Pages

கதவைத் திற காற்று வரட்டும்

வாழ்க்கை என்பது பகலில் ஆரம்பித்து பகலிலேயே முடிந்து விடுவது இல்லை. நிலா வரும் ராத்திரியும் சேர்த்து தான் ஒரு நாள் என்பது போல…. ராத்திரி இன்பமும் முக்கியமான ஒன்றாகும். கருத்தொருமித்த தம்பதிகளுக்கு… யாருக்கு எதில் விருப்பம்? என்ன ருசி? என்ன நாட்டம். என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். கணவனுக்கு ஸ்வீட்டில் ஜாங்கிரி பிடிக்கும். புளி சாதம் என்றால் மூன்று வேளையும் அதையே கொண்டா என்பார்… என்றெல்லாம் அறிந்து வைத்திருக்கும் மனைவி, இரவு வாழ்க்கையில் கணவனுக்கு என்ன விருப்பம் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனைவிக்கு மெரூன் கலர் புடவை என்றால் அலாதி ஆசை, மனைவிக்கு கை சிவக்க மருதாணி போட்டுக்கொள்வதென்றால் சாப்பாடு கூட வேண்டாம் என்று தெரிந்து வைத்திருக்கும் கணவன் படுக்கையறையில் மனைவியின் ஆவலை பூர்த்தி செய்வதில் தோற்றுவிடக் கூடாது. ஆணுக்குள் பெண் தன்மையும், பெண்ணுக்குள் ஆண் தன்மையும் ஒளிந்திருக்கிறது. உடல் உறவின் போது ஆணிலுள்ள பெண் தன்மை பெண்ணையும், பெண்ணிலுள்ள ஆண் தன்மை ஆணையும் தூண்டப்படுவது தான் விளையாட்டு. எந்த இடத்தைத் தொட்டால் மனைவியின் உணர்ச்சி பொங்குகிறதோ… அதனை புரிந்து கொண்டு கணவன் செயல்பட்டால் இனிக்காதா இல்லறம்?
இதற்கு தேவை…. நாம் முன்பே சொன்னபடி தம்பதியிடையே கருத்தொருமித்தல். அன்பான ஆதரவு. பரஸ்பரம் இருவருக்கும் இடையேயான நம்பிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக இருவருக்கும் இடையே இருக்கும் உண்மைத் தன்மை. இவை தான் அழகான, அன்பான, ஆசையான இல்லறத்துக்கு அஸ்திவாரமாக அமையும். பேஸ்மென்ட் ஸ்ட்ராங்க் ஆக இருந்தால்… பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதை தம்பதிகள் இருவரும் தங்கள் ஞாபக அலமாரியில் பத்திரப்படுத்துங்கள்.