நட்சத்திரம் இவ்வாறு சுழன்று
வளர்ந்து வரப்படும் பொழுது,
பேரண்டத்தில் தனக்குள்
ஈர்த்துக் கொண்ட சக்தியை,
சிறுகச் சிறுக தனக்குள்
சேர்த்து,
எடை கூடிய நிலைகள் கொண்டு,
பாதரசமாக உருவாகும் சக்தி
பெறுகின்றது.
அவ்வாறு சக்தி பெற்று, முழுமை அடைந்ததுதான் “சூரியன்”.
6. சூரிய பிரபஞ்சம் உருவாகும் நிலை
சூரியன் தன் சுழற்சியில்
வெளிப்படுத்தும் பொழுது,
தனக்குள் விளைந்த பாதரசத்தின் தன்மை கொண்டு,
தான் கவர்ந்த அனைத்திலும் மோதி,
வெப்பமாக்கி, விஷத்தைப்
பிரிக்கின்றது.
ஈர்க்கும் காந்தம் உருவாகின்றது.
பேரண்டத்தில், மற்றதோடு
மோதும் பொழுது ஏற்படும் வெப்பமே, சூரியனுக்கு வெளிப்புறமாகத் தோன்றுகின்றது.
அவ்வாறு, வெளிப்படுத்தும்
இந்த சத்தின் தன்மைகள், அது பரவி
பல சத்தின் தன்மைகள்
ஒன்றுக்கொன்று மோதி,
பல அணுக்களின், பல
உணர்வின் சத்துகள்
ஒன்றுடன் ஒன்று கலந்து, அது
கலக்கப்படும் பொழுது,
அதற்குள் சேர்த்துக் கொண்ட
நிலைகளுக்கொப்ப,
கோள்களாக உருவாகி,
சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில்
சுழலச் செய்கின்றது.
ஆதியில் ஒரு நீரின் சத்து, தனக்குள், தனக்குள்
பல அணுக்களின் தன்மை வளர்த்து, எப்படி ஒரு பரமாகி வந்ததோ, அதைப் போன்று, தன் உடலில்
ஆற்றல் மிக்க நிலைகள் வளர்ந்து, சூரியனாக வளர்ந்தபின், அது
வெளிப்படுத்தும், இந்த அணுக்களின் சக்தி, ஒன்றுடன் ஒன்று இணைந்து, கோள்களாக உருவாகின்றது.
அந்தக் கோள்களின் வளர்ச்சி,
சூரியனின் அமைப்பிலேயே
வளரப்படும் பொழுது,
நட்சத்திரங்களாக விளைந்து, விரிவடைகின்றது.
நட்சத்திரங்கள், பிற
மண்டலங்களிலிருந்து அது கவர்ந்து, அதனுடைய
பால்வெளி மண்டலங்களாக அமைத்து, தூசிகளாக
மாற்றுகின்றது. அந்தத்
தூசிகளை, சூரியன் தனக்குள் இழுக்கப்படும் பொழுது,
இடைமறித்து, தனக்குள் கவர்ந்து
கொண்டு, வளர்ச்சி பெற்றது கோள்கள். அப்படி வளர்ச்சி அடைந்ததுதான், நமது பூமியும், செவ்வாய், புதன், வியாழன் போன்ற மற்ற
கோள்களும்.
இப்படி, நமது சூரியன், தனது உணவாக
எடுத்து வளரும் நிலைகளில் பிரபஞ்சத்தை உருவாக்கும் முதல் “கடவுள்” ஆகின்றது. அதனைத்தான்
“நாராயணன்” என்று பெயரை
வைத்தனர் மகரிஷிகள்.
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெறும் பொழுது “சர்வேஸ்வரன்” என்று காரணப்
பெயரை வைத்தார்கள்.
“கடவுள் என்ற தன்மையில், தனித்து எதுவும் வளர்ந்ததில்லை, வாழ்வதில்லை, வாழப்போவதும் இல்லை”
எதனின் உணர்வுகள் அதனுள்
கவர்ந்ததோ, பாதரசமாக உருவாகின்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் இந்தப் பாதரசம், மற்றதோடு
மோதும்பொழுது, அதிலே வரும் விஷத்தன்மையைப் பிரித்து, தூசிகளாக மாறும் பொழுதுதான். (இப்பொழுது நாம் காணும்)
ஒன்றுடன் ஒன்று மோதி, மின் அணுக்களாக மாறுகின்றது.
கோள்களாக வரப்படும் பொழுது, நடுமையத்தில்
ஏற்படும் வெப்பத்தால், அது கவரும் ஒவ்வொன்றையும்,
பாறைப் படிவங்களாகவும், மற்ற தாதுப் பொருள்களாகவும் உருப் பெறச் செய்கின்றது.
சுழற்சியின்
வேகத்தில், வெப்பம் அதிகமாகி, அது எடுத்துக்
கொண்ட பொருள்கள் அனைத்தும், உருகச்செய்து, எல்லா உலோகப்
படிவங்களையும் உருகச்செய்து, அமிலமாக்குகின்றது. கோள்
நட்சத்திரமாகின்றது.
அவ்வாறு நட்சத்திரம் ஆன பின்,
அதன் சுயேச்சையான ஒளி, எதனுள்ளும்
ஊடுருவுகின்றது.
ஆனால், இதற்குள் எதுவும்
ஊடுருவுவது கடினமாகின்றது.
இப்படி திரவ சக்தியாகி
(அமிலங்களாகி),
நடு மையம் திடப் பொருளாகி
விடுவதும் உண்டு. இப்படி,
அதாவது சில பூமிகளில், நடு மையம்
வெப்பத்தில் திரவமாகி,
மேலே பாறைகள், நீர்
நிலைகள் இருப்பது போன்று.
இந்த அமில சக்திகள், ஆவியாக வெளிப்படுத்திய நிலைகள்,
கதிரியக்கச் சக்தியாக மாறி,வளர்ச்சி பெறும் பொழுது
மறுபடியும் இறுகி, பாதரசத்தை
உருவாக்கும் பொழுது
குளிர்ச்சியாகின்றது, சூரியனாகின்றது.
சுழற்சியின் மோதலில், சூரியனின்
வெளிப்புறமே, வெப்பம் உருவாகின்றது. நாம் வெயிலாகக் காண்பதும் அதுதான். மற்ற கோள்களின்
சுழற்சியில், சூரியனின் நிலைகள் தாக்கப்படும் பொழுது, இரவிலே
வெளிச்சமாக, மின் அணுக்களாகத் தெரிகின்றது.
சூரியனானபின், அதன் வரிசை
அமைப்பில் இது எப்படி கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனானதோ,
அதைப் போல கூட்டமைப்பின்
தன்மை கொண்டு,
தன் ஈர்ப்பு வட்டத்தில் 27 நட்சத்திரங்களும்,
அதைத் தொடர்ந்து நவக் கோள்களும்,
அந்த கோள்களுக்கு உப
கோள்களும் அமைத்து, இப்படி
ஓர் “பிரபஞ்சம்” (சூரிய குடும்பம்) என்ற நிலைகள்
அடைகின்றது.
இது எப்படி ஒரு சூரியக் குடும்பமாக விளைந்ததோ, இதைப் போன்று, பேரண்டத்தில்
எண்ணிலடங்கா சூரியக் குடும்பங்கள் உருவாகி இருக்கின்றன.
இப்பொழுது நமது சூரிய
குடும்பம் ஒரு பிரபஞ்சமாக, 27 நட்சத்திரம், நவ கோள்களும், உப
கோள்களும் கொண்டிருப்பதைப் போன்று, 2000 சூரிய குடும்பங்கள், ஒன்றை
ஒன்று தழுவிய நிலையில் இயங்கிக் கொண்டு உள்ளன.