Pages

ஈஸ்வராய குருதேவர் ஞானகுருவிற்குக் கொடுத்த வாக்கின் (சக்தியின்) நிலை


நம் குருநாதர் என்னிடம் என்ன செய்தார்? தைப்போங்கல் அன்று, என் கடைசிப் பையன் தண்டபானியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவன் அழுது கொண்டே இருக்கின்றான்.
அந்த நேரத்தில் சாமிம்மாவோ, எம்மை ஒரு மாதிரியாகப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய அம்மாவும் அதற்கு மேல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பேசுவதைப் பார்த்து, யாம் கோபமாக இருக்கின்றோம்.
குருநாதர் எம்மிடம், “நான் சொல்வதைக் கேட்கின்றாயா, இல்லையா?” என்கிறார்.
அப்பொழுது நான் என்ன சொல்கின்றேன். “நீங்கள் கொடுத்த சக்தியும் வேண்டாம், பூராவற்றையும் எடுத்துக் கொண்டு போங்கள், என்னை ஆளை விடுங்கள்” என்று சொல்கின்றேன்.
“நான் உன்னை விடமாட்டேன்டா” என்கிறார், குருநாதர்.
அப்பொழுது, தண்டபானி ஙை..ஙை.. என்று அழுது கொண்டே இருக்கின்றான். தைப் பொங்கல் அன்று, வீட்டிலேயும் பேசுகின்றார்கள், எல்லாம் நம்மைப்பற்றி இப்படிப் பேசுகின்றார்கள்.
குருநாதர் வந்து என்ன செய்கின்றார்? “இந்தச் சக்தியை எடுடா, அதை எடுடா, இதை எடுடா” என்கிறார்.
யாம், “சாமி, என்னை ஆளை விட்டால் போதும் என்று சொன்னோம்.
“எங்கடா நான் உன்னை விடுவது?” என்று சொல்லிவிட்டு, சட்டையைப் பிடித்து என்னை இழுக்கின்றார், குருநாதர். அங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள்.
“அடப் போயா, உன் சக்தி வேண்டாம், வாங்கிட்டுப் போயா” என்று யாம் சொன்னோம்.
நான் சக்தியை “உனக்குக் கொடுத்தது, கொடுத்ததுதான். வாங்க முடியாது” என்று சொல்கின்றார் குருநாதர்.
“என்னை இப்படியும் போட்டு, அப்படியும் போட்டு இந்த மாதிரி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்களே”, என்றேன். விட்டாலும் விட்டபாடில்லை.
உனக்குக் கொடுத்தது கொடுத்ததுதான். நீ அதைச் செய்தது செய்ததுதான். நான் சொல்வதை நீ கேட்கிறேன் என்றால், நீ வந்துதான் ஆகவேண்டும். நீ வா, என்று சொல்கின்றார் குருநாதர்.
யாம் என்ன பண்ணுவது? என்னை இப்படியெல்லாம், பல வகையிலும் மாட்டினார். ஆனால், அதற்குள் மறைந்திருக்ககூடிய உண்மைகளை இப்படித் தெளிவாக்கினார், நமது குருநாதர்.