Pages

(பக்கம் 13-14)



அனைத்தையும் வேக வைத்தவன் துருவ நட்சத்திரம். நாம் புல்லைத் தின்றோம். தழைத்தாம்புகளைத் தின்றோம். சுவை மிக்க நிலைகளில், கொழுக்கட்டையைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம்.

இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்து பார்.

உயிரால் வளர்க்கப்பட்டது, இந்த மனித உடல்,

நீ சிந்தித்துப் பார்,

என்று சொல்கின்றார்கள்.




வேதனை என்ற உணர்வை நுகரும்பொழுது, உடல் நலிவடைகின்றது. நம் உடலை உருவாக்கிய, உயிரான ஈசனுக்கு, துரோகம் செய்கின்றோம். மனிதனாக உருவாக்கிய, ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.




ஈஸ்வரன் கோவிலில் அபிஷேகம் செய்வதால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

உயிரான ஈசனிடம், வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்,

கையில் அழுக்குப் பட்டால்,

நல்ல தண்ணீரை விட்டுச் சுத்தப்படுத்துகின்ற மாதிரி,

“ஈஸ்வரா”, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், என்று இதை விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.




நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படும். அதனால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ஜீவாத்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். இது தான், நம் ஞானிகள் காட்டிய, அருள் வழி.


(பக்கம் 22-24)



ஒரு சமயம், உண்மையில் நடந்த நிகழ்ச்சியை, குருநாதர் காட்டினார். நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது, ஒரு மரத்தைச் சுற்றி இருந்த திட்டில், அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த திட்டிற்குக் கீழ், சந்தும் பொந்துமாக இருந்தது.




ஒருவன், தன் காலை ஆட்டிக் கொண்டு இருந்தான். அந்தப் பொந்திற்குள் “நல்ல பாம்பு” இருந்தது. அது அவனைத் தீண்டிவிட்டது. அது கடித்தது அவனுக்குத் தெரியவில்லை. ஏதோ பூச்சி கடித்துவிட்டது என்று இருந்துவிட்டான்.




இரண்டு மாதம் கழித்து, அதே இடத்திற்கு விளையாடச் சென்றோம். உட்கார்ந்து இருந்த இடத்திலிருந்து, பாம்பு தலையை நீட்டியது.

அன்றைக்கு, இந்த பாம்புதான் கடித்தது என்று எண்ணினான்.

அப்படியே மயங்கி விழுந்துவிட்டான்

அந்த உணர்வு வேகமாக இழுத்து, உடலில் பரவுகின்றது.

சிறு பிள்ளையாக இருந்த பொழுது, எனக்குத் தெரியாது. ஆனால், குருநாதர் நினைவுபடுத்துகின்றார்.




அன்று, திட்டு மேல் அமர்ந்து, காலை ஆட்டிக் கொண்டிருந்தான், இரண்டு, மூன்று முறை கொட்டியிருக்கின்றது. எறும்பு கடிக்கின்றது, என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், அதே இடத்தில், இரண்டு மாதம் கழித்து பாம்பை பார்த்தவுடன், இதுதான் அன்றைக்கு, நம்மைக் கடித்தது என்று எண்ணியவுடன், அப்படியே கீழே விழுந்துவிட்டான். கண்கள் நீல நிறமாகிவிட்டது. அது வரையிலும் அவனை ஒன்றுமே செய்யவில்லை. அந்த எண்ணம் வந்தவுடன், வேகமாக இழுத்து அதைச் செய்தது.




அதிலிருந்து, மேடை மேல் உட்காருவதை விட்டுவிட்டேன். நீ சிறுவனாக இருந்த பொழுது, இந்த நிகழ்ச்சி நடந்தது என்று, குருநாதர் எம்மிடம் சுட்டிக் காட்டுகின்றார். எண்ணங்களைப்பற்றிச் சொல்லும் பொழுது, இதைச் சொல்லுகின்றார்.




விபத்தான நேரங்களில் சிக்கிக் கொண்டபின், ரொம்ப பதட்டப்படுகின்றோம். அந்த நேரத்தில், ஏதாவது சந்தோஷமாக பேசிக் கொண்டு இருக்கும்பொழுது, அந்த நிகழ்ச்சியைச் சொல்ல ஆரம்பித்தால், அந்த சமயம் மயக்க நிலை வரும். உடனே, அந்த அணுக்கள் பெருக ஆரம்பிக்கும்.




பஸ்ஸில் போகும்பொழுது, விபத்துகளைப் பற்றி யாராவது சொன்னால், அதை நீங்கள் கேட்டால், அதே உணர்வுகள், காற்றில் அலையப்படும் பொழுது, பஸ் டிரைவரையும் தாக்கும்.




எப்பொழுதும் பஸ்ஸில் போகும் பொழுது, விபத்துகளைப் பற்றி பேசக்கூடாது. பேசினால், கேட்பவருக்கும் பயமாக இருக்கும். அந்த உணர்வுகள், டிரைவரையும் தாக்கும். அதே மாதிரி, பஸ்ஸில் இடம் மாறி உட்கார்ந்து கொண்டாலும், அதற்குத் தக்க விபத்தாகி, இவர்களைத் தூக்கி எறியும். அந்த உணர்வுகள், ரிமோட் (remote) செய்து கொண்டேயிருக்கும். இந்த உணர்வுகளின் இயக்கம் அப்படி, என்று குருநாதர் சொல்லுகின்றார்.

எப்படியெல்லாம் உணர்வு இருக்கின்றதோ,

அதற்குத்தக்க மாதிரி, நமது வாழ்க்கையில்

அந்த உணர்வுகள், உணர்ச்சிகளாக நம்மை மாற்றி

என்ன செய்யச் சொல்லுகின்றது.

சொன்னது, எப்படி நமக்குள் உணர்ச்சிகளாக மாறுகின்றது,

விபத்துகளில் சிக்குவதையெல்லாம், குருநாதர் காட்டுகின்றார். அதனால், பஸ்ஸில் போகும் பொழுது, விபத்துக்களைப் பற்றிப் பேசாது, நல்ல விஷயங்களைப் பற்றித்தான், பேசிக் கொண்டு போகவேண்டும்.





(பக்கம் 32,33,34)

இப்பொழுது, TV நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்கின்றார்கள். எந்த அலைவரிசை என்று தெரிந்துகொண்டு அந்த அலைவரிசையை வைத்தால், உடனே அதை எடுத்து, வேலை செய்கின்றது. அதே போன்று, நம் உடலில் ஒவ்வொரு குணங்களையும் பதிவாக்கி இருக்கின்றோம். என்னைத் திட்டினான் என்று எண்ணியவுடன், அந்த அலைவரிசை வந்தவுடன், கோபம் வரும்.




கோபமான நிலைகளில், கணக்குப் போட்டால் தப்பாக வரும். அதே சமயத்தில் வீட்டில் சண்டைக்கு போவோம். எது இருந்தாலும், அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதே சமயத்தில் கோபமாக இருந்து, இந்த மாதிரி, அவன் எனக்கு தீங்கு செய்தான் என்று எண்ணினால், அவனும் அங்கு கெடுகின்றான். அங்கு அவனுக்கு புரை ஓடும்.




பாசத்தால், பையன் லெட்டர் போடவில்லை,

என்று தாய் எண்ணி வேதனைப்பட்டால்,

அந்த வேதனையான உணர்வு, பையனைப் பாதிக்கும்.




அவன் அந்த நேரத்தில் கணக்குப் போட்டால், அந்த வேதனை, அவன் சிந்தனையைக் குறைத்து, கணக்கு தப்பாகும். கெட்ட பெயர் வாங்கி விடுவான். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றான் என்றால், என்னை எதிர்க்கின்றார்கள், என்று அங்கிருந்து லெட்டர் வரும்.




தாய் எண்ணியது, என்று அவனுக்கு தெரியாது. அதே சமயத்தில் ரோட்டில் நடந்து போகும் பொழுது, தாய் இம்மாதிரி எண்ணினால், விபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். தாயின் நினைவு இப்படி வந்துவிடும். இதையெல்லாம், நாம் மாற்ற வேண்டும்.

இதெல்லாம் காற்றில் இருக்கின்றது.

அதே சமயத்தில் ஊழ்வினை என்ற வித்தாக

நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

நாம், யாரை எண்ணுகின்றோமோ,

உடனே அது வேலை செய்யும்.

மனிதனுக்கு மனிதன், நாம் கலந்துதான் இருக்கின்றோம். யாரும் தனித்து இருக்க முடியாது.


சமுதாய அமைப்பில், மனிதன் ஒன்றோடொன்று இணைந்துதான் வாழுகின்றான். நமக்குள், நமது உடலுக்குள் எது எது எல்லாம் பதிவாகி இருக்கின்றதோ, அவைகள் இந்த காற்று மண்டலத்திலும் உண்டு.

நமது உடலுக்குள் பதிவானவைகளில்,

எதை நாம் நினைக்கின்றோமோ,

அவைகள், காற்றிலிருந்து நம் ஈர்ப்பிற்கு வந்து,

அந்த அலைகள் நம்மை இயக்கத்தான் செய்யும்.

இதுவெல்லாம், இயற்கையின் சில நியதிகள்

இந்த மாதிரி நாம் எதை எண்ணினாலும்

உடனே மாற்றுகின்ற சக்தி வேண்டும்.



இன்றைக்கு, நாம் விஞ்ஞான யுகத்தில் வாழுகிறோம். மனிதன், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில், ஏதேதோ செய்கின்றான். நமது ஞானிகள், இயற்கையின் உண்மையின் உணர்வுகளை, தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.




இதையெல்லாம் தெரிந்து கொண்டீர்களென்றால்,

நாம் எப்படி இயங்குகின்றோம்?

நமது உயிர் எப்படி இயங்குகின்றது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.



எந்த உணர்வும் நம்மை இயக்காமல், அதை நமக்கு உதவியாக மாற்றிக் கொள்வதற்கு, ஒரு சக்தி தேவை. அதற்கு சக்தி ஊட்டுவதுதான், துருவ நட்சத்திரம்.



(பக்கம் 44-46)

அகஸ்தியன் தான் பெற்ற சக்தியை, மனைவிக்குச் சொல்லுகின்றான். அது அதை க் கவர்ந்து, உயர்ந்த நிலை பெறுகின்றது.

கணவர் உணர்வுடன் இணைந்து, அது ஒன்றாகின்றது.

ஒன்றாகப்படும் பொழுதுதான்,

அந்த உணர்வின் சக்தி, அணுத்தன்மை பெறுகின்றது.

தான் பெற்ற உண்மையின் உணர்வை,

இரண்டு பேரும் சேர்ந்து, தான் பெற்ற உண்மை,

கணவன் உயரவேண்டும் என்றும்

கணவன், தன் மனைவி உயரவேண்டும் என்றும்,

கல்யாணம் ஆனபின், உண்மையை உணர்ந்து

துருவ மகரிஷியாகின்றார்கள்.




துருவ மகரிஷியாகி, சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றார்கள். எப்படிக் கணவன் மனைவி சேர்ந்தபின், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றார்களோ,

கணவன், மனைவி இரண்டு உயிரும்,

அந்த உணர்வை எடுத்து, நுகர்ந்து,

உடலுக்குள் ஒளியாக மாற்றுகின்றார்கள்.

இதுதான், எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்பது.




கணவனும் மனைவியும், வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து, நளாயினி போன்று, கணவனை உயர்த்தி எண்ணுவதும், கணவன் மனைவியை மதித்து நடப்பதும், ஆக, இரண்டு பேரும் மதித்து நடந்தால், அந்த அணுவின் தன்மை சாவித்திரியாகின்றது.




இவ்வாறு, அகஸ்தியரும் அவருடைய மனைவியும் துருவ மகரிஷியாகி, சிருஷ்டிக்கும் தன்மை பெற்று, தங்களுக்குள் உணர்வுகளை பேரொளியாக மாற்றுகின்றார்கள்.




இருவர் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள், ஈருயிரும் ஒன்றாகி, உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி, உயிருடன் ஒன்றி, இன்றும் விண்ணில் துருவ நட்சத்திரமாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.




நாம், இன்று மனித வாழ்க்கையில் கணவனும் மனைவியும் இணைந்து, குழந்தைகளை பெற்றுக் கொள்வது போல், அவர்கள் இருவரும் இணைந்து, துருவ நட்சத்திரமாகி, விண்ணில் இருந்து வரும் விஷத்தினை ஒளியாக்கி, ஒளி அணுக்களை உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.




நம் குருநாதர் விஷத்தை நீக்கி, கடைசியில் ஒளியான துருவ நட்சத்திரத்தைக் காட்டினார். எல்லாவற்றையும் நீக்கி, ஒளியானது துருவ நட்சத்திரம். நம் குருநாதரும் அதே வழியில் ஒளியானார். அதன்பின், நாம் போகும் பொழுது, அந்த உணர்வை நாம் எடுக்கின்றோம்.




அந்த உணர்வை நீங்களும் பெறவேண்டும், என்று சொல்லுகின்றோம். விரும்பி வருபவரகள், இந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றார்கள். யாம் பேசுவதை, நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். நல்லதைப் பெறவேண்டுமென்று கேட்கின்றீர்கள். உணர்வுகள் எதைச் செய்கின்றது, என்று சொல்லுகின்றோம்.

ஏற்கனவே, துருவ நட்சத்திரத்தின் உணர்வை,

எமது உணர்வுகளுக்குள், யாம் கலந்து வைத்திருக்கின்றோம்.

உங்களுக்குள் இதை கலந்து, உண்மையின் உணர்வை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதை வளர்க்கவேண்டும் என்றும், எண்ணி யாம் சொல்லுகின்றோம்.




இது சொல்லி, அந்த உணர்வுகள் சிறிது சிறிதாக பாயும் பொழுது, எதையும் மாற்றியமைக்கும் சக்தி, தன்னாலேயே வந்துவிடுகின்றது.




எப்படித் தன்னாலேயே வந்துவிடுகின்றதென்றால், காலையில் துருவ தியானத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று நினைக்க வேண்டும்.




அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வு, நம் அணுக்களில் சிறிது இருக்க வேண்டும். அப்படி நம் அணுக்களில் அந்த உணர்வு இருந்தால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை, இது எடுத்து, அதை ப் பெருக்க ஆரம்பித்துவிடும்.




துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகிவிட்டால், நம் உடலில், எந்த நோயையும் சரி செய்துவிடும். அதை எடுப்பதற்கு சக்தி வேண்டும் என்பதற்குத்தான், உங்களுடன் பேசி, இதை இணைத்துக் கொடுக்கின்றேன்.




குணங்களைப் பற்றி ஏன் பேசுகின்றேன் என்றால், ஒரு குணத்துடன் இருக்கும் பொழுது, அந்த குணத்தைப்பற்றி சொல்லப்படும் பொழுது, அதில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகிவிட்டு விடுகின்றேன்.




இந்த உணர்வான சக்திகள் நீங்கள் எடுக்கும்பொழுது, உங்களை சீர்படுத்தும். கம்ப்யூட்டரில், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் எப்படி சீர்படுத்துகின்றானோ, அதே மாதிரி குருநாதர் கொடுத்த நிலைகளில், 20 ஆண்டுகள் அனுபவித்து, நீங்கள் தெளிவான நிலைக்கு வரவேண்டும் என்பதற்குத்தான், இதைச் செய்வது.