Pages

வானவியல்

 

1. கடவுள் என்ற தன்மையும், அணுவின் இயக்கங்களின்
காரணப் பெயர்களும்
ஆதியிலே, அகண்ட அண்டம் இருண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அதாவது, சூரியனோ, கோள்களோ எதுவுமே இல்லாத இருண்ட பேரண்டம். அத்தகைய பேரண்டத்தில்,
சிறுகச் சிறுக வெப்பமாகி,
வெப்பத்தால் ஆவியின் தன்மை அடைந்து,
ஆவியின் தன்மை, நாளடைவில் விஷத் தன்மையாக மாறுகின்றது.


இயற்கையில் விளைந்த நிலைகள். உதாரணமாக, இன்று ஒரு வீட்டை நாம் மூடிவிட்டோமென்றால், மூடிய வீட்டிற்குள் வெப்பங்கள் வரும். ஆவியின் நிலைகள் காற்றாக மாறும்.


நாளடைவில் அடர்த்தி அதிகமாகும் பொழுது, அது விஷமாக மாறுகின்றது. அந்தப் பூட்டிய வீட்டிற்குள் சென்ற பின், அதில் வரும் நெடியை, நாம் சுவாசித்தபின் தும்முகின்றோம். நம்மையறியாமலேயே, அது இயக்குகின்றது.


இதைப் போன்று, இயற்கையில் அகண்ட பேரண்டம், இருண்ட நிலையை இருக்கப்படும் பொழுது,
வெப்பத்தின் தன்மை முதலில் உருவாகின்றது,
ஆவியாக மாறுகின்றது,
நாளடைவில் ஆவி, நஞ்சாக (விஷம்) மாறுகின்றது.
விஷத்தின் தன்மை அடர்த்தியாகும் பொழுது
முதல் நிலை ஆகும் வெப்பத்தினால் ஏற்படும், ஆவியின் தன்மைகளுடன் கலக்கப்படும் பொழுது,
இந்த விஷம் தாக்கி, மீண்டும் வெப்பமாகி, நகர்ந்தோடும் தன்மை பெறுகின்றது.
விஷத்தின் தாக்குதலால் வெப்பமடைந்து,
அணுக்களாக சிதறி ஓடுகின்றது.
சிதறி ஓடும் பொழுது, ஈர்க்கும் சக்தி வளர்ச்சி பெற்று,
அணுக்களாக உருவாகின்றது.


இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பொருளைக் கண்டுபிடித்து, பின் அந்த பொருளுக்கு தக்கவாறு, எவ்வாறு பெயர் வைத்து அழைக்கின்றனரோ, இதைப் போன்று மகரிஷிகள், இயற்கையில் விளைந்த சக்தியின் நிலைகளை, தனக்குள் கண்டுணர்ந்து காரணப் பெயரிட்டு அழைத்தனர்.


விஷத்தை “ஆதிசக்தி” என்றும்
தாக்குதலால் ஏற்படும் வெப்பத்தை “ஆதிபராசக்தி என்றும்,
வெப்பத்தால் உருவாகும்,
ஈர்க்கும் சக்தி காந்த சக்தியை “ஆதிலட்சுமி” என்றும்
காரணப் பெயரிட்டு அழைத்தனர் மகரிஷிகள்.