Pages

2. பரப்பிரம்மம், காயத்ரி


      ஆங்காங்கு
, அகண்ட அண்டத்தில்,
மேலும் வெப்பத்தினால் உருவாகும் நிலைகள்,
மற்ற மற்ற விஷமாக மாறிய நிலைகள்,
பல உணர்வுகள், பல சுவை கொண்டதாக வெளிப்படுகின்றது.
இதைப் போன்று, புதிது, புதிதாக உருபெறும் பற்பல ஆவிகள்,
ஒவ்வொரு விதமான நிலைகளில் உருவாகும் அந்த சக்தியினை,
ணுக்கள் கவர்ந்து அதனதன் வலுவாக இயக்கத் தொடங்குகின்றன.
அதாவது விஷம், வெப்பம், காந்தம் என்ற மூன்றென்ற அந்த நிலை அடையும் அணுக்கள்,
ஆங்காங்கு உருவாகும் உணர்வின் சத்தை, தனக்குள் கவர்ந்தால்,
காந்தம் இழுத்து, வெப்பத்துடன் இணைக்கப்படும் பொழுது,
விஷத்தால் உணர்ச்சிகளை இயக்கும் தன்மை வருகின்றது.
அப்பொழுது, ஓர் அணுத் தன்மையின் இயக்கச் சக்தியாக மாறுகின்றது. இதனை பரப்பிரம்மம் என்ற காரணப் பெயர் வைத்து அழைத்தனர்.
தன்னுடன் இணைந்து கொண்ட மணத்தை, விஷம் இயக்கி, வெளிப்படுத்தும் பொழுது,
ஞானம், சரஸ்வதி (பிரம்மாவின் மனைவி) என்று பெயரை வைத்தனர்,
விஷம் இல்லை என்றால், அந்த சத்தின் இயக்கத்தை இயக்க முடியாது. இந்த காந்தம் இழுத்து, வெப்பத்தில் மோதவில்லை என்றால், அந்த உணர்வின் தன்மை, அணுவுடன் சேர்ந்து இயக்க முடியாது.
இதை நாம் தெரிந்து கொள்வதற்காக, விஷம், வெப்பம், காந்தம் என்ற மூன்றையும் மும்மலம் என்று காரணப் பெயரிட்டு, கவர்ந்து கொண்ட உணர்வை பரப்பிரம்மம் என்று காரணப் பெயரிட்டு அழைத்தனர்.
பிரம்மம் ஆகும் பொழுது நான்கு, அதே சமயத்தில்
எந்த சத்தின் தன்மையோ, அது மணமாக வெளிப்படுத்தும் பொழுது
அதன் ஞானமாக இயக்கும், இது காயத்ரி
காயத்ரி என்றால் எந்த உணர்வினை கவர்ந்ததோ,
அதன் வலுவாக இயக்கும் என்று பொருள் புலனறிவு ஐந்து.
இதனைத்தான் காயத்ரி என்று பெண்பால் பெயரை வைத்து, அதன் சக்திகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை, சூட்சமத்தில் நடப்பதை, உருவம் அமைத்து, அருவ நிலையை அறியச் செய்தனர் மகரிஷிகள்.
அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளையும், அவர்களுக்குள் விளைந்த நிலைகள் அனைத்தையும், நாம் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக, காரணப் பெயர் வைத்தார்கள் மகரிஷிகள்.
இவ்வாறு, வான்வீதியில் இயக்க அணுக்களாக மாறும்பொழுது, உதாரணமாக, ஒரு கசப்பின் உணர்வின் தன்மை பெற்ற அணு, துவர்ப்பின் உணர்வின் தன்மை பெற்ற அணு, விஷத்தின் உணர்வின் தன்மை பெற்ற அணு,
கசப்பின் அணுவைக் கண்டபின், துவர்ப்பின் அணு இதை அணுகாது ஓடுவதும்,
ஓடும் வேகத்தில், விஷ அணுவில் மோதிய பின்,
விஷத்தின் தன்மையை தாங்காது சுழற்சியின் தன்மை அடைகின்றது.
அவ்வாறு சுழற்சியின் தன்மை அடையும் பொழுது,
அந்த கசப்பின் அணுவை தன்னுடன் இனைத்து,
மோதலில் ஏற்படும் வெப்பம், ஆவியாக மாறுவதும்,
மோதலில் ஏற்பட்ட வெப்பத்தால், மூன்றும், இரண்டறக் கலப்பதும்,
இவ்வாறு, அணுப் பரிமாணம் வித்தியாசமான நிலைகள் அடைகின்றது,
அணுக்கள் மாறுகின்றது.
கசப்பும், துவர்ப்பும், அரிப்பும் ஒன்றாகக் கலந்து ஒரு அணுப் பரிமாணம் ஆகின்றது.
இவ்வாறு ஆகும்பொழுது, தன்னில் வெப்பமாகும் நிலைகள்,
ஆவிகளாக மாறும்பொழுது, மேகங்களாக ஆகின்றது,