(ஜூன் 1995)
பொதுவாகவே, ஒருவர் நம்மை ஏமாற்ற வேண்டுமானால், ஒரு பொருள் இந்த இடத்தில் மலிவாக கிடைக்கின்றது, அங்கிருந்து பொருளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்தோம் என்றால், நல்ல லாபம் கிடைக்கும் என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும், அவருக்கு நாம் அடிபணிந்து விடுவோம். லாபம் கிடைக்கும் என்ற நிலைகளில், அவர் பின்னால் நாம் அலைந்து கொண்டிருப்போம்.
இதைப் போன்றுதான், கோவில்களில் அர்ச்சனை, அபிஷேகம் செய்தால், நமக்கு இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று சொன்னால், அடுத்த கணமே நாம் அர்ச்சனை, அபிஷேகம் என்று செய்ய ஆரம்பித்து விடுவோம்.
ஆனால் ஞானியர்கள் கூறியது என்ன? “எண்ணியது எதுவோ, அது நமக்குள் தெய்வமாகின்றது” என்று சொல்லி வைத்தனர். அதுதான் “இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி’ என்பது.
நாம் எந்த குணத்தை, இச்சை கொள்கின்றோமோ,
அது நமக்குள் சென்று, கிரியை ஆகி,
நாம் எண்ணிய குணத்தின் ஞானமாக, இந்த உடலை இயக்குவதும்,
இதன் மூலம் நமது வாழ்க்கையின் செயல்கள் எவ்வாறு நிகழ்கின்றன? என்பதின் நிலையை உணர்த்துவதற்காக, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று சொல்லி வைத்தனர்.
நமக்குத் தெய்வம் நல்லது செய்யும் என்று நம்பி, யாக வேள்விகளைச் செய்து, பல மந்திரங்களை உச்சரித்துச் செயல்படும் பொழுது, இதே போன்று, பல வேள்விகளைச் செய்து இறந்த மனிதனின் உயிரான்மா, நம் உணர்வில் சிக்குகின்றது.
மேலும் தெய்வ பக்தியை அதிகமாக வளர்த்து, இந்தத் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் உணர்வை வளர்த்து, நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தபின், நமது உயிரான்மா, அதே மந்திரத்தை ஜெபிக்கும், இன்னொருவர் கையில் சிக்கி விடுகின்றது. இதைத் தான் “கைவல்யம்” என்பது. இதன் வழி, கடைசியில் நாம் கீழான பிறவிகளுக்கே, (பாம்பு போன்ற) செல்ல நேரிடும்.
இன்று “சாதுக்கள்” என்று சொல்லிக் கொள்பவர்களும், நம்மை (மக்களை) தீமைகளில் இருந்து விடுபடச் செய்வதற்கு பதிலாக, மீன்களுக்குத் தூண்டிலில் இரையை வைத்துக் காட்டி, மீனைப் பிடித்து சமைத்துச் சாப்பிடுவது போன்று, “இந்தத் தெய்வத்தை நான் கைவல்யப்படுத்தியுள்ளேன், நான் ஆணையிட்டால் இவையெல்லாம் நடைபெறும்” என்று சொல்லி, நம்மை மெய்யுணர்வு பெறும் நிலைகளில் இருந்து தடுத்து, சாங்கிய சாஸ்திரத்தில் சிக்க வைத்துவிடுகின்றனர், இந்த நிலை நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ளது.
இதனின் நிலைகளை, எமது குருநாதர் எமக்கு சொல்லிக் கொண்டு வரும்பொழுது, “ஆண்டவன் சக்தியை நான் வைத்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்பவர்கள், தம்மை விட நீ கெட்டிக்காரனா? என்ற மனப்பான்மையில் உன்னைப் பார்ப்பார்கள்.
நீ எவ்வளவு உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தாலும், இதிலிருந்து உன்னைக் காக்கும் சக்தி வரவேண்டும். தர்மத்தின் மேல் உன்னுடைய சிந்தனைகள் இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய சக்தி உன்னிடம் இருக்க வேண்டும்.
தர்மத்தை காத்திடும் உணர்வின் சக்தியை வளர்த்துக் கொண்ட, மகரிஷிகளின் அருள் சக்தியைத் தெளிவாக தெரிந்து, அதனின் இச்சையை உனக்குள் கூட்டி, அதை உனக்குள் கிரியை ஆக்கி, அதனின் ஞானத்தின் நிலைகள் கொண்டு, வாழ்க்கையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று, எமது குருநாதர் உபதேசித்தார்.
நீ நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, மற்றவர்களுக்கு நல்லது செய்கின்றாய். ஆனால், உன்னால் நன்மை பெற்றவர், உன் மீது பற்று கொள்கின்றார். நீ நன்மைகள் செய்வது, அவர் மனதில் ஓங்கி வளர்ந்திருக்கின்றது.
அந்த நிலையில், நோயின் நிமித்தம் அவருடைய உடலை விட்டுப் பிரியும் ஆன்மா, அவர் உன்மீது பற்று கொண்டதின் காரணமாக, உன் உடலுக்குள் வந்துவிடுகின்றது. பின் அவர் எடுத்துக் கொண்ட வேதனைகள் இங்கே வந்துவிடும், என்பதையும் காண்பிக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், மந்திர ஒலிகள் கற்றுக் கொண்டவர்கள், நான் பெரியவனா, நீ பெரியவனா என்கின்ற ரீதியில் மனதில் அகந்தை கொண்டு, உன்னைப் பரீட்சித்து பார்க்கும் நிலை கொண்டு, உனக்குத் தீமைகள் செய்ய முயல்வார்கள்.
மக்களுக்கு, நன்மைகள் தானே செய்யப் போகிறோம், என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என எண்ணி, நாம் செய்யும் சேவையில், எத்தனை இடையூறுகள் இருக்கின்றன என்பதை விளக்கி, அதிலிருந்து காத்திடும் நிலையையும் காண்பிக்கின்றார், குருநாதர்.
குருநாதர் காண்பித்த அருள்ஞான வழியில், மெய்ஞான உணர்வினை வளர்த்து, தீமைகளை ஒடுக்கி, யாம் உங்களிடத்தில் அருள்ஞான வித்தினைப் பதிக்கின்றோம். உங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வித்தினை, மகரிஷிகளின் அருள் துணை கொண்டு வளர்த்திட வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தைப் பதிவு செய்தோம் என்றால், நமது உயிர், அந்த உணர்வின் சக்தி அதனை கிரியையாக மாற்றி, அதனின் ஞானத்தின் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்வாக நமக்குள் செயல்பட்டு, இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து, அருள் மகரிஷிகளின் உணர்வுகளுடன் ஒன்றச் செய்து, அந்த ஞானத்தின் வழியில் பிறவியில்லாப் பெருநிலை அடைந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நம்மை இணைக்கச் செய்யும்.

(அக்டோபர் 1995)
சூரியனின் செயலைப் போன்றே தான், மனிதருடைய உயிரின் இயக்கமும் இயங்குகின்றது.
சூரியன் தனது சுழற்சியின் பொழுது,
அணுக்களை தன்னுள் எடுத்து,
தான் சுழலும் வேகத்தில் வெப்பமாகி,
நஞ்சினைப் பிரித்துவிடுகின்றது.
இதுபோன்றே,
மனிதன் தன் உணர்வின் செயலால்,
தன் உணர்வின் அலையால்,
தீமைகளை அங்கேயே பிரித்துவிட்டு,
தனக்குள் ஒளியின் சுடராக, மாறும் நிலை பெற்றவன்.
அகஸ்தியர், அத்தகைய உணர்வின் ஆற்றலால், நமக்குள் வரும் நஞ்சினைப் பிரித்து, நஞ்சினை மாற்றிடும் உணர்வின் தன்மையைத் தமக்குள் விளைய வைத்து, இன்று துருவ மகரிஷியாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.
அகஸ்திய மாமகரிஷி பெற்ற உணர்வுகளைக் கவர்ந்து, அவரைப் பின்பற்றி சென்றவர்கள் அனைவரும், ஆறாவது அறிவின் துணைகொண்டு, ஏழாவது நிலை பெற்று, சப்தரிஷிகளாகி, இன்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் உள்ளார்கள். அந்த மகரிஷிகள் பெற்ற நிலைகளை, நாம் அனைவரும் பெறுவதற்கே, இதை உபதேசிக்கின்றோம்.
உதாரணமாக, ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால், அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். “பாவி எனக்குத் தீங்கு செய்தானே அவன் உருப்படுவானா” என்று கோபத்தின் எல்லை கடந்து, உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம். அவ்வாறு, நமக்குள் தீங்கு செய்தவனை எண்ணி, அது விளைந்து, அவன் தீங்கு செய்தான், என்று நமக்குள் பதிந்தாலோ, அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.
ஆக இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று, அவனுக்குள் புரையோடி, அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும். ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில், "பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்" என்று எண்ணினால், இது அவன் செயலாக்கங்களுக்கே, தடையாயிருக்கும்.
இப்பொழுது, நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப் பட்டுப் பிரிந்திருந்தாலும், சில நேரங்களில் புரையோடும். புரையோடும் பொழுது, சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது. எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம், வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும்பொழுது, நமது உறுப்பின் இயக்கங்களே தனி.
ஆக நண்பனாக இருக்கும் பொழுது, அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது, விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி, அது தனித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.
இதெல்லாம், இயற்கையின் நிலையின் இயக்கங்கள், மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை இங்கே உருவாக்குகின்றது. நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில், தீமையின் உணர்வுகளை, நமக்குள் பதிவு செய்யும் பொழுது, நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ, அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.
இதைப் போன்று, பற்றின் தன்மையால், தீமையே விளைகின்றது. பாசத்தாலோ, பண்பாலோ, அன்பாலோ, பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும்பொழுது, அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து, அந்த உணர்வின் வித்தாக விளைந்து, அந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து, நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.
சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே, நஞ்சினை பிளந்துவிடுவது போன்று மனிதன் தன் உணர்வின் செயலால், தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது, அதனைப் பிரித்து தனக்குள் ஒளியின் சுடராக மாற்றும் தன்மை பெற்றவன்.
கோளாக இருந்து, நட்சத்திரமானதைப் போன்று, மனிதன், தனது உணர்வின் துணையால் ஒளியின் சரீரமாக மாறி, அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து, தீமையைத் தன்னிடமிருந்து வெகுதூரத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன். இந்த ஆற்றல், மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால், விளைவதுதான்.
இதைத் தான், “மாரியம்மன்” கோவிலில் நமக்கு காண்பிக்கின்றார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுது, அது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி -- மாரி) தீமை செய்யும் நிலையாக, விளைவதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, அது நமக்குள் மாறி, தீமைகளை அகற்றும் சக்தியாக உருவெடுக்கின்றது.
ஆகவே, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைp பற்றுடன் பற்ற வேண்டும். அந்தp பற்றினை, பற்றுடன் பின்பற்றினால், நம்மை அறியாது சூழும் தீமைகளை அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும். இந்த வாழ்வில் பெறவேண்டிய, மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறச் செய்ய முடியும். ஆகவே, மெய்ஞானிகள் உரைத்த வழி எதுவோ, அதனைப் பின்பற்றி அனைவரும் “பெருவீடு பெருநிலை” அடைவதற்கு எமது ஆசிகள்.
எல்லையில்லா இந்த பேரண்டத்தில்,
ஒரு எல்லையோடு நின்றாடும் இப்பரம்பொருளில்,
வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும்,
மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே,
நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.

(டிசம்பர் 1995)
உயிரான ஈசன் இன்றி, இவ்வுடலில் ஓர் அணுவும் அசையாது, என்பதை உணர்த்தவே, "அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் பரவுவதை, சந்திரன் மறைப்பதனால் அவ்வளவாக நமக்கு பாதிப்பில்லை. இன்றைய நிலையில் (உபதேசம் செய்த 1995 வருடம்) செவ்வாய், வியாழன், இதே போன்று கேது (கேது விஷமானது) என்ற நிலையில், இதற்கு இடைப்பட்ட நிலைகளில் சூரியனின் கதிரியக்கங்கள் வெளிவருகின்றது.
ஆனாலும், அதைக் கவர்ந்து (சூரியனின் கதிரியக்கங்களை) மறைக்கும் நிலைகள் மற்ற கோள்கள் இடைப்படுவதனால், நமது பூமிக்குள் விஷத் தன்மைகள் பரவும்.
இத்தகைய விஷத்தன்மைகள் பரவி, புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது, அது நமது சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால், உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீமடைகின்றது. ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால், நமது உடல் எப்படி பலவீனமடைகின்றதோ, அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது. இது இயற்கையின் செயல்களில் ஒன்று.
ஏனென்றால், சூரியனுடைய வெப்பம், காந்தம்,
"இயக்கச்சக்தி" நமது பூமியில்,
குறைந்த அளவில் பரவப்படும் பொழுது,
மற்ற கோள்கள் உமிழ்த்தும், விஷத்தன்மைகள்
நமது பூமியில் அதிகமாக பரவுகின்றது.
இது ஒரு வகை.
விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், துருவ மகரிஷி, சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள், இத்தகைய நஞ்சுகளை அடக்கி, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
தியான வழியில் உள்ளவர்கள் அனைவரும், அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால், அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை. இதைப் போன்ற நேரங்களில், நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், அனைவரும் ஒருங்கிணைந்து, துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.
ஏனென்றால், ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு, இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நாம் விடும் மூச்சலைகளால், இந்த பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.
இந்த பூமியில் சங்கடத்தாலும், வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வின் அலைகள் பரவி படர்ந்துள்ளன. நாம் கூட்டமைப்பாக இருந்து, நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால் நமது மூச்சலைகள், காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுக பெருகுகின்றது.
ஒரு முறை செய்துவிட்டு, அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால், கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும். அதாவது, கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம், சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு, அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக, மறைந்துவிடும்.
இதைப் போன்று அல்லாது, நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, இந்த காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம், இதனின் வலு அதிகமாகின்றது. இதனால் புறத்தில் பரவி கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.
நாம் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து, நமது மூச்சலைகளை வெளிப்படுத்தும் பொழுது, அந்த அலைகள் நமது காற்று மண்டலத்தில்,
குறைந்த பட்சம் “10 மைல்” சுற்றளவிற்கு
மேலேயும், அகலமாகவும் பரவுகின்றது.
நாம் விடும் மூச்சலைகள், காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.
ஏனென்றால், ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்து, கயிறாகத் திரித்து, ஒரு கனமான பொருளைத் தூக்குவது போன்று, நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து, அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து, மூச்சலைகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது, அது இந்தக் காற்று மண்டலத்தில் பரவும்.
சூரியனுடைய கதிரியக்கங்கள் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும், நாம் வெளியிடும் மூச்சலைகள், அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக “10 மைல்” அளவுக்காவது இது பரவும்.
அப்போது, இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்கு, தீங்குகள் இல்லாத நிலைகளும், அவர்கள் சுவாசத்தில், நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன. நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.
ஆகவே நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து, உடலுக்குள் பரவச் செய்து, நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.
அவ்வாறு, அந்த சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை, மூச்சலைகளை, நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்.
நம் ஊர் மக்கள் அனைவரும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று, இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து, மகிழ்ந்து வாழச் செய்து, அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில், அனைவரும் இணைந்து வாழச் செய்வோம்.
எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி, நம் அனைவருக்கும் துணையாக இருக்கும். ஓம் ஈஸ்வரா குருதேவா.

(மே 1996)
அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச் செய்து, அந்த மகிழ்ச்சியின் தன்மையில், நமது மகிழ்ச்சியின் தன்மையை, நம்மில் வளர்த்திடும் நிலை பெற வேண்டும்.
இராமாயணத்தில் கல்யாண ராமா.... என்று பாடினார்கள். கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ, அவரே சீதையை மணக்கும் தகுதியுடைவர் என்கிற நிலையைக் காண்பித்தனர்.
ஏனெனில், காண்டீபத்தில் பொருத்தி எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது. ஆகவே, துன்புறுத்தும் உணர்வினை வென்றவர் எவரோ, அவரே சீதையைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடையவர், என்னும் நிலையைக் காண்பித்தனர்.
வீர தீரம் காட்டிய பலரும், வில்லின் வலிமையைத் தான் உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக் கூட அவர்களால் முடியவில்லை. ஆனால் இராமனோ, தீமை விளைவிக்கும் நிலைகளில் இருந்து, தீமையில்லாத நிலையை விளைவிக்கின்றான், என்பதை உணர்த்தும் பொருட்டு, இராமன் வில்லை தூக்கி நிறுத்தி, வளைத்து, முறித்து விடுகின்றான்.
அதன்பின், சீதையை இராமன் மணந்து கொள்கின்றான் எனக் காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத் தான் “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர். இவ்வாறு வளர்ந்தவர்கள்தான் மகரிஷிகள்.
அந்த மகரிஷிகள், இந்த மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி, தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள். துருவ மகரிஷியை பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் எனும் நிலையைக் காண்பித்தார்கள்.
காரம், எரிச்சலைத் தருவது என்றும், புளி கூசச் செய்வது என்றும், உப்பு உமட்டலைத் தருவது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், நாம் ஒரு கருணைக் கிழங்கை எடுத்து வேக வைத்து, கிழங்கில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, அதனுடன் காரம், புளி, உப்பு இவைகளை அளவாக இணைத்துக் குழம்பு வைத்து, சுவை மிக்கதாகச் செய்து சாப்பிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம். இதைத்தான், நாம் “கல்யாணராமன்” என்று உணர வேண்டும்.
பல கோடித் தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், அதனை, மகரிஷிகள் தமது அரவணைப்பாக, தமக்குள் சுவைமிக்க ஒளியாக, மாற்றிக் கொண்டவர்கள்.
துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களைத் தம்முள் வளர்த்திடாது, ஒளி பெறும் உணர்வினைத் தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாற்றியவர்கள். இதுதான் கல்யாணராமா என்பது.

(ஜூன் 1996)
“கடவுள் ஒருவரே” என உரைப்பார் சிலர்,
“கடவுள் பலர்” என உரைப்பார் சிலர்,
கடவுளே இல்லை” என உரைப்பார் சிலர், ஆனால் தம்
“உயிரே கடவுள்” என அறிந்தவர் மேலானவர்.
தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும், மனிதன் அவைகளை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றான். அதே போன்று, தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால், அந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகளை, நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்திடல் வேண்டும்.
மகரிஷிகள், தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது, அவைகளை செயலற்றதாக்கி, தம்மிடத்தில் தீமையின் உணர்வினை ஒடுக்கி, அதனுடைய செயலாக்கங்களை மாற்றி, தமது உணர்வினை வலிமை மிக்கதாக மாற்றுகின்றனர்.
இதே போன்று, தீமையின் உணர்வுகளை நமக்குள் ஒடுக்குகின்ற பொழுது, ஒருவன் நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும், அது, நம் உடலுக்குள், தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம் உடலில் கலக்கப்படும் பொழுது, நம் உடலில் தீமையை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும், அவைகளை நமக்குள், நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.
உதாரணமாக, உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன், சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது, அது நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக மாறுகின்றது. எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ, அந்த விஷம் ஊடுருவி, இந்த நல்ல மருந்தின் தன்மையை, உடலெங்கும் பரவச் செய்கின்றது.
நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில், மருந்தினைச் செலுத்தும் பொழுது, மருந்துடன் கலந்துள்ள விஷம்,
மருந்தினை எடுத்துச் சென்று,
உடலில் உள்ள வேதனையை உருவாக்கும்
உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு,
தன் இனத்தை உருவாக்கும் தன்மையால்,
நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி,
வேதனையை உருவாக்கும் அணுக்களை
வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது,
ஆகவே இதைப் போன்று, ஞானிகள் காண்பித்த வழியில், அருள் ஞானிகளின் உணர்வை, நம் எண்ணத்துடன் கலந்து, நாம் எத்தகைய தீமையின் உணர்வினைக் கண்டுணர்ந்தோமோ, அந்த மகரிஷியின் ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும் என இணைத்து, நம் உடலுக்குள் செலுத்திவிட்டால், அருள்ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு, நமக்குள் வலுகொண்ட நிலையாக மாறுகின்றது.