கணவனும் மனைவியும் தங்கள் இல்லற வாழ்க்கையை உன்னதமாக உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இடையே மலர்கின்ற உறவானது நிஜமானதாக இருக்க வேண்டும். அந்த நிஜமானது பரஸ்பரம் ஒருவர் மேல் மற்றவருக்கு இருக்கிற நம்பிகையின் அடிப்படையில் தான் உருவாகும்.
நம்பிக்கையின் அடிப்படையிலான உறவு பூக்க வேண்டும் என்றால், மிக மிக மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 1.கவர்ச்சி 2.அன்பு 3.புரிந்து கொள்ளுதல்… என்கிற மூன்று அடிப்படைகள் தான் அவை.
கவர்ச்சி உறவு கொள்வதற்கு எப்போதும் தூண்டுகோலாக இருக்கும். உறவை வாசல் என்றால்… வாசலுக்கு தோரணம் மாதிரி தான் கவர்ச்சியும். தோரணமே வாசல் அல்ல. இதனை கணவனை விட மனைவி தான் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். சில பெண்கள் பார்க்க பளீர் என்று எரியும் விளக்கு மாதிரி இருப்பார்கள். அவர்கள் விழிகளே ஆயிரமாயிரம் பார்வைக் கவிதை எழுதும். ஆனால், அவர்கள் செக்ஸ் உறவில் கணவனுடன் அவ்வளவாக ஒத்துழைக்க மாட்டார்கள். வெறும் கவர்ச்சியுமே எந்த பலனையும் தராது. முன்பே சொன்னது போல கவர்ச்சி ஒரு தூண்டில். ஒவ்வொரு மனைவியும் தனது கணவனை உறவுக்கு அழைக்க இந்த வசீகர தூண்டில் போடும் வித்தையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
‘வாங்க.. வாங்க…’ என்று வாய் மணக்க அழைத்தால் மட்டும் போதுமா? பந்தி வைத்து பரிமாறவும் வேண்டாமா? அன்பு தான் உறவை இனிக்க வைக்கும் பரிமாறல். இனிய இல்லறம் வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண் கவர்ச்சியாக இருக்க வேண்டியதுடன், அன்பாகவும் இருக்க வேண்டும். கவர்ச்சியும் அன்பும் மட்டும் இருந்தால் உடல் உறவு முழுமையாக இருக்குமா என்றால்… மூன்றாவதாக இன்னொன்றும் அவசியம் தேவையாகிறது. அது தான் புரிந்து கொள்ளல். ஆக, ஒரு பெண் கவர்ச்சியுடன் அன்பாகவும் அதே சமயம் புரிந்து கொள்ளலுடனும் இருந்தால் தான் உறவில் திருப்தி அடைய முடியும்.
‘ஒவ்வொரு மனைவியும் கணவனுக்கு கவர்ச்சியாக விளங்க வேண்டும்’ என்று சொல்கிற போது… எப்படிப்பட்ட கவர்ச்சி என்று சில பெண்கள் குழப்பமடையலாம். சினிமாவில் காட்டுகிறார்களே அது போன்ற கவர்ச்சியா? கதைகளில் வருகிற காட்சிகளில் தெறிக்கிற கவர்ச்சியா? அல்லது இன்றைய நாட்களில் நமது வீட்டு வரவேற்பறைக்கே வந்து பெண்களை எல்லாம் வசீகரித்து வருகிற தொலைக்காட்சித் தொடர்களில் வழிகிற கவர்ச்சியா? என்று குழம்ப வேண்டாம். அரை குறை டிரெஸ்ஸ§டன் அல்லது டூபீஸ் ஆடையுடன் ஒரு பெண் இருப்பது தான் கவர்ச்சி என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் எண்ணத்தை இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள். பார்க்க பளிச் என்றும்… உங்கள் உடலுக்கேற்ற வண்ணத்தில் சுத்தமான அழகான உடை உடுத்தி, சந்தோஷம் மிதக்கும் கண்களுடன் இருப்பது தான் கவர்ச்சி.
கணவனின் துணையோடு காமனை வெல்ல வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொரு பெண்ணும்… கடைபிடிக்க வேண்டிய ஆலோசனை தான் நாம் மேலே சொன்னது.