”
என்று தவறான எண்ணத்திற்குக் கொண்டு செல்லாமல் “தியானமிருக்கிறேன், தொழில் நடக்கும்” என்ற எண்ணம் வரப்படும்போது, நீங்கள் தேட வேண்டியது இல்லை.

தியானத்தின் நிலைகள் நாம் எடுக்கின்றோமென்றால் இந்த உணர்வு தானாகவே வரும். நமக்கு வேண்டியது அது. அதை எடுக்கப்படும்போது இந்த உடல் பற்றின் நிலைகளில் மாற்றம் வரும். இது வேண்டும்.
தொழில் இல்லையென்றால், இந்த உடலின் நிலைகள் வளராது.
இந்த உடல் இல்லையென்றால், ஞானமும் பெற முடியாது.
ஆகவே, இதைப்போன்று நாளை நாம் இருப்பதற்கு, அது வேண்டும்.


ஏனென்றால் கோலமாமகரிஷியினுடைய தத்துவம், அவர் அரசனாக இருந்தாலும், தனக்குள் தீமையை விளைய வைத்த உணர்வை, அந்த மெய்யுணர்வின் தன்மையை, அந்த வியாசகன் வழிகளில் அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் வளர்த்து, இந்த தீமைகளைத் தனக்குள் ஒடுக்கிக் கொண்ட உணர்வுதான், இந்த நிலைகளில் அவரும் முழுமை பெற முடிகின்றது.

நாமும் இதனுடைய நிலைகளில் பிழை தவறினாலும், இதைப்போன்ற ஒத்த உணர்வுகளில், அந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து, மெய் ஒளியை நிச்சயம் பெற முடியும்.

ஆகவே இதை நாம் எந்த வழியில் கொண்டு வரவேண்டும்? நம் மூதாதையர்கள், இறந்தவர்களை, குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து இந்தக் கூட்டு தியானங்களில், அந்த ஆன்மா விண் செல்ல வேண்டுமென்று உந்தித் தள்ளுகின்றோம். எவருடைய ஈர்ப்புக்கும், இந்த உயிரான்மாவை விடுவதில்லை. காலத்தால் பெறும் தகுதியை இழந்தாலும், நாம் இம்முறையிலும் இதைப் பெற முடிகின்றது.

ஆகவே, கடைசி எல்லை எது? அதுவாக இருக்கின்றது. அதைப்போல இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டுமென்றால், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

யார் எந்தத் தீமை செய்தாலும், அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.
தீமை செய்கிறான். திமை செய்கிறான் என்றால்,
நம்மைத் தீமை செய்ய வைக்கும்.

ஆக அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க வேண்டும். இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். குறைகளைக் கூறுவதற்குப் பதில், நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும் நிலைகளுக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆக இது ஒருதலைப்பட்சமாக, நமக்குள் வரப்படும் போது, நம் இயக்கத்தில் வரப்படும் போது, மற்றவர்களும் இதைச் சிந்திக்க வேண்டும்.

சிலர் விடாப்பிடியாக இருப்பார்கள்.
ஆக அதைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
அவர்கள் நிலை எதுவோ, மீண்டும் நாம் முயற்சிக்கிறோம்.

தவறு செய்கிறார் என்றால் சரி.
அவருடைய விதி அதுவாக இருக்குமோ,
என்ற நிலைகளில் நாம் அகற்றிட வேண்டும்.
அதைக் கவர்ந்திடக் கூடாது.
அவருடைய விதி அதுவாக இருக்கும்.

அது அதிகமாக இருந்தால், மீட்டுவதற்கு நாம் முயற்சி செய்யக் கூடாது, துடைப்பதற்கு அவர்தான் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர், அதன் வழியில் செய்த பிழைகள், அது அரசனாக இருந்து அதன் வழிக்கே கொண்டு செல்லும்.

ஆகவே, அன்று அரசனாக இருந்து ஆட்சிப்புரிந்த கோலமாமகரிஷி, எதை அரசனாக்கினார். தனக்குள் உயர்ந்த ஞானியின் உணர்வை அரசாக்கி, தனக்குள் தீமையை விளைவிக்கும், பல பாவங்கள் கொண்டு செயல்பட்ட அந்த உணர்வை நீக்கினார்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து, அதை அரசனாக்கி, இதைத் தனக்குள் தணிய வைக்க வேண்டும்.


தவறு நாமும் செய்யவில்லை. அவரும் செய்யவில்லை. நமக்குள் உட்புகுந்த தீமைகளே, அந்தத் தவறுகளைச் செய்கின்றது, என்ற நிலையை, இதை அடக்க வேண்டும். எதை வைத்து?


அந்த சப்தரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டுமென்று உட்புகுத்தி, அதைக் கவர்ந்து, தீமையை ஒடுக்க வேண்டும். இவ்வாறு நாம் அடக்கிக் கொண்டோமென்றால், நாம் அங்கே செல்வது உறுதி.


(பக்கம் No 65-69)
இப்பொழுது விஷத்தன்மையான உணர்வுகள் பரவியுள்ளதால்,. யாரிடமாவது வேகமாகச் சண்டை போட்டால், “இரண்டில் ஒன்று பார்க்கலாம். போ!” என்ற எண்ணம் வரும்.


அதைப்போலத்தான் கொலைகளும், கொள்ளைகளும் நடப்பது. அவன் செய்கிறான் என்று நினைக்க வேண்டாம். நம்மையும் செய்யத் தூண்டி விடும்.


ஆக, அவன்தான் செய்கிறான் என்று எண்ண வேண்டாம். அதே உணர்வுகளை நாம் அதிகமாக நுகர்ந்தோமென்றால், நம்மையும் அந்த நிலைக்கு ஆளாக்கும்.


அந்த நஞ்சுக்குள் இருந்து, நாம் தப்ப முடியாது என்ற நிலைக்கு நாம் வருகிறோம். நாம் நினைக்கிறோம், அவன்தானே அப்படிச் செய்கிறான் என்று,
இந்த உணர்வின் விஷத் தன்மையைப் பார்க்கப்படும்போது,
தன் நண்பனிடத்தில் பழகினாலும்,
அவன் விட்டுக் கொடுக்கவில்லை என்றால்,
“இரண்டில் ஒன்று தீர்த்துக்கட்டு” என்ற உணர்வுதான் இங்கே வரும்.


ஆக, அவனில் விளைந்த உணர்வுகள் என்ன ஆகிறது?
“நமக்கு இடையூறு செய்கிறானா,
அரசனாக்கி, அவனைத் தொலைத்துக்கட்டு”
என்ற நிலைகளில், நமக்குள் இருக்கும் உணர்வுகள் உந்தும்.


“என்னமோ ஆகிவிட்டுப் போகட்டும் விடு” என்கிற நிலையில்தான், நல்ல குணத்தை அழித்துவிடும். எங்கோ நடக்கிறது என்று எண்ண வேண்டாம். நமக்குள் இருந்து, நமக்குள் எதிரியாகி, நல்ல உணர்வைக் கொன்று, இப்படித்தான் புசிக்கும்.


அன்று அந்தக் கோலமாமகரிஷி, தனக்குள் தீமையை அகற்றும் நிலைகளைத் தனக்குள் வளர்த்து, அந்தத் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு, அகற்றிய மெய்ஞானியின் உணர்வை நமக்குள் அரசனாக்கி, அதையே சாகாக்கலையாக நின்று, வேகா நிலையாகப் பெற்றார். ஆக ஆதிசங்கரர் உடலுக்குள் சென்றபின் வேகாநிலை என்ற முழுமை அடைகின்றார்.

ஆகவே, இதைப்போன்ற நிலைகளைப் பெறுவதற்கு நீங்கள் எந்த ஏக்கத்தில் வந்தீர்களோ, “சாமி நன்றாகச் சொன்னார்” என்ற நிலைக்குப் போகதபடி, “நாம் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு”, முற்பட வேண்டும்.


சாமி மட்டும் அதைச் சொல்கிறார்.
சாமி மட்டும் கஷ்ட்டப்பட்டார் என்று இல்லாதபடி,
“யாம் கஷ்டப்பட்டோம்”,
“நீங்கள் கஷ்டம் வருவதைத் தடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்”.
ஆக, நாம் எல்லோரும் சேர்ந்துதான் “சாமி”.


எல்லாக் கோள்களும் இல்லை என்றால், சூரியன் இல்லை. நாமெல்லாம் ஒருங்கிணைந்து, அந்தச் சக்தியின் தன்மையைப் பெறும்போதுதான் சாமி என்ற நிலைகளே வருகிறது சாமிக்கு மரியாதை கொடுக்கிறோம்.


சாமிக்கு எந்த வகையில் மரியாதை வரவேண்டும்? நீங்கள், இப்பொழுது கேட்டுணர்ந்தவர்கள் எல்லோரும், அந்தத் தீமைகளை அகற்றும் முறைப்படி, செயலாக்கும் பொழுதுதான் சாமிக்கு மரியாதை.


யாம் கற்றுணர்ந்தது இதற்குத்தான். அந்த மெய்யுணர்வுடன், அடுத்த கணம் வரும் தீமைகளை அடக்கிப் பழக வேண்டும். அடுத்தவர்களுடைய தீமைகள் உருவாவதை, இதைத்தடுத்து, அந்த உணர்வுகள் நமக்குள் வளராது, நமக்குள் தடுக்க எண்ணவேண்டும்.
தடுக்க எண்ணும்போது,
அவரிடமிருந்து விளைவதை,
அந்த உணர்வை நமக்குள் விளையாது தடுக்கலாம்.
இந்த உணர்வு பரவப் பரவ,
நம்மீது அவர் எண்ண, எண்ண
அவர் உணர்வுகள் மாறும்.
அவ்வாறு மாறி விட்டதென்றால்,
அவனுள் விளைந்த தீமைகளை அடக்கவும்
அவனால் முடியும்.


எல்லா நெல்லும், அரிசியாகும்போது முழுவதாக வரவில்லை.
ஒரு நெல்லைப் போடுகிறோம். விளைகிறது.
ஒன்று கருக்காயாகப் போய் விடுகிறது.
ஒன்று வெறும் சோடையாகப் போய் விடுகிறது.
எல்லாம் ஒரே செடியில்தான்.
அதையும் மிஞ்சி வருவதுதான்
நல்லவைகளாக வருகிறது.


“என்னடா? தியான வழியில் வருகிறார்கள், இந்த மாதிரிச் செய்கிறார்கள்”, என்கிற நிலை வரப்படும்போது, இதில் இரண்டு கருக்காயாகும் நிலை வரும்.


“பாருடா, நம் சாமி கூடவே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்,
இப்படி இருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வார்கள்.
“இவன் அயோக்கியத்தனம் பண்ணிக் கொண்டிருந்தான்.
இவன் போய் இந்த தியானத்தில் சேர்ந்திருக்கிறான்,
இவர் சேர்த்துக் கொண்டார்” என்று ஒரு கற்பனை.


ஒருவர் தவறு செய்கின்றார். அவர் திருந்த வேண்டுமென்று, இங்கே வருகிறார்.

“அவன் அயோக்கியத்தனம் செய்தான் பார்” இவர்களுடன் சேர்ந்து கொண்டு இருக்கிறான், “இவனுக்கு எப்படிப் பக்தி வரும்” என்று இப்படிச் சிலர் சொல்வார்கள்.

ஆனால், அவர்கள் செய்யும் அயோக்கியத்தனம், அதை வலுப்படுத்தி, அதை அரசனாக்குகிறது. இவர் இதைத்தான் சுட்டிக் காட்டுவார். ஆக, அவர் அவருக்குள் நல்லதை வளரவிடவில்லை. நல்லதைப்பற்றி வளர்ப்பதற்கு, எண்ணமும் இல்லை.

ஆக, நல்லவராக ஆகவேண்டுமென்ற எண்ணமில்லை. ஆக எண்ணியது, அவருடைய நிலைகளில் அவர் கெட்டவர் என்று எண்ணுகின்றார்.

கெட்டவரென்ற நிலைகளில் நாம் எண்ணும் போதெல்லாம், ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்து, அதை ரசித்துச் சாப்பிடுபவர்கள் போன்றுதான்.

இந்த மாதிரிச் சொல்பவர்கள் எல்லோரும், ஒருவர் அடிக்கடி கஷ்டப்பட வேண்டும். இவர்கள் அவர்களைப் பார்த்து ரசிப்பார்கள். இவர்கள் எங்கே போவார்கள்?

உங்களுக்குத் தெரியாது! மனிதனாக இருக்கிறோம். எல்லாம் தெரிந்து கொண்டோம் என்றிருப்போம். அசல் பாம்பாகத்தான் செல்வார்கள், அல்லது கடு கடுவென்று இருந்தால், தேள் இனமாகத்தான் செல்வார்கள். நிச்சயம் அவர்கள் உயிர், அங்கேதான் கொண்டு செல்லும். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.


(பக்கம் 70-75)
இன்று M.L.A. ஆக வேண்டுமென்று போட்டி போடுவார்கள். M.L.A. ஆக வேண்டுமென்று நினைப்பார்கள். M.L.A. ஆனவுடன், தன்னை மட்டும் காத்துக் கொண்டு, மற்றவர்களை ஒடுக்குவார்கள். M.L.A. ஆகும்போது எதைச் சொல்லிக் கேட்டோமோ, அதன்வழி நடப்பவர்கள்தான், உண்மையான M.L.A.


ஆக, இங்கே அரச மோகங்கள்தான் வருகிறது. மற்றவர்களை அடக்கும், ஆட்சிக்குக் கடைப்பிடிப்பார்கள். பின், அவர்கள் மற்றவர்களை அடக்கும் நிலைக்கே செல்வார்கள்.


நாம் இப்போது எதை அடக்க வேண்டும்? அருள்ஞானியின் உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும். நமக்குள் வரும் தீமைகளை ஒடுக்க வேண்டும். தீமைகளைச் செய்விக்கும் உணர்வுகளை, “ஒடுக்கும் அந்த M.L.A. ஆக”, போட்டிப் போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


நாம் எதற்காக இங்கே (கொல்லூர்) வருகிறோம் என்றால், எப்படியும் வெற்றி பெறும் நோக்கத்துடன் வருகிறோம். அந்த நோக்கம் அந்த மெய் ஒளியின் தன்மையில், அழியாப் பருவம் நாம் பெற வேண்டும். இதை நாம் நிச்சயம் பெற வேண்டும். நமக்குள் நம்மை ஆட்டிப்படைக்கும் நிலைகளை, அடக்கிப் பழக வேண்டும்.


M.L.A.-க்கு ஓட்டுப்போட்டு என்ன ஆகியது. அவர் சுகமாக இருப்பார். முதலில் எல்லாம் சொல்லிக் கேட்பார். அங்கே போவார்கள். அங்கே சென்றபின், எத்தனை பேருக்குத்தான் இவர் பதில் சொல்வார்.
“இதெல்லாம் ஒன்றும் முடியாது,
நம் வழியை, நாம் பார்த்துக்கொண்டு செல்வோம்” என்று செல்வார்.


அதே மாதிரி, நாம் இந்த உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால், மகரிஷிகளின் அருள்சக்தியை எடுத்துக் கொண்டால், நமக்கு இடையூறு கொடுப்பதை எல்லாம் வேண்டாமென்று தள்ளிவிட்டு, அங்கே (சப்தரிஷி மண்டலம்) போகலாம் என்று, நாம் இதை அரசாட்சியாகப் பிடிக்க வேண்டும். இதைப்போன்ற நிலைகளில் நாம் வர வேண்டும்.


நாம் உயிரைப் பற்ற வேண்டும். அவன் நம்மை எங்கே அழைத்துச் செல்கின்றானோ, அங்கே செல்வோம் துயர்ப்படும் உணர்வின் நிலைகளுக்கு நாம் அடிக்கடி சென்றால், அது அங்கேதான் அழைத்துச் செல்லும். நாம் வேதனைப்படுவோருடைய நிலைகளை அடிக்கடி சிந்தித்தால், நமது உயிர் அங்கேதான் அழைத்துச் சென்று, அதனின் நிலைக்கேதான் மாற்றும்.


ஆகவே, இதைப்போன்ற நிலைகளை எல்லாம் விடுத்து, நாம் மனிதனின் வாழ்க்கையில், சிலபேர் இருந்தால் போதும். “அவர்கள் கேட்கவில்லையே” என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அந்த வருத்தமே கூடாது.


நமக்குள் இருப்போர் ஒருவர் தவறு செய்தாலும், அந்தத் தவறின் நிலையை,
“தவறு செய்கின்றானே,
இங்கே வந்து தவறு செய்கின்றானே”, என்று எண்ண வேண்டாம்.
அந்தத் தவறிலிருந்து அவன் மீளவேண்டும் என்று நாம் எண்ணினால், அந்த தவறிலிருந்து நாமும் மீள்வோம்.


அது இல்லாது, அவன் தவறு செய்கின்றான் என்றால், அவன் வழிக்கே இங்கே கூட்டம் பெருகும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா!
இதைத்தான் நாம் பெருக்க முடியுமே தவிர,
சாமியைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவீர்கள்.
ஆக, அவன் பெற வேண்டுமென்ற நிலைக்கே நாம் வர வேண்டும்.


இருப்பது குறைந்த காலம். அவர் தவறிலிருந்து விடுபட வேண்டுமென்றால், அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை, நமக்குள் பருக வேண்டும். இதைப் பருகும் சந்தர்ப்பம், எத்தகைய தீமை வருகின்றதோ, தீமையிலிருந்து விடுபடும் எண்னம், மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று, நாம் எண்ண வேண்டும். இதை எண்ணினால், நாம் அங்கே செல்கின்றோம்.


ஆகவே, யாம் இதை, பலகாலம், பல இன்னல்களுக்கு மத்தியில்தான் அறிய முடிந்தது. உங்களுக்குள் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபடுவதற்குத்தான், அந்தச் சக்தியைக் கொடுப்பது.


“இன்னல் எப்படித் தாக்குகின்றது. “இன்னல் எப்படி, மனிதனைத் தீமையான செயலுக்கு மாற்றுகின்றது” என்று அறிந்த நிலைகளில், நல்லவர்களை, தீமையான செயல்களுக்கு அழைத்துச் செல்கின்றது. அந்தத் தீமையிலிருந்து நீங்கள் விடுபட, மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்காதத்தான், இதைச் சொல்வது.


ஆகையினாலே, இங்கே, நீங்கள் வந்த நிலைகள், உங்களுக்கு இந்த அருள் சக்தி கிடைக்கச் செய்தோம். அனாவசியமாகச் சொன்னது என்று எண்ண வேண்டாம்.
மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையாக,
நீங்கள் எந்த விருப்பத்திற்கு வந்தீர்களோ,
அந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு
உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.


மீண்டும் நினைவுபடுத்தினால் எல்லாமே கிடைக்கும் “ஓம் ஈஸ்வரா குருதேவா!”


“தாயற்ற குழந்தையை “தாயாக”, தான் வளர்க்க,
தாய்க்குகந்த சக்தியே, தரணியின் இயக்கமென்று
தன் ஞானத்தின் தத்துவத்தில் மூவுலகை
ஆட்டுவிக்கும் மூலசக்தியை
மூகாம்பிகை சக்தியாக பூஜித்த ரிஷி-
கோலமாமகரிஷியே!!”
-ஞானகுரு


மூன்று சக்தியென மூல ஞானம் கொடுத்த, கோலமாமகரிஷியே!!”
முழுமை பெற்ற, அருள்ஞானம் பெற்றிட அருள்வாயே!!
முழுமை பெற்ற, அருள்ஞானம் பெற்றிட அருள்வாயே!!
-ஞானகுரு