ஓம் ஈஸ்வரா குருதேவா.
உலக மக்கள் அனைவரும் "பிறவியில்லா நிலை" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
ஒரு அன்பான வேண்டுகோள்
இதைப் படித்துக் கொண்டிருப்போரும், இந்த தியானத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்போரும், “E mail” மூலமாக சாமிகளின் முக்கியமான உபதேசங்களை, தினசரி பெறலாம். விருப்பமுள்ளவர்கள் தங்கள் E mail IDஐ, கீழ்கண்ட ID ல் தொடர்பு கொள்ளலாம். வேறு விபரங்களுக்கும் அணுகலாம்.
Pl
inform this to your all well wishers (relatives and friends) all over
this world. If they want this “Upathaesam” pl give their E mail ids
also.
tahileswaran@gmail.com
Thursday, August 9, 2012
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் இணைக்கும் நிலை
1. முப்பெரும்
காண்டங்கள்
முக்காலத்தையும் அறிந்த ஞானிகள், “முந்தைய செயலால் இன்றைய மனித சரீரம்” என்று
பெற்ற மனிதனின், இன்றைய செயல், எப்படி
இருக்க வேண்டும்? என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக,
உயிரணுவின் வளர்ச்சியைக் காண்டங்களாகப்
பிரித்தார்கள்.
அறுபது வருடம், ஒரு காண்டம். இந்த அறுபது வருடங்களில், ஊர்வன,
பறப்பனவாகப் பல கோடி சரீரங்களைப் பெற்று, இன்று உயிர் மிருக நிலைகளிலிருந்து, மனிதனாக
உருவாக்கிய நிலைகள் கொண்டது, ஒரு காண்டம். இது முதல்
காண்டம்.
அறுபது நொடிகள் கொண்டது, ஒரு நிமிடம். அறுபது நிமிடங்கள் கொண்டது, ஒரு
மணி என்று கணக்கிடுகிறார்கள். இராகு, கேது போன்றவைகள்,
விஷத்தன்மையால் இயங்குவது என்பதைக் காரணம் காட்டி, அவைகளை ஒதுக்கி விட்டு, மற்ற கிரகங்களின்
பெயர்களை, நாட்களுக்குச் சூட்டி, ஏழு நாள் கொண்டது, ஒரு வாரம் என்றார்கள்.
மற்றும் 27 நட்சத்திரங்களின், அடிப்படையில்
மாதங்களை வைத்தனர்.
இதனின் அடிப்படையில், பிற்காலத்தவர்கள் தங்கள் மதங்களுக்கு ஏற்றவாறு, சட்டங்களையும், சாஸ்திரங்களையும் மாற்றிக்
கொண்டார்கள். 27 நாட்களைக் கூட்டி, வருடங்களாகவும், வருடங்கள் முடியும் பொழுது,
எதில் தொடங்கியதோ,
மறுபடியும் அதிலிருந்தே தொடங்குகின்றது.
இவ்வாறு, இந்த அறுபது வருடங்களில், உயிரில் உணர்வின்
மாற்றங்கள் விளைந்து, மனிதனாகும் நிலை பெறுவதை, முதல் காண்டமாக உணர்த்தி, இந்த மனித
சரீரத்தில் வாழ்கின்ற வாழ்க்கையை, இரண்டாவது காண்டமாகக்
காண்பித்தனர், ஞானிகள்.
யானையின் சிரசை மனித உடலில்
பொருத்தி, மிருக நிலையிலிருந்து மனித சரீரத்தைப் பெற்றோம் என்று,
இதை முதல் காண்டமாகக் காண்பித்து, வினைகளுக்கெல்லாம்
நாயகனாக, விநாயகனாக, மனித
சரீரத்தை உருவாக்கியது உயிர்.
மனித உடலில் கணங்கள் அனைத்தையும்
இயக்குவது, உயிர்தான். கணங்களுக்கு அதிபதியாக இருப்பதும், உயிர். இந்த உயிரால், அனைத்தையும் செயலாக்கும்
ஆற்றலாக, மனித உடலைப் பெற்றோம் என்பதை, விநாயகர் தத்துவம் மூலம் நமக்கு நினைவுபடுத்தி, நிகழ்காலமான இந்த இரண்டாவது காண்டத்தில்தான், மனிதன்
தீமைகளை வென்று, உணர்வினை ஒளியாக்கும் திறனைப்
பெற்றிருக்கிறான், என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.
மனித உயிரான்மா, அழியா ஒளிச்சரீரம் பெறுவது மூன்றாவது காண்டம். அது என்றும் நிலையானது. காலவரம்பற்றது.
ஆக, இறந்த
காலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்று, முக்காலங்களையும் ஞானிகள் நமக்குக் காண்பித்து,
ஐந்து புலனறிவு, ஆறாக இயங்கும், இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம், என
உணர்த்தியுள்ளார்கள்.
நன்மை, தீமைகளை அறிந்துணர்ந்து, தீமைகளை அகற்றி,
நன்மைகளைப் பெருக்கிடும் நிலைகள் கொண்டது, நமது நிகழ்காலம் எனக் காண்பித்து, ஆறு
புலனறிவு கொண்ட நிகழ்காலத்திலிருந்து, மீண்டும் ஐந்து
புலனறிவு கொண்ட உயிரினப் பிறவிக்குச் சென்றிடாமல், ஏழாவது
நிலையான உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறும் உணர்வாகச்
சேர்த்து, சப்தரிஷி என்ற நிலை பெறுவதே, மூன்றாவது காண்டம் என உரைத்தனர் ஞானிகள்.
ஞானிகள், இப்புவுலகில் வாழ்ந்த காலத்தில், விண்ணின்
ஆற்றலை தனக்குள் சேர்த்து, உணர்வினை ஒளியாக மாற்றி,
இரண்டாவது காண்டத்தை நிறைவு செய்து, மூன்றாவது
காண்டமாக, சப்தரிஷி மண்டலங்களாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அவர்களிடமிருந்து வெளிப்படும்
உணர்வின் அலைகள், இன்றும் நமது பூமியில், படர்ந்து, பரவிக் கொண்டுள்ளன. அதனை நாம்
கவர்தல் வேண்டும். ஆகவே, முந்தைய செயல் இன்றைய சரீரம்,
இன்றைய செயல் நாளைய சரீரம் என்பது ஞானிகள் உணர்த்தியது.
நிகழ்காலமான இரண்டாவது காண்டத்தில், மனிதச் சரீரத்தில்
இருக்கும் பொழுது நமது வாழ்க்கையின் நிலைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற நிலைகளை
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டாவது காண்டத்தில், நமக்கு அறுபது வயது
ஆகிவிட்டால், “மணி விழா” கொண்டாடுகின்றோம். மனிதனாகப் பிறந்து வளர்ந்து, அறுபதாவது
வருடத்தைத் தொட்டுவிட்டோம் என்றுதான், மகிழ்ந்து விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
ஆனால், இந்த அறுபதுக்குள் எத்தனை வேதனைகளை, எத்தனை
சோதனைகளைச் சந்தித்திருப்போம். குழந்தைகளை ஈன்று, அவர்கள் வாழ்க்கைக்கு வழியமைத்து,
அவர்களை நல்நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தனை பாடுபட்டிருப்போம்.
ஆனால், அந்த குழந்தைகளில் ஒருவர் வளர்ந்து, வாலிப
வயதில் தவறான வழியில் செல்லும்பொழுது, அவரைத் திருத்துவதற்காக, அவருடைய தவறுகளைச் சுட்டிக்
காட்டி, கண்டிக்க முற்பட்டால் போதும், அவர் உடனே நம்மை எதிர்த்து, “நீ ஏன் என்னைப்
பெற்றெடுத்தாய், நான் கேட்பதைச் செய்து கொடு” என்று சண்டைக்கு நிற்பார். இத்தகைய சோதனைகளை
எல்லாம், நமது அறுபதிற்குள் சந்தித்திருப்போம்.
வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து, அறுபதைத் தொடும்பொழுது
அதை விழாவாக, எல்லோரும் கொண்டாடி போற்றுகின்றனர்.
“குழந்தைகளைக் காத்து வளர்ப்பது, அவர்களுக்கு நல்லறிவை
ஊட்டுவது, கல்வி மற்றும் தொழில்களை அமைத்து கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது” போன்ற
தன்னுடைய கடமைகளை முடிக்கும்பொழுது வயது அறுபது
ஆகிவிடுகின்றது.
அடுத்த காண்டத்திற்கு வரும்பொழுது, நாம் எப்படித்
தீமைகளை நீக்க வேண்டும்? எந்த வழிமுறையினை நாம் பின்பற்ற வேண்டும்? என்பதை அறிந்துணர்ந்து,
நாம் மூன்றாவது காண்டத்திற்கு வரவேண்டும். மூன்றாவது காண்டத்திற்கு எப்படிச் செல்ல
வேண்டும்? என்பதைத்தான், விநாயகர் தத்துவத்தின் மூலம் உணர்த்தியுள்ளார்கள், ஞானிகள்.
விநாயகர் தத்துவத்தில், “முந்தைய செயல்களால் இன்றைய
சரீரம், இன்றைய செயல்களால் நாளைய சரீரம்” என்பதை உணர்த்தி, மனிதனின் ஆறாவாது அறிவின்
தன்மை, மனிதரிடத்தில் நன்மை, தீமைகளை உணர்த்தி, தீமைகளை அகற்றி, நன்மைகளைப் பெருக்கிடும்
ஆற்றல் கொண்டது.
ஆகையால், முருகன் என்பது ஆறாவது அறிவு. “முருகு”
என்பது எதையும் மாற்றியமைக்கும் தன்மை வாய்ந்தது. மனிதர்கள் தமது ஆறாவது அறிவின் துணை
கொண்டு, எதையும் உருவாக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதை, ஞானிகள் நமக்கு உணர்த்துகின்றனர்.
நமது மனித வாழ்க்கையில், தனக்குள் விண்ணின் ஆற்றலைப்
பெற்று, வளர்த்து, இன்று ஒளிச்சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், சப்தரிஷிகளின்
அருள் உணர்வுகளை நம்முள் சேர்த்து, நம்மில் உள்ள நஞ்சினை நீக்கி, உயிருடன் ஒன்றும்
உணர்வினை ஒளியின் உணர்வாகச் சேர்க்கும் நிலையை, நமக்கு அமைத்துக் கொடுத்தார்கள் ஞானிகள்.
இந்த நிகழ்காலத்தை, மனிதச் சரீரத்தில் வாழும் காலத்தை
இரண்டாவது காண்டம் என்று கூறினாலும், இந்த மனிதச் சரீரத்தில் வாழும் காலத்தில், மற்றொரு
காண்டமும் வருகின்றது.
இரண்டாவது காண்டமான, இந்த மனித வாழ்க்கைக் காலத்தில், அறுபது
வயதிற்குள், குடும்பப் பாரம் என்று ஏராளமான சோதனைகள்,
கொடுக்கல், வாங்கல் போன்ற நிலையில் ஏராளமான நஷ்டம், உடலில்,
நோயின் வேதனை போன்றவைகளால், மனிதரிடத்தில் வேதனைகள்
சூழ்ந்து விடுகின்றது.
அறுபது வயதில், குடும்பப் பொறுப்புகள் முழுமையானபின், வேதனை,
வெறுப்பு, குரோதம் போன்றவைகளை மறந்து,
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வுக்கு நாம்
வரவேண்டும்.
ஆனால், நாம் அறுபதைத் தொட்டு, மணி விழாவைக் கொண்டாடி
அமரும் பொழுது, நமது உயிரை மறந்துவிடுகின்றோம்.
ஆரம்பத்திலிருந்து பாசத்துடன் வளர்ந்த, வளர்த்த உணர்வுகளை
எண்ணி, “நான் அந்தக் காலத்தில் உழைத்துச் சம்பாதித்தேன்,
“இப்படிச் சம்பாதித்தேன், அப்படிச்
சம்பாதித்தேன்” என்று பழங்கதைகளைப் பேசி, அதனின் உணர்வை வளர்க்கும் பொழுது, அசுரச்
சக்திகளே நமக்குள் வளர்கின்றன.
இது போன்ற நிலைகளிலிருந்து, மனிதர்கள் மீள வேண்டும். ஆக, மனிதன் மூன்றாவது
காண்டமாக, மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து,
உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால், அடுத்து,
பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்,
என்று ஞானிகள் தெளிவாக, மூன்று காண்டங்களையும்
காண்பித்துள்ளார்கள்.
வெப்பம், காந்தம், விஷம் என்பதும் மூன்று காண்டம்தான்.
மூன்றும் ஒன்றாகச் சேர்த்து, இயக்கச் சக்தியின் அணுவாக
மாறுகின்றது. நமது உயிர், புழு முதல் கொண்டு பல்வேறு
சரீரங்களைப் பெற்று, இன்று மனித சரீரத்தைப் பெற்றாலும்,
இந்த மனித சரீரத்தில், இருள் நீக்கிப்
பொருள் காணும் நிலையாக, நமது வாழ்க்கையை அமைத்துக்
கொண்டால்தான், நமது உயிரான்மா ஒளியின் தன்மை பெறும்.
மகரிஷிகளின் அருள் உணர்வை, நாம் கவர்ந்து, நமக்குள் ஒளிச் சுடராக
மாற்றும் நிலையைத்தான், நமது இன்றைய செயல்களாக அமைத்து,
நாளைய சரீரமாக, நமது உயிரான்மாவை,
ஒளிச் சரீரம் பெறச் செய்யவேண்டும்.
2. நம் உயிரின் இயக்கம்
நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை
நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது, நமது உயிர்
எலெக்ட்ரிக், நாம்
நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி, எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது .
அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்முள்
எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்
என்ற நிலையில், நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும்.
அப்படிப்பட்ட நம் உயிர், உடலில் புருவ மத்தியில்
இருந்து, இயங்கிக் கொண்டுள்ளது. நமது உயிர் ஒன்றுதான், நமக்குச் சொந்தமானது. இந்த உடல்
உயிரால் உருவாக்கப்பட்டதுதான். நமது உயிர், நாம் நுகரும் உணர்வுகளை (நாம் சுவாசிக்கும்
உணர்வுகள்) அணுவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது, அந்த அணுவின் மலம்தான் உடலாகின்றது.
உயிர்
சந்தர்ப்பவசத்தால், உடலை விட்டுப்
பிரியும் நேரம், உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் (பூமியின் காற்று மண்டலத்தில்)
கலந்து, சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை, உணர்வுகள்
மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால், உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து, புரிந்து, உணர்ந்து, முதல் பாடமாக நமக்குள் பதிய
வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.
3.மகரிஷிகள், ஞானிகள் பெற்ற நிலை
உயிரின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின்
இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் ஆற்றலைப் பெற்றவர்கள், உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரம்
பெற்றவர்கள்தான், நமது மெய்ஞானிகள். அவர்கள் அனைவரும், நம்மைப் போன்று, இந்த பூமியில்
மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான்.
அவர்கள், தம் உணர்வுகள் அனைத்தையும் உயிரோடு ஒன்றச் செய்து,
ஒளியாக மாற்றி, அழியாத நிலையாக, வேகா நிலை என்னும் நிலை அடைந்து, என்றும் பதினாறு என்று,
கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றி, ரிஷி, ரிஷிபத்தினி என்று குடும்பங்களாக, ஒளி உடல் பெற்று,
இன்றும், நம் பூமியின் வடக்குப் பகுதியில், விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும், அதைப்
பின்பற்றியவர்கள் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாகவும்,
ஏகாந்த நிலைகள் கொண்டு, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
4. நாம் அடைய வேண்டிய நிலை
மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய
வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான்,
நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால்,
நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில்
வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும்
வாழலாம்.
இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக்
காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம்,
உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே
ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,
அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே,
உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு.
இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள்.
5. தியானம் என்றால் என்ன?
இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஞானிகள்,
மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த, ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப்
புலனறிவால் கவரப்பட்டு, இன்றும், நமக்கு முன்னால், இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது.
அந்த அருள் சக்திகளை, நாம் பெறும், நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.
மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே
பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து, அதை சமைத்து, விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை, நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும், இந்த தியானம்தான்.
நம்மிலே பலர், தியானம் என்றாலே, மனதை ஒருநிலைப்படுத்த
முடியவில்லை (concentration), என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், மனதை ஒரு
நிலைப்படுத்துவதற்காகவும், அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள்
வளர்ப்பதற்காகவும் தான், நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.
மேலும், இந்த தியானத்தையும் ஆத்ம சுத்தியையும்,
நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளை சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ,
கேட்கின்றோமோ, அப்பொழுது கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து, அவ்வப் பொழுது
நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான், இந்த தியானம்.
இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும்
பொழுது, அந்த மகரிஷிகள்பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும்.
நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது, அகண்ட அண்டத்தில் வரும், எத்தகைய தீமைகளிலிருந்தும்
நாம் விடுபட முடியும். பிறவியில்லா நிலை அடைய முடியும்.
6. தியானிக்கும் முறை
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில்
உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின், தாய்
தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.
அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ
நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.
இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை,
துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி, நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி நுகர வேண்டும்.
இப்பதிவின் துணை
கொண்டு, மீண்டும் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த
நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி, நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச்
செய்யவேண்டும்.
மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக
அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள
வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும். அத்தகைய துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து
அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.