Pages

அப்பனோ.. சித்தனோ..

கோனேரி ராஜபுரம் ஒரு தலை சிறந்த கோவில். மூலவர் பெயர் பூமி நாதர் ஆனால் இங்கு சிறப்பு நடராஜர் தான். இங்கு நடராஜர் சுயம்பு மூர்த்தி ஆக உள்ளார் அதுவும் எட்டு அடியில். அத்தனை அழகான கலை நயம் மிக்க ஒரு நடராஜா சிலையை நான் கண்டதில்லை. இந்த சிற்பத்தின் வரலாறு ஆயிரம் வருடத்திற்கு முன்பானது, செம்பியன் தேவி காலத்தை சேர்ந்தது. சோழ மன்னன் ஒரு பெரிய நடராஜர் சிலையை செய்ய விரும்பினான் திருநல்லம் என்ற பெயர் உடைய இந்த கோ
விலில். இதற்கு நியமிக்க பட்ட சிற்பி எத்துனை முயன்றும் சிலை வடிக்க முடியவில்லை. இதனை அறிந்த மன்னன் சினம் உற்றான். குறிப்பிட்ட தேதியில் சிலை வடிக்க முடியாவிட்டால் சிற்பியின் தலையை கொயதுவிடுவதாக ஆணையும் இட்டான். கடைசி தேதியும் வந்தது ஆனால் சிலை முடிந்த ஆகவில்லை. சிற்பி மிகுந்த கவலையுடன்
திரவ உலோகங்களை பார்த்தபடியே இருந்தான். அன்று இரவு ஒரு வயோதிக தம்பதிகள் அங்கு வந்தனர் . அந்த தம்பதிகள் சிற்பியிடம் குடிக்க நீர் கேட்டனர். சிர்பியோ விரக்தியுடம் அய்யா அம்மா என்னிடிம் இந்த உலோக குழம்பை தவிர வேறு எதுவும் இல்லை. உடேனே இருவரும் லோகத்தை குடித்தனர் அதில் ஆண் நடராஜர் ஆகவும் பெண் அம்பாள் ஆகவும் உரு பெற்றனர்.

மறுநாள் வந்த மன்னன் சிற்பி கூறிய உண்மையை நம்பாமல் சிலையின் கலை உளியால் சோதனை செய்தான். அதில் இருந்து வந்த ரத்தம் மன்னன் மேல் தெறித்து குட்டம் பரவியுது. இறைவன் ஆணை படி மன்னன் ஒரு விதய லிங்கம் பிரதிஸ்டை செய்த பிறகே அவன் உடல் செரியானுது

வந்தது அப்பனோ சித்தனோ ....
நானூறு வருடுங்களுக்கு மும் பழைய வரை படங்களை எங்கும் காணலாம். அதில் சில இங்கே..